மீன் தொட்டி
| ம |
ீன் தொட்டி என்பது மீன்களை வளர்க்கப் பயன்படும் ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் தொட்டி ஆகும். வீட்டுக்கு அழகு சேர்க்கும் அறைகளில் பிரதானமானது வரவேற்பறை. அதில் அழகான ஓவியங்கள், பூச்செடிகள் இன்னும் கலைநயம் மிக்க பல பொருட்களை வைக்கலாம். அதில் ஒன்றுதான் மீன் தொட்டி. அதில் பல வண்ண, வண்ண மீன்களை வளர்க்கும் போது கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் காண்பவர்கள் கண்களை கவர்வதாகவும் இருக்கும். இந்தகைய மீன் தொட்டியை ஆங்கில எழுத்து உதவியுடன் எவ்வாறு வரையலாம் என்பதை காணலாம். இதற்கு தேவையான ஆங்கில எழுத்துகள் C, D மற்றும் O வாங்க வரையலாம்.
C எழுத்தை எழுதவும்.
C எழுத்தை ஒட்டியவாறு D எழுத்தை எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு Dன் முன் பகுதியில் C எழுத்தை சற்றே பெரிதாக எழுதவும்.
வளைவு கோடு கொண்டு படத்தில் காண்பது போல் வரைந்து கொள்ளவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு படத்தில் காண்பது போல் O எழுத்தை எழுதவும். பின்னர் மீனின் துடுப்புப் பகுதியை வரையவும்.
இப்பொழுது மீனுக்கு தேவையான கண், வாய் துடுப்புகளைப் படத்தில் காண்பது போல் வரையவும்.
அழகான மீனைச் சுற்றிலும் படத்தில் காண்பது போல் மீன் தொட்டி வரைந்து, வண்ணம் தீட்டி மகிழுங்கள்.