• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

முந்திரிப்பழம்

Uncategorised
ம

ுந்திரி மரத்தின் பூர்வீகம் தென் அமெரிக்கா ஆகும். வெப்ப மண்டல நாடுகளில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. முந்திரிப் பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து மரத்திலேயே பழுக்கும் தன்மையுடையது. பழங்கள் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். முந்திரிப்பழம் இனிப்பாக இருப்பதுடன் சுவைக்கும்போது இனிய வாசனையையும் தரும். இப்பழத்தின் தோல் மிகவும் மெல்லியதாகவும் இதன் சதைப்பகுதி அதிகமான சாறு நிறைந்ததாகவும் இருக்கும். பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும். ஆனால், முந்திரிப்பழத்தின் கொட்டையானது முந்திரிப் பழத்திற்கு வெளியே அமைந்திருக்கும்.

முந்திரிக்கொட்டை மிகவும் சுவையாக இருக்கும். இதை ‘கப்பல் வித்தான் கொட்டை’ என்றும் கூறுவர். வணிகத்திற்காக வந்த வெளிநாட்டவர் இதன் சுவையால் ஈர்க்கப்பட்டு, கப்பலை விற்று முந்திரிப் பருப்பு உண்டதாகக் கூறுவர். இப்பேர்ப்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த முந்திரிப் பழத்தை நாம் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் எவ்வாறு எளிமையாக வரையலாம் என்பதைக் காண்போம்.

இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள்:

O, U, C மற்றும் D.

வாங்க, வரையலாம்.

படத்தில் காண்பது போல் ‘O’ எழுத்தை எழுதவும்.

‘O’ எழுத்தின் மேற்பகுதியில்  ‘U’ எழுத்தைப் படத்தில் காண்பதுபோல் தலைகீழாக எழுதவும்.

‘U’ எழுத்தின் இடது மற்றும் வலது புறத்தில் வளைவு கோடு கொண்டு படத்தில் காட்டியபடி இணைக்கவும்.

தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு ‘O’ எழுத்தின் அடிப்பகுதியில் ‘C’ எழுத்தை எழுதவும்.

‘C’ எழுத்தின் வலது புறத்தில் ‘D’ எழுத்தைப் படத்தில் காட்டியபடி எழுதவும்.

தேவையற்ற கோட்டை அழித்துவிடவும். இப்பொழுது முந்திரிப்பழத்தின் ஒரு பகுதி உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

முந்திரிப் பழத்தின் காம்புப் பகுதியில் இலைகளை, வரைந்து கொள்ளவும்.

வண்ணம் தீட்டி மகிழுங்கள்.<

 

9
மூவரும் கைது2nd July 2025
சின்னக்கைச் சித்திரம்2nd July 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
20th December 2025 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
Uncategorised
20th December 2025 by Periyar Pinju

பிழைகள் 12 வகை மட்டுமே

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

டிக் டிக் டிக் அடிக்குமா ?

Read More
9
Uncategorisedஜுலை,2025பிஞ்சு 2025புதிர்கள்
2nd July 2025 by Periyar Pinju

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
Uncategorised
20th December 2025 by Periyar Pinju

நிலாவையும் குப்பையாக்கி விட்டோமா !

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

இந்தியாவின் உயரமான குடும்பம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p