• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by சரவணா இராஜேந்திரன்

அறிவியல்: இறப்பே இல்லாத உயிரனமா ஹைட்ரா

5
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு

கடல்வாழ் உயிரினம் பற்றி ஆய்வு செய்து வந்த சிலிநாட்டைச் சேர்ந்த மேக்னஸ் என்ற பெண் ஆய்வாளர் தான் கடற்கரையில் பார்த்த ஒரு உயிரினம் குறித்து குறிப்பு ஒன்றை எழுதி இருந்தார்.
நீண்ட ஆண்டுகளாக யாருமே அந்தக் குறிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை. 1990 ஆம் ஆண்டில் அறிவியல் மாணவர் டேனியல் மார்டினஸ் அக்குறிப்பைப் படித்துக்கொண்டிருந்தார். அதில் ஹைட்ரா (Hydra) எனும் நன்னீர் வாழ் உயிரினத்துக்கு இறப்பே இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அவர், இது ஒரு கட்டுக்கதை என்று புறக்கணிக்காமல் அந்த உயிரினத்தைத் தேடிச் சென்றார்.
ஜெல்லி மீன் வகையில் ஒன்றான மெல்லிய குழல் போன்ற அமைப்பை உடலாகப் பெற்ற அந்த உயிரினத்தை மிகவும் மோசமான காலநிலைகொண்ட அர்ஜெண்டினாவின் தென் கோடிக் கடலில் கண்டுபிடித்தார். அதை ஆய்வகத்திற்குக் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தார். 1998 – இலிருந்து இருந்து இன்றுவரை அது இறக்கவே இல்லை என்பதுடன், நிறையவே இனப்பெருக்கமும் செய்தது. அவற்றில் எதுவும் இறக்கவில்லை. ஹைட்ராவைத் துண்டு துண்டாக வெட்டினாலும் ஒவ்வொரு துண்டும் உயிருடன் செயல்படக் கூடிய தன்மை கொண்டதாக மாறக் கூடியது.
நன்னீரில் அதன் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதால், இயற்கையாக அது தனக்கேற்ற சுற்றுச்சூழலில் இருக்கும்வரை அதற்கு மரணமே இல்லை,
ஹைட்ரா முதிர்ச்சி அடைவதே இல்லை. அதன் செல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. FoxO genes என்ற ஜீன்கள் தான் இவை இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.

ஏற்கனவே பல ஆண்டுகாலம் பனிக்கட்டியில் உறைநிலையில் இருந்தாலும் பனிக்கட்டி கரைந்ததும் உயிர்பெறும் தவளைகளின் புரதங்களில் இருந்து, மனிதர்களை உறை நிலைக்குக் கொண்டு சென்று விண்வெளியில் நீண்ட தூரப் பயணத்திற்குப் பயன்படுத்தும் ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் மரணமே இல்லாமல் வாழும் ஹைட்ரா என்ற ஜெல்லிவகை மீனின் புதிய செல்களைத் தொடர்ந்து உருவாக்கும் புரதத்தையும் கண்டுபிடித்துவிட்டால் எதிர்காலத்தில் இப்பெருவெளி எங்கும் மனிதர்கள் மரணமடையாமல் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களால் இந்த மானுடத்திற்கு என்ன பயன்? என்பது தான் கேள்விக்குறியாகும்.

19
அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?7th December 2024
பிஞ்சு நூல் அறிமுகம்7th December 2024பிஞ்சு நூல் அறிமுகம்

மற்ற படைப்புகள்

2012_july_JULY-2012-Pages-29
ஜூலைபொது அறிவு
25th June 2012 by ஆசிரியர்

பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா

Read More
17
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2024
5th March 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம் : பள்ளி பிள்ளைகள் மூலம் அரசியல் பிரச்சாரம்! எச்சரிக்கை

Read More
2023_June_7
அறிவியல்ஜூன் 2023
10th June 2023 by ஆசிரியர்

புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?

Read More
4
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
3rd October 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம்: பள்ளிகளில் பேச்சாளர்கள் தகுதிகள் என்ன ? எவை?

Read More
2024எண்ணிப்பார் 7 வேறுபாடுஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More
15
ஏப்ரல் 2024கதை
2nd April 2024 by கவின்

சூனியமா? ஹார்மோனா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p