• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by இரா. சாந்தகுமார்

பித்தா பிறைசூடி? நிலவில் மனிதன் காலடி?

8
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.
“அப்படியா..? கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன் அரசு!” என்றார் தாயன்பன்.
“தமிழ் செய்யுள் நடத்தின தமிழாசிரியர், ‘பித்தா பிறைசூடி..’னு
ஆரம்பிக்கற “ஏழாம் திருமுறைச் செய்யுளைச் சொல்லி, பிறை நிலாவைத் தலையில் சிவபெருமான் சூடி இருப்பதாக அதற்கு விளக்கமும் சொன்னார்” என்ற மகனிடம், “இதிலே உனக்கு என்ன அரசு குழப்பம்?” எனக் கேட்டார் அரசுவின் அப்பா தாயன்பன்.
“தமிழ் ஆசிரியர் போன பிறகு வந்த அறிவியல் ஆசிரியர், வானத்தில் உள்ள கோள்களைப் பற்றிப் பாடம் நடத்தினார். நிலவு ஒரு கோள் அல்ல; துணைக்கோள் என்றும், அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சென்ற மனிதர்கள் நிலவில் இறங்கினார்கள் என்று கூறினார்.

அப்படியானால் அந்த மனிதர்கள் சிவபெருமான் தலைமீதா கால் வைத்தார்கள்? இதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றான் அரசு.
“இதில் வீணாகக் குழப்பிக் கொள்ள எதுவுமில்லை அரசு… தமிழாசிரியர் சொன்ன ‘பித்தா பிறைசூடி…’ என்பது புராண மூடநம்பிக்கைக் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட செய்யுள். அது தேர்வில் மதிப்பெண் வாங்க மட்டுமே உதவும். ஆனால் நிலவில் மனிதர்கள் கால் பதித்ததாக அறிவியல் ஆசிரியர் சொன்னது உண்மையில் நடந்தேறிய நிகழ்வு. அறிவியல் பூர்வமான நிகழ்வு; இது மதிப்பெண் வாங்க மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருக்க வேண்டிய செய்தி.

இது போன்ற பல கதைகளையும் கற்பனைகளையும் நீதான் கார்ட்டூன் சேனலில் பார்க்கிறாயே! அப்படித்தான் இதுவும் ஒரு கதை! அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட செய்தியை எப்போதும் பயன்படும் வகையில் மனதில் நிறுத்திக் கொள்வதோடு, பிறரிடமும் பகிர்ந்து கொள்” என்று தன் மகனுக்கு தாயன்பன் விளக்கினார்.
“என் குழப்பம் தீர்ந்தது அப்பா. மிக்க நன்றி” என்றான் அரசு தன் தந்தையிடம்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்று குறளை வள்ளுவர் கூறியுள்ளாரே! இதையும் மனதில் வைத்துக் கொள்! என்றார் தாயன்பன்.<

8
திருக்குறள் அரசியல் - பொருட்பால்திருக்குறள் அரசியல் - பொருட்பால்5th April 2025
அறிவின் விரிவு - 9 : தாத்தா பாட்டிகளுக்கு உதவும் ரோபோ!5th April 2025அறிவின் விரிவு - 9 : தாத்தா பாட்டிகளுக்கு உதவும் ரோபோ!

மற்ற படைப்புகள்

2021_may_m15
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

வழி சொல்லுங்களேன்!

Read More
2022_nov_42
எண்ணிப்பார் 7 வேறுபாடுநவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
9th November 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
8
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025மார்ச் 2025
28th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு: அடேய் ஈ404!

Read More
2021_jan_v44
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

வாட்ஸ்அப்-பிலிருந்து..

Read More
2023_June_28
ஜூன் 2023பிஞ்சுகள் பக்கம்
10th June 2023 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_jan_v36
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
5th January 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : சுரினாம் (SURINAME)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p