ஓவியர்
கண்ணில் காணும் காட்சியெல்லாம்
கவரும் ஓவியம் ஆக்கிடுவார்!
வண்ணம் கலந்தே ஓவியத்தை
வரைவார் விராலால் ஏட்டினிலே!
தந்தை பெரியார் பொன்னுருவை
தலைவர் கலைஞர் தோற்றத்தை
சிந்தை கவரும் சித்திரமாய்
தீட்டி மகிழ்வார் ஓவியரே!
பூமியின் இயற்கைப் பேரழகை
பூக்களின் அழகுப் புன்னகையை
மாமரம் நிறைந்த தோப்புகளை
மண்ணில் பாயும் நதியழகை
நீந்தும் வட்ட முழுநிலவை
நிறைந்த தோப்புகயை
வான வீதி நீலத்தை
வண்ணங் குழைதே வரைந்திடுவார்!
கூவிடும் சேவலை மாடுகளை
குதூகலப் பெண்ணைப் படைத்திடுவார்!
ஓவியர் வரையும் கலைஞர்க்கோ
உன்னத விரல்கள் மூலதனம்!!<
– ஆ.சு.மாரியப்பன்,
புதுக்கோட்டை