புத்தக அறிமுகம்
நூல் பெயர்: கைக்குத்திக் கல் சொன்ன கதை
ஆசிரியர்: நீதிமணி
பக்கங்கள்: 24 | விலை: ரூ.70.00
கிடைக்குமிடம்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், நுங்கம்பாக்கம், சென்னை.
அலைபேசி: 7550237005
குழந்தைகளே! உங்கள் எல்லோருக்கும் புத்தகம் படிக்கப் பிடிக்கும்தானே? அதிலும் கதைப் புத்தகம் ரொம்பப் பிடிக்கும் இல்லையா? ஒரு கல் உங்களுக்குக் கதை சொன்னால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு கதைதான் “கைக்குத்திக் கல் சொன்ன கதை!”
நான்கு கால் விலங்காக நடந்த மனிதன் நாளடைவில் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கினான்? அந்த மாற்றத்தின் காரணமாக பல அதிசயங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் இந்தப் புத்தகம் சொல்கிறது.
‘உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட மனிதன் அதற்காகச் செய்த செயல்கள் என்னென்ன?’, ‘விவசாயத்தின் தோற்றம் எப்போது நடந்தது?’, ‘மனிதன் எப்படிப் பேசத் தொடங்கினான்?’ ஆகிய கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் இப்புத்தகம் கிடைக்கும். tntextbooksonline.com இணைய தளத்திலும் இதை வாங்க முடியும்.<
