• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by - முனைவர் முரசு நெடுமாறன்

அச்சம் என்பதை அறியாதார்

WhatsApp Image 2024-01-09 at 13.17.04 (1)
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025
பெரியார்  என்பவர்  ஈவெரா
பெயரை  எவரும்  சொல்வதில்லை
அறிஞர்  முதலாய்  ஆண்டிவரை
அனைவரும் மதிக்கும்  நம்பெரியார்!
எதனால்  பெரியார்  என்றவரை
ஏற்றிப்  போற்றிச்  சொல்கின்றார்?
அதனைக்  கொஞ்சம்  அறிந்தாலே
“ஆம்அவர்  பெரியார்”  எனக்கொள்வர்!
தன்னலம்  சிறிதும்  கொள்ளாமல்
தடைகள்  எதற்கும்  தளராமல்
முன்னால்  எதிர்ப்போர்  நின்றாலும்
முன்போய்  நின்று  முழங்கியவர்!
அச்சம்  என்பதை  அறியாதார்
அயர்ச்சி இறுதி  வரையில்லை
துச்சம்  என்றே  எதிர்ப்புகளைத்
துரத்தி  விட்ட மாவீரர்!
மூடக்  கொள்கை  எதுவெனினும்
முன்போய்  நின்று  சாடியவர்
தேடித்  தேடிப்  புதுவழிகள்
செப்பி  நல்வழி  காட்டியவர்!
அறிவியல்  வழியில்  சிந்திக்க
அறிவுரை  சொல்லி  ஊக்கியவர்
தரமில்  லாத  எதனையுமே
தள்ளி ஒழிக்கச்  சொல்லியவர்!
மானமும்  அறிவும்  மனிதர்க்கு
மங்கா  அழகென  முழங்கியவர்
வீணாம்  மூட  நம்பிக்கை
வீழ்த்தி  வெற்றி  காண்கவென்றார்!
எதுநம்  பண்பென உணர்ந்திடவே
எடுத்துச்  சொல்லி  விளக்கியவர்’
புதுவழி  அதனால்  நாம்உணர்ந்து
பொலிவு  பெற்றோம்;  புகழ்பெற்றோம்!
பெரியார்  செய்த  தொண்டால்தான்
பெரும்பெரும்  வெற்றிகள் நாம்கண்டோம்;
உரிமை  வாழ்வு  நாம்  பெற்றோம்
உண்மை  விளங்கி  ஓங்கி நின்றோம்.
பெரியார்  சொன்னதைச்  சிந்திப்போம்;
பெரியார்  வழியில்  நாம்நடப்போம்!
தெரிவோம்  உண்மை  தெளிவுறுவோம்;
தீதுஅணு  காமல்  ஓங்கிடுவோம்!
– முனைவர் முரசு நெடுமாறன்
8
சிறார் பாடல்: வாடும் வானம்சிறார் பாடல்: வாடும் வானம்3rd March 2025
சுனிதாவும்,வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸூம்5th April 2025சுனிதாவும்,வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸூம்

மற்ற படைப்புகள்

2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்
4th April 2022 by ஆசிரியர்

வெங்காயம்

Read More
2022_june_1
ஜூன் 2022பாடல்கள்
30th May 2022 by ஆசிரியர்

தலைகவசம்

Read More
2019_nov_v3
நவம்பர் 2019பாடல்கள்
26th October 2019 by ஆசிரியர்

மழையே மழையே வா! வா! வா!

Read More
2022_feb_v27
பாடல்கள்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

எலி ராஜ்யம்!

Read More
2019_oct_v24
அக்டோபர் 2019பாடல்கள்
3rd October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p