• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மனிதரையும் விலங்குகளையும் பிரிப்பது எது? எப்படி ? ஏன்?

Uncategorised
ப

ரிணாம வளர்ச்சியில் மனிதர்களும். மனிதக் குரங்குகளும் ஒரே பாதையில் தோன்றிப் பிரிந்தவை. எது நம்மைப் பிரிக்கிறது என்று தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுடன் உரையாட சைகை மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதக் குரங்குகள் சைகை மொழியைக் கற்றுக் கொண்டு, மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டன. ஆனால், அவற்றால் எந்தக் கேள்வியையும் சொந்தமாக எழுப்ப முடியவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

சான்பிரான்சிஸ்கோ உயிர்காட்சி சாலையில் இருந்த கோகோ (KoKo) என்ற மனிதக் குரங்கு (04.07.1971 – 19.06.2018) 1,000 சைகைகளையும், 2000 ஆங்கில வார்த்தைகளைக் கேட்டும் புரிந்து கொண்டது. தனக்கு விருப்பமான பூனைக் குட்டியை அழைத்து வரச் சொல்லி அதனால் சொல்ல முடிந்தது. அதன் வருத்ததையும் கோபத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதேபோல அண்மையில் மறைந்த (28.10.1980 – 18.03.2025) கான்ஸி (Kanzi) என்ற போனோபோ மனிதக் குரங்கு, தீ, மஸ்க்மெலோஸ் போன்ற வற்றைக் குறிப்பிடப் பழகியிருந்தது.

ஆனால் அவற்றால், மனிதர்களைப் போல தானாகக் கேள்வி கேட்க முடியவில்லை. ஏன் எதற்கு எப்படி என்று அறிய விரும்பும் ஆர்வம் அவற்றுக்கு உண்டா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

சிரிப்புதான் மனிதனின் தனித் தன்மையான குணம் என்பார்கள். மனிதக் குரங்கு வகைகள்  சிரிப்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். எனவே கேள்வி கேட்கும் அறிவுதான் மனிதர்களையும்  மற்ற விலங்குகளையும் பிரிக்கும் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எதையும் கேள்வி கேட்டு உண்மையென்றால் ஏற்பதுதான் பகுத்தறிவு. அதைத் தான் சாக்ரடீஸ், வள்ளுவர் முதல் நம் பெரியார் தாத்தா வரை சொன்னார்கள்.

நாம் மனிதராக இருக்கிறோம் என்பதன் அடையாளமே கேள்வி கேட்டு அறிய விரும்பும் அறிவுதான். அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாமா?<

5
மீன் தொட்டி2nd July 2025
குழந்தைகளின் சாட்சி2nd July 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
29th November 2025 by Periyar Pinju

Mind your language

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

மீன் தொட்டி

Read More
37
Uncategorised
7th December 2024 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

பழகுமுகாம் கற்றுத்தரும் பாடம் என்ன?

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

முந்திரிப்பழம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p