விண்மீன்கள்
சின்னஞ் சிறிய விண்மீன்கள்
சிதறிச் சிரிக்கும் வான்வெளியில்
மின்னும் வைரம் போல் அழகு
மலரும் முல்லை பூ வழகு!
வானில் கோலம் வரைந்திடவே
வைத்த சின்னப் புள்ளிகளோ
வானப் பெண்ணின் புன்னகையோ
வைரக் குவியல் சிதறியதோ!
நீல வானச் சித்திரமோ
நெஞ்சைக் கவரும் அற்புதமோ
காலம் வரைந்த ஓவியமோ
கண்ணைப் பறிக்கும் நாடகமோ
வளர்தல் தேய்தல் இல்லாத
வானக் கடலின் முத்துகளோ
உள்ளம் கவரும் பூச்சரமோ
உயர்ந்த வானப் பொக்கிசமோ!!
– ஆ.சு.மாரியப்பன்,
புதுக்கோட்டை