இளநீருக்குள் தண்ணீர் எப்படிப் போனது?
| க |
ோடைக்காலம் துவங்கிய உடனேயே எங்கு பார்த்தாலும் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் வெள்ளரி போன்றவை கடைகளில் அதிகமாக விற்பதைப் பார்க்கலாம். இவை தாகம் தீர்க்கும் நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் ஆகும்.
ஆனால், எல்லாக் காலத்திலும் நமது தாகம் தீர்த்து உடனடி ஊட்டச் சத்துகளை மருத்துவமனைகளில் ஏற்றப்படும் குளுகோஸ் போன்று எப்போதும் கிடையாது அதுமட்டுமல்லாமல் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர். அதுமட்டுமல்லாமல் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய், தேங்காய் நெய் ஆகியவையும் அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பங்கு வகிக்கின்றன.
சரி, தென்னங்காய்க்குள் இளநீர் எப்படிச் செல்கிறது என்று பார்க்கலாமா?
தென்னங்காய்க்குள் இளநீர் நிரம்புவது ஒரு வியக்கத்தக்க இயற்கைச் செயல்பாடு ஆகும். தென்னை மரத்தின் வேர்கள் மண்ணில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, தண்டு வழியாக மேலே கொண்டு செல்கின்றன. இந்தத் தண்ணீர் தென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது.
தென்னம்பூக்களில் காய்கள் வளரத் தொடங்குகின்றன. இந்த இளம் காய்களின் வளர்ச்சிக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. தென்னை மரம் வேர்கள் மூலம் உறிஞ்சிய தண்ணீரை, சிறப்புத் தந்துகிகள் மூலம் காயின் உட்புறத்திற்கு அனுப்புகிறது.
ஆரம்பத்தில், இளநீர் தெளிவான திரவமாக இருக்கும். காய் முதிர்ச்சியடையும் போது, இந்தத் திரவம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி தேங்காயாக மாறத் தொடங்குகிறது. இளநீரில் உள்ள இனிப்புச் சுவை, தென்னை மரத்தால் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைச் சத்து தண்ணீரில் கலப்பதன் மூலம் உருவாகிறது.
சுருக்கமாகச் சொன்னால், இளநீருக்குள் தண்ணீர் வருவது தென்னை மரத்தின் வேர் உறிஞ்சுதல் மற்றும் தாவரக் கடத்தல் (translocation) ஆகிய இயற்கையான செயல்முறைகளில் மூலம் நிகழ்கிறது. மரம் மண்ணிலிருந்து உறிஞ்சும் நீர், காயின் வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், அதனுள் கொண்டு செல்லப்படுகிறது.
இளநீர் கோடையில் தாகத்தைத் தணிப்பதுமல்லாமல் உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்தையும் கொண்டுள்ளது.
வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு காயில் அதிகத் தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறும் தேங்காயில் குறைந்த அளவில் நீர் உள்ளது.
தென்னை மரங்கள் பொதுவாக வெப்ப மண்டலப் பகுதிகளிலும், பரவலாக உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் காணப்படுகின்றன.
எக்ஸோகார்ப், மீசோகார்ப் மற்றும் எண்டோகார்ப் எனப்படும் மூன்று அடுக்குகளைக் கொண்டது தேங்காய்.
எக்ஸோகார்ப் என்பது தேங்காயின் வெளிப்புற அடுக்கு. இது பச்சை நிறத்திலும் மென்மையாகவும் இருக்கும். பச்சை அடுக்கின் கீழ் உள்ள நார் நிறைந்த பகுதி மீசோகார்ப் என்று அழைக்கப்படுகிறது. எண்டோகார்ப் என்பது உள் மய்யப்பகுதி. எண்டோகார்ப் உள்ளே உள்ள வெள்ளை வழுக்கையைப் பாதுகாக்கிறது.
மகரந்தச் சேர்க்கை நடைபெற்று சூலுற்ற எண்டோகார்ப் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று, வழுக்கை. இது எண்டோஸ்பெர்ம் என்று அழைக்கப்படுகிறது. இளம் தேங்காய்களில் மென்மையாகவும் ‘ஜெல்லி’ போலவும் இருக்கும். இந்த வழுக்கை, தேங்காய் முதிர்ச்சியடையும் போது கடினமடைகிறது.
இரண்டாவது, உள்ளே இருக்கும் நீர். தேங்காய் வளரும்போது இயற்கையாகவே தண்ணீர் உருவாகிறது.
அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்பத் தகவல் மய்யத்தின் ஆய்வின்படி, தேங்காயில் உள்ள நீர் ஒரு வடிகட்டப்பட்ட திரவமாகும்.
மரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு (தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துக்களைக் கொண்டு செல்லும் அமைப்பு) மூலம், வேர்களில் இருந்து நீர் தேங்காய்க்குச் செல்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக மரத்தில் உள்ள xylem நாளங்கள் நீர் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தென்னை மரத்தின் வேர்கள், தரையில் இருந்து பூமிக்குள் சுமார் 1 முதல் 5 மீட்டர் ஆழம் வரை நீண்டுள்ளன. இந்த வேர்கள், சுற்றியுள்ள மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்த நீர் அதன் தண்டு வழியாக மேல்நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக தேங்காயை அடைகிறது.
தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு இந்த தண்ணீரைச் சேமிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த இளநீர் முதிர்ச்சியடையும் போது தேங்காயை உருவாக்குகிறது.
இளநீரில் சுமார் 95 சதவிகிதம் தண்ணீர் உள்ளது, அதனால்தான் இது உடலை நீரேற்றம் செய்யும் ஓர் அதிசயத் திரவமாகக் கருதப்படுகிறது.
மீதமுள்ள 5 சதவிகித இளநீரில் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன.
அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் போன்ற புரதங்கள், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் தண்ணீருக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன. அத்துடன் இதில் வைட்டமின் சி, பி ஆகியன உள்ளன. ஒரு தேங்காயில் உள்ள நீரின் அளவையும் தரத்தையும் பல காரணிகள் பாதிக்கின்றன.
அவற்றில் ஒன்று, தேங்காயின் வயது. ஆறு முதல் எட்டு மாதங்கள் வயதுடைய தேங்காய்கள் இளநீராகக் கருதப்படுகின்றன. அவற்றில் 300 மில்லி முதல் ஒரு லிட்டர் தண்ணீர் வரை உள்ளது.
முதிர்ந்த தேங்காய்கள், அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை, குறைவான தண்ணீரைக் கொண்டுள்ளன. எண்டோஸ்பெர்ம் அதாவது உள்ளே இருக்கும் வழுக்கை தண்ணீரை உறிஞ்சுவதால் அவை குறைவான நீரைக் கொண்டிருக்கின்றன.
மழைப்பொழிவும் இதில் பங்கு வகிக்கிறது. அதிக மழை என்றால் அதிக நீர், தேங்காயை அடைகிறது. வறண்ட பகுதியில் தென்னை மரங்கள் வளரும்போது, குறைவான நீர் தேங்காயை அடைவதால் அதற்குள் குறைந்த நீரே இருக்கும்.
கனிம வளம் நிறைந்த மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் மிக உயர்ந்த தரமான, ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைப் பெறுகின்றன.
மண் கனிம வளம் நிறைந்ததாக இல்லாவிட்டாலோ, வேர்களில் இருந்து காய்களுக்கு ஊட்டச் சத்துக்களை எடுத்துச் செல்ல முடியாவிட்டாலோ நீரின் தரம் குறைவாக இருக்கும்.
ஆரோக்கியமற்ற, நோயுற்ற மரங்கள் சிறிய காய்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றிலும் மிகக் குறைந்த அளவு நீர் மட்டுமே இருக்கும்.
மண் பரிசோதனை மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலையான விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தென்னை மரங்களில் ஊட்டச் சத்துக்களைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் தரமான இளநீரை உற்பத்தி செய்யலாம்.<