கற்போம் ! கற்பிப்போம்!!

பிரணிக்கா : வணக்கம் மனோரிக்கா அக்கா எப்படி இருக்கீங்க?
மனோரிக்கா: நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
பிரணிக்கா : இந்த லீவுல நீங்க என்ன யூஸ்ஃபுல்லா பண்ணினீங்க?
மனோரிக்கா: நானா…? இந்த லீவுல பெரியார் எழுதின ஒரு புத்தகத்தைப் படிச்சேன்.
பிரணிக்கா : அந்த பெரியார் புக் பத்தி எனக்குக் கொஞ்சம் சொல்லித் தர முடியுமா?
மனோரிக்கா: நான் படிச்ச புத்தகத்தோட பேர் ‘பெண் ஏன் அடிமையானாள்.?’
இந்தப் புத்தகம் பெரியார் அவங்களால எழுதப்பட்டது. அவர் ஒரு சமூக சீர்திருத்தப் போராளி. இந்தப் புத்தகம் 1933 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. பெண்கள் ஏன் ஆண்களுக்கு அடிமை ஆனாங்கங்கிறதைப் பத்தி சமூக ரீதியாக ஆராயக் கூடிய புத்தகம்தான் இது. இந்தப் புத்தகத்துல பெண்களுடைய அடிமைத்தனம், சமத்துவமின்மை, சுயமரியாதை பற்றி எழுதி இருக்காரு. ஏன்னா அந்தக் காலத்தில் பெண்கள் கல்யாணம் ஆகி விதவையா இருந்த வயசு பார்த்தீங்கன்னா… அஞ்சு, ஆறு வயசுப் பெண்கள் எல்லாம் விதவைகளா இருந்து இருக்காங்க. உலகமே என்னன்னு தெரியாத வயசுல கல்யாணம் ஆகி விதவைகளா இருந்து இருக்காங்க. இங்கே ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும், இப்படித்தான் பேசணும், இப்படித்தான் டிரஸ் பண்ணணும், இவங்களத் தான் கல்யாணம் பண்ணணுங்கற தடைகளை உடைத்தெறிந்து உலகம்னா என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்தப் புத்தகத்தை எழுதி இருக்காங்க. இது சமுதாயத்துல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கேள்விப்பட்டேன்.
பிரணிக்கா : ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் புத்தகத்தில் உள்ள செய்திகளை நான் உங்களிடமிருந்து நிறைய கத்துக்கிட்டேன். நன்றி அக்கா!
மனோரிக்கா: நான் இப்ப இந்தப் புத்தகத்தைப் படிச்சதாலே உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். இதே மாதிரி நீங்களும் தந்தை பெரியாரைப் பத்தியும் அண்ணல் அம்பேத்கரைப் பத்தியும் காரல் மார்க்ஸைப் பத்தியும் நீங்க உங்களுக்குப் பிடிச்ச தலைவர்களைப் படிச்சி மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க நன்றி.
பிஞ்சுகள் பிரணிக்காவும், மனோரிக்காவும் காணொளியாக இதனைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அறிவார்ந்த இத்தகை பதிவுகளை நாமும் ஆதரிப்போம்! பகிர்வோம்!