• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

வண்ணத்துப் பூச்சி

Uncategorised
ப

றவைகளுக்கும், பூக்களுக்கும் வண்ணங்களை வாரிவாரிக் கொடுத்தது போல பூச்சியினங்களில் வண்ணத்துப் பூச்சிக்கும் வண்ணங்களை இயற்கை வாரி வழங்கியுள்ளது. வண்ணத்துப்பூச்சிகளில் சுமார் 15,000 முதல் 20,000 இனங்கள் வரை உள்ளன. அத்தனையும் கண்களைக் கவரும் வண்ணங்களைக் கொண்டவை. இப்பூச்சிகள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிப் பருகும். முட்டையிலிருந்து குடம்பி நிலையில் புழுவாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான வண்ணத்துப் பூச்சியாக உரு மாற்றம் பெறுகிறது. இப்பூச்சிகள் வலசைக்காக சுமார் 3000 கிலோ மீட்டரில் இருந்து 5000 கிலோ மீட்டர் வரை அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன. கடும் வெப்பம் நிறைந்த பாலைவனங்களில்கூட வாழ்கின்றன. இத்துணைச் சிறப்பு மிக்க வண்ணத்துப்பூச்சியை எவ்வாறு ஆங்கில எழுத்துகள் (A,T,O,U) உதவியுடன் வரையலாம் என்பதைப் பார்க்கலாம்.

 

‘A’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.

‘A’ இன்
உட்பகுதியில் ‘T’ எழுத்தை எழுதவும்.

‘A’ மற்றும் ‘T’ எழுத்தைப் படத்தில் காண்பது போல் இணைத்துக் கொண்ட பின்னர், நடுப்பகுதியில் குறுக்குக் கோடு ஒன்று வரைந்து கொள்ளவும். பின்னர் தேவையற்ற கோடுகளை அழித்து விடவும்.

படத்தில் காட்டியபடி O,U எழுத்துகளை எழுதவும்.

‘U’ இன் அடிப்பகுதியில் படத்தில் காண்பதுபோல் நீள் வட்டம் வரையவும்.

தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு, படத்தில் காண்பது போல்  வளைவு கோடு கொண்டு வரைந்து கொள்ளவும். இப்போது வண்ணத்துப் பூச்சியின் மேல் பகுதி இறக்கை கிடைத்திருக்கும்.

தேவையற்ற
கோடுகளை அழித்துவிட்டு வண்ணத்துப் பூச்சியின் அடிப்பகுதியில் சிறிய அளவிலான இறக்கையை வரைந்து கொள்ளவும்.

தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு வண்ணத்துப் பூச்சியின் தேன் உறிஞ்சும் குழல் வரைந்து கொள்ளவும்.

வண்ணத்துப் பூச்சியின் உட்பகுதியில் கண்ணைக் கவரும் வடிவங்களை வரைந்து கொள்ளவும் வண்ணம் தீட்டிக் கண்டு மகிழவும்.<

6
“நடந்த கதை”20th December 2025
விரும்பி இங்கே வாழ்வோம் !20th December 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
20th December 2025 by Periyar Pinju

சாட் ஜிபிடியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவோமா?

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

வாய்க்குள் கண் தவளைக்கு நடந்த மரபணு மர்மம்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

கருப்பு கழுத்துக் கொக்கு

Read More
Uncategorised
20th December 2025 by Periyar Pinju

நிலாவையும் குப்பையாக்கி விட்டோமா !

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

அமைதி

Read More
images_fypayqr
Uncategorisedபிஞ்சுகள் பக்கம்
3rd April 2023 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தா செலுத்த…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p