• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

“நடந்த கதை”

Uncategorised

குழந்தைகள் இலக்கியத்திற்கான “பால சாகித்ய புரஸ்கார் விருது” வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் பிஞ்சு இதழில் எழுதி வந்த “நடந்த கதை” தொடர் இப்போது மீண்டும் தொடர்கிறது. தொடரில் முன்புவெளி வந்த கதையின் சுருக்கம் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

த

ந்தின்னா என்னம்மா?” செழியன் தன் அம்மாவிடம் கேட்டான்.

படித்துகொண்டிருந்த அம்மா, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, தன் அருகில் இருந்த நாற்காலியில் செழியனை உட்காரச் சொன்னார்.

“ஒருத்தர் அவங்க ஊர்ல இருக்கிற அஞ்சல் நிலையத்துக்குப் போய் வெளியூர்ல இருக்கிறவங்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியைக் கொடுப்பாங்க. அவங்க அங்கே இருந்து சம்பந்தப்பட்ட மனிதர் இருக்கிற அஞ்சல் நிலையத்துக்குத் தந்தி மூலமா அந்தச் செய்தியை அனுப்புவாங்க. அங்கே இருக்கிற போஸ்ட்மேன் அந்தச் சம்பந்தப்பட்டவர்கிட்டன் போய் கொடுப்பாரு”

“ஓ! தந்தி எப்படி அனுப்புவாங்க”

“இங்கே. இதைப் பற்றி விரிவா, ஒரு வீடியோ இருக்கு… பாரு” என்று தன் மொபைலில் இணையத்தில் உள்ள வீடியோவைக் காட்டினார் அம்மா.

“செய்தியைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதுதான் தந்தி, இல்லையாம்மா?”

“அப்படி சாதாரணமா சொல்லிட முடியாது செழியா!. ஒரு தந்திதான் பெரிய சமூகப் புரட்சியின் வெற்றிக்குக் காரணமா இருந்துச்சு”

“அப்படியா! யாருக்கு வந்த தந்தி?”

“சரியா நூறு ஆண்டுக்கு முன்னால், ஏப்ரல் 12ஆம் தேதி கேரளாவில் இருந்து குரூர் நீலகண்டன் நம்பூதிரி என்பவர் பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்புனாரு வைக்கம் போராட்டத்துக்கு நீங்க வந்துதான் ஆகணும் உடனே வாங்கன்னு அந்தத் தந்தியில் சொல்லியிருந்தாரு”

“வைக்கம்ங்கிறது போராட்டம் பேரா? ஊர் பேரா?” அம்மா சிரித்துக்கொண்டே செழியளின் தலையைத் தட்டிக் கொடுத்தார்.

“ஹா… ஹா..! நல்ல கேள்விதான் செழிய… வைக்கம் என்ற ஊர்ல நடந்த போராட்டம். அதனால் அதை வைக்கம் போராட்டம்னு சொல்வாங்க”

“அங்கே எதுக்காகப் போராட்டம் நடந்துச்சு?”

”கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துல இருக்குற ஒரு ஊர் தான் வைக்கம். அங்க, மகாதேவன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள்ல சில குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்தவங்க நடக்கக் கூடாதுன்னு தடை இருந்துச்சு. அதை மீறி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். அதுல கலந்துகொள்ளச் சொல்லித் தான் பெரியாருக்குத் தந்தி அனுப்பியிருந்தாரு நீலகண்டன் நம்பூதிரி.”

“வைக்கத்தில் உள்ள குறிப்பிட்ட தெருவுக்குள்ள புலையர், ஈழவர், தீயர் போன்ற ஜாதியால் இந்தத் தடை உத்தரவு கொஞ்சம்கூட நியாயம்

ஒடுக்கப்பட்டவர்கள் போவதற்குத் இருக்குன்னு சொன்னீங்க, இல்லையா?”

“ஆமா… அதுதானே பிரச்சனையின் தொடக்கம்”

“அப்ப, அங்க நீதிமன்றம், ஆட்சி செய்தவங்க எல்லாம் இதுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லையா?”

“நல்ல கேள்விதான் செழியா… சில விஷயங்கள் பழைய பழக்க வழக்கம்னு அப்படியே கண்டுக்காம விட்டுடுவாங்க இல்லையா… அதுபோலத்தான் இதுவும்”

“புரியற மாதிரி சொல்லுங்கம்மா?”

“வைக்கம் உள்ளிட்ட பகுதிகள் திருவிதாங்கூர் மகாராஜா ஆளுமைக்கு உட்பட்டு இருந்துச்சு. தெருக்கள்ல நடக்கக்கூடாது என்ற தீண்டாமையை எதிர்க்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்யுது. இதை தெரிந்துகொண்ட அதிகாரிங்க பார்ப்பனர்கள் மூலமா நீதிமன்றத்துக்குப் போக வைக்கிறாங்க”

“அப்பறம்”

“இந்த விஷயத்தைப் பற்றி கே.பி. கேசவமேனன் சொல்றப்ப, ‘தடையை மீறித் தீண்டாதவர்கள் தெருக்கள்ல நடந்தா இப்போ இருக்குற சமாதானமான நிலைக்கு ஆபத்து வந்துடும் என நீதிமன்றத்துல அவங்க சொல்லியிருக்காங்க. அதனால நீதிமன்றமும் அந்தத் தெருக்களுக்குள் போறதுக்குத் தடை உத்தரவு போட்டுடுச்சு’ அப்படினு விளக்கமா மக்கள்கிட்ட சொல்றாரு”

“போகக்கூடாதுன்னு சொன்னது சரியாம்மா”

“இதே கேள்வியைத்தான் செழியா, முக்கியத் தலைவரா இருந்த ஜார்ஜ் ஜோசப் எழுப்பினாரு. இந்தத் தடை உத்தரவு கொஞ்சம்கூட நியாயம் இல்லைன்னு துணிச்சலாகச் சொன்னாரு. சில உயர்ஜாதியினரோட வேண்டுகோளினால் இப்படி தடை விதிச்சிட்டாங்கனு சொன்னாரு”

“ஜார்ஜ் ஜோசப் விடுதலைப் போராட்டத் தலைவர்கள்ல முக்கியமானவரு. காந்தியவாதி. வைக்கம் போராட்டத்துக்குத் தந்தை பெரியார் வரணும்னு கடிதம் எழுதினவரு”

“அப்படியா!”

“ஆமா செழியா… ஜாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்னு உறுதியாப் போராடினவரு”

“சரிம்மா.. அப்பறம் என்னாச்சு? நீதிமன்றமே சொல்லிடுச்சுனு போராட்டத்தைக் கைவிட்டுட்டாங்களா?”

“அது எப்படி விடுவாங்க… காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதான தலைவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துறதுல உறுதியா இருந்தாங்க… கே.பி.கேசவ மேனன் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை நேரடியாகப் பார்த்துப் பேசினாங்க. சின்னச் சின்ன அளவில கூட்டம் போட்டு இதில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னாங்க”

“தினமும் போற மூணு பேரில் ஒடுக்கப்பட்ட மக்கள்ல இருந்து இரண்டு பேரும், உயர்ஜாதியில் இருந்து ஒருத்தரும் இருக்கணும்னு தலைவர்கள் முடிவெடுத்தாங்க. முதல்நாள், சப்பா என்ற புலையர் பிரிவைச் சேர்ந்தவரும், பாஹூலயன் என்ற ஈழவர் பிரிவைச் சேர்ந்தவரும் கோவிந்த பணிக்கர் என்ற நாயர் பிரிவைச் சேர்ந்தவரும் உள்ளே போனாங்க”

“அப்பறம்?”

“அப்படி மூணு பேரும் போறதுக்கு ஒத்துகிட்டதே பெரிய விஷயம் இல்லையா? ஏன்னா, பல்லாண்டுகளா விதிச்சிருந்த தடையை மீறணும். நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கு, காவல் துறை எப்படி வேணுமானாலும் நடந்துக்கலாம். உயர்ஜாதி இந்துக்கள் இவங்களத் தாக்கக்கூட செய்யலாம். என்ன வேணாலும் நடக்கலாம். ஆனாலும் மூணு பேரும் துணிச்சலோடு தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள்ள போகத் தயாராக இருந்தாங்க”

“ம்ம்”

“தலைவர்கள் வழிகாட்டலோட தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி மூணு பேரும் நடந்தாங்க. பூக்களைத் தூவி அவங்கள் வாழ்த்தி அனுப்பினாங்க எல்லோரும். ஏராளமான போலீஸ்காரர்கள் அங்கே நின்னுட்டு இருந்தாங்க அவங்களப் பார்த்து மூணு பேரும் கொஞ்சம் கூட பயப்படல. துணிச்சலோடு நடந்து முன்னேறினாங்க. வரலாற்றுச் சிறப்பு மிக்க நடை அது”

“சூப்பர்ம்மா”

“மூணு பேரையும் காவல்துறை கைது செய்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் போராட்டம் அன்ளிக்குதான் ரொம்பத் தீவிரமாகத் தொடங்குனுச்சு”

“தலைவர்களை முடக்கிட்டால் போராட்டம் நின்னு போயிடும்னு அரசாங்கம் திட்டம்போட்டுது. அரசாங்கம் இப்படித்தான் நினைக்கும்னு காங்கிரஸ் தலைவர்களுக்கு நல்லா தெரியும். அதனால அக்கம் பக்கத்தில இருக்கிற மாகாணங்களிலுள்ள தலைவர்களோட ஆதரவைப் பெறணும்னு நினைச்சாங்க”

“ஓ!”

“போராட்டத்தில் இருந்த குரூர் நீலகண்ட நம்பூதிரி என்பவர் ஏப்ரல் நான்காம் தேதி, உடனே வைக்கத்துக்கு வருமாறு பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்புனாரு.”

“பெரியார் உடனே வந்துட்டாரா அம்மா?”

“இல்ல செழியா…. அந்த நேரத்துல காங்கிரஸ் கட்சித் தலைவரா பெரியார் இருந்தாரு. அதனால நிறைய வேலைகள் அவருக்கு இருந்துச்சு. அப்ப, குளித்தலை நகரிலே மாநாடு வேற இருந்துச்சு. அதனால், தான் அவசியம் வைக்கத்துக்கு வர வேண்டுமா என்று கேட்டு, பதில் தந்தி அனுப்பினாரு.”

“அப்பறம்?”

“ஏப்ரல் ஆறாம் தேதி ஜார்ஜ் ஜோசப் மீண்டும் ஒரு தந்தி கொடுத்து பெரியாரை வைக்கத்துக்கு அழைச்சாரு. அப்பவும், தான் கட்டாயம் வர வேண்டுமா எனக் கேட்டு பதில் அனுப்பினாரு”

“ஏப்ரல் 11ஆம் தேதி மத்தியான நேரம். காங்கிரஸ் கட்சி ஆபிஸ்ல

முக்கியமான தலைவர்கள் தீவிரமா விவாதிச்சிட்டு இருந்தாங்க.

போராட்டத்தை அடுத்த கட்டமாக எப்படி கொண்டு போறதுன்னும், அக்கம் பக்கத்துல இருக்கிற மாகாணங்கள்ல இருந்து எப்படி ஆதரவைப் பெறுவதுன்னும் பேசிட்டு இருந்தாங்க. அப்ப அங்க வந்த போலீஸ்காரங்க அங்க இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப், செபாஸ்டியன், கோ.ஜி.ராய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்திடுறாங்க”

“ஓ… ஜார்ஜ் ஜோசப்பைச் சேர்த்து தலைவர்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அடுத்தது என்ன… தமிழ்நாட்டுலேருந்து பெரியார் தாத்தா வைக்கத்துக்கு போகப் போறாரா?”

“ஆமா.. பல்லாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை போராட்டம்… அதை மீட்டெடுக்க ஒவ்வொரு விஷயமாப் பார்த்துப் பார்த்து போராட்டத்தை வடிவமைச்சாங்க… அதனால் பெரியளவில் மக்கள் ஆதரவு இருந்த போராட்டம்… இப்ப தலைவர்கள் இல்லாட்டி அரசாங்கம் நினைச்ச மாதிரி தோல்வியில் முடிஞ்சுடும்”

“அப்படி முடியக் கூடாதும்மா…”

“அதுக்காகத்தான் பொருத்தமான தலைவரை எதிர்பார்த்தாங்க. இப்படி எல்லாம் ஆகும்னு கணிச்சுதான் 4ஆம் தேதி இருந்தே பெரியாரை அழைச்சுகிட்டு இருந்தாங்க… காந்தியடிகளும் சென்னை மாகாணத் தலைவர்கள் பார்த்துப்பாங்கனு பச்சைக் கொடி காட்டிட்டாரு”

“பெரியார் தாத்தா அங்கே போனா அரசாங்கம் சும்மா விட்டுடுமா?”

“அங்கேதான் காமெடியான ஒரு சம்பவம் நடந்துச்சு?”

“காமெடியாவா?”

“ஆமா, பெரியார் கேரளாவுக்குப் போனதுமே மகாராஜா ஆட்களும் போலீஸ் கமிஷனரும் அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாட்டோட காத்திருந்தாங்க”

“அது எப்படிம்மா… ராஜாவை எதிர்த்துப் போராடத்தானே பெரியார் தாத்தா கேரளாவுக்குப் போறாரு?’

“ஆமா… ஆனா, அந்த மகாராஜாவும் சரி.. ராஜாவுக்கு வேண்டியவங்களா இருந்தாலும் சரி… அவங்க எல்லாம் டில்லிக்கு ஈரோடு வழியா தான் ரயில்ல போக முடியும். அப்படிப் போனா பெரியாருடைய வீட்டுப் பங்களாவுலதான் தங்குவாங்க… அவங்களுக்குத் தேவையான உதவிகளை இவர்தான் செய்வாரு”

“ஓ! பதில் மரியாதை செய்யற மாதிரியா?”

“ஆனா பெரியார், தான் எதுக்கு வந்திருக்கேனு தெளிவாகச் சொல்லிட்டாரு.”

****

“பெரியார் ஊர் ஊராகப் போய் தீண்டாமைக்கு எதிராப் பேசினாரு. இன்னொரு பக்கம் தெருக்கள்ல நடக்கக்கூடாதுனு சொல்றவங்களும் கூட்டம் போட்டுப் போராட்டக்காரங்கள எப்படி ஒடுக்குறதுன்னு யோசிச்சாங்க’

“முடிஞ்சிடும்னு நினைச்ச போராட்டம் பத்திக்கிட்டு எரிஞ்சா… அவங்களும் பதிலுக்குச் செய்வாங்க இல்ல”

“ஆமா… பெரியாரோட வேலைகள் அந்தத் தீயை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைச்சுது… அதனால் அதை நிறுத்தறதுக்கு அரசாங்கம் ஒண்ணு செய்ய திட்டமிட்டுச்சு”

“மகாராஜாதான் பெரியார் தாத்தாவுக்குத் தெரிஞ்சவராச்சே… அவர் எப்படி பெரியாருக்கு எதிர்ப்பா செய்வாரு?”

“பெரியார்தான் ராஜ விருந்தாளியாக இருக்க

நூறு பேரும் கூடவே வர்றதா சொன்னாங் முடியாதுன்னு போராட்டத்துல குதிச்சிட்டாரே… அதைத் தடுக்க என்ன செய்தாங்க தெரியுமா?”

“என்ன செஞ்சாங்கம்மா?”<

(போராட்டம் தொடரும்)

 

4
நலமான உடலில் வளமான அறிவு29th November 2025
வண்ணத்துப் பூச்சி20th December 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
29th November 2025 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

ஒருவரையும் விடக் கூடாது அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

நலமான உடலில் வளமான அறிவு

Read More
37
Uncategorised
7th December 2024 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

துணுக்குச்சீட்டு-29

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

முந்திரிப்பழம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p