ஓவியம் வரையலாம், வாங்க
பெரியார் பிஞ்சுகளே,
இந்த முறை நாம் வரையப் போகும் படம் குழந்தை இழு வண்டி. குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல வசதியாகவும், குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு போகாமல் வண்டியில் வைத்து அழைத்து செல்லவும் வசதியாக இருக்கும் இந்தக் குழந்தை இழு வண்டியை எவ்வாறு ஆங்கில எழுத்து உதவியுடன் வரையலாம் என்பதைக் காணலாம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் A மற்றும் D வாங்க வரையலாம்.
A எழுத்தைத் தலைகீழாக எழுதவேண்டும்.
A-இன் மேற்பகுதியில் படத்தில் காண்பதுபோல் படுக்கைக் கோடு வரையவும்.
A-இன் வலது புறத்தில் D எழுத்தை எழுதவும்
தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு Dஇன் உட்பகுதியில் படத்தில் காண்பதுபோல் வரையவும்.
தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு கைப்பிடியை வரையவும்
படத்தில் காண்பதுபோல் சக்கரம் வரைந்துகொள்ளவும்.
படத்தில் காண்பதுபோல் குழந்தையை வரைந்துகொள்ளவும்.<
