தாயும் தடியும்
பகுத்தறிவின் பகலவனாய்
சமூகத்தைச் சீர்த்திருத்தினாய்
ஜாதியை ஒழிக்க முழங்கினாய்
வரலாற்றில் உனது பெயரைப் பதித்தாய்
சமத்துவத்தை விரும்பினாய்
புராணங்களைப் புறந்தள்ளினாய்
பெண்களின் உரிமைக்காகப் போராடினாய்
மூடநம்பிக்கையை முறியடித்தாய்
மதத்தை மறுத்தாய்
மனிதநேயத்தை முன்னேற்றினாய்
தமிழ்நாட்டின் சமூகநீதித் தலைவனாய் உயர்ந்தாய்
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!<
