• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பிழைகள் 12 வகை மட்டுமே

Uncategorised
ந

ம் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் நூற்றுக்கணக்கான பிழைகள் ஏற்படலாம். ஆனால், மொத்தம் எத்தனை வகையான பிழைகள் உள்ளன?  12 மட்டுமே!

எல்லாப் பிழைகளையும் இந்த 12 வகைக்குள் அடக்கிவிடலாம், 13 ஆவது வகை என்று எதுவுமே கிடையாது. இந்த 12 வகைகளையும் புரிந்து கொண்டு அவற்றைத் தவிர்த்து விட்டால் நம் பேச்சிலும் எழுத்திலும் எந்தப் பிழையும் இருக்காது.

“ஹை ஜாலி!” என்று குதூகலிக்கிறீர்களா பெரியார் பிஞ்சுகளே? இனி அந்த 12 வகைகளையும் என்னவென்று பார்ப்போமா?

  1. தேவையில்லாமல் A, An, The போடுவது.
  2. தேவைப்படும் இடத்தில் போடாமலிருப்பது
  3. ஒன்றுக்குப் பதிலாக வேறொரு article போடுவது.
  4. தேவையில்லாமல் preposition போடுவது.
  5. தேவைப்படும் இடத்தில் போடாமலிருப்பது.
  6. ஒன்றுக்குப் பதிலாக வேறொரு preposition போடுவது.
  7. வார்த்தையின் தவறான வடிவத்தை உபயோகிப்பது. (Wrong form of words)
  8. முற்றிலும் தவறான வார்த்தையை உபயோகிப்பது. (Entirely Wrong words)
  9. வார்த்தைகள் இடம் மாறிவிடுவது (Wrong word – order)
  10. Punctuation mistakes (Comma, Full Stop Etc.,)
  11. Spelling mistakes (எழுத்துப் பிழைகள்)
  12. உச்சரிப்புப் பிழைகள் (Pronunciation mistakes)

இனி ஒவ்வொரு வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு பார்க்கலாம்.  தருவதென்றால் நிறையவே தரலாம்.  இனிமேல் நீங்கள் முயன்று வகை வகையாகச் சேகரிக்க வேண்டும்.

12 வகைகளையும் பார்த்துக் கொண்டே எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்

  1. ‘Thirukkural’ was written by The Thiruvalluvar.

இது தவறு. தனி நபர் பெயருக்கு முன்னால் ‘the’  வரக்கூடாது.

  1. My father is Engineer. தவறு. ‘E’ ஒரு vowel. எனவே, “an Engineer” தான் சரி.
  2. Thiru. M.K. Stalin is a Chief Minister தவறு. இருப்பது ஒரே முதலமைச்சர். எனவே, “the Chief Minister” தான் சரி.
  3. She married with Vijay. தவறு. with தேவையற்ற preposition.

She Married Vijay. சரி.

  1. What are you looking? தவறு.

தேவைப்படும் preposition – “at”

What are you looking at?  என்பதே சரி.

  1. There was a fight between ten girls. தவறு.

இரண்டு பேர் இருந்தால் மட்டுமே between.  எனவே, “among ten girls”  என்பதே சரி.

  1. Did you broke the Chair? – தவறு.

நாற்காலியை உடைத்தது நீயா?

Did you break the chair? தான் சரி.

எனவே, இது break  என்ற வார்த்தையின் தவறான வடிவம்.

(Wrong form of a word)

  1. I forgot my pen on the table. தவறு. வடிவமல்ல. முழு வார்த்தையே தவறு. நம்முடைய pen எதுவென்று எப்படி மறந்து போகும்? எனவே, Wrong word.

I left my pen on the table என்பதே சரி.

  1. வார்த்தைகளின் இட மாற்றம் Wrong word order.

Wanted a car for a doctor with Dunlop tyres.  தவறு. ஏன்?

“டன்லப் டயர் பொருத்தப்பட்ட டாக்டருக்கு ஒரு கார் தேவை” என்றல்லவா ஆகிறது? டாக்டருக்கா டயர்? காருக்குத் தானே? இந்தப் பிழையை இரண்டு விதமாக நீக்கலாம்.

(i)  Wanted for a doctor a car with Dunlop tyres. சரி.

(ii) Wanted a car with Dunlop tyres for a doctor. இதுவும் சரி.

  1. Punctuation mistakes.

ஒரு தூக்குத் தண்டனைக் கைதி நிரபராதி என்பது தெரிந்ததும்.

“Kill him not, leave him.” என்று ஒரு மன்னர் உத்தரவு அனுப்பினாராம்.

“Kill him, not leave him” என்று comma வை மாற்றிப் போட்டாதால் நிரபராதியைத் தண்டித்து விட்டார்களாம்.

  1. ‘Separate என்ற வார்த்தையை எழுதிக்காட்டு’ என்று சொல்லிப் பாருங்கள். பத்துக்கு ஒன்பது பேர் தவறாக எழுதுவார்கள். Saparate/ Seperate/ Saperate இப்படி நிறைய வந்து விழும். Separate என்று சரியாக எழுதியவர்களின் முதுகில் ஒரு தட்டு தட்டுங்கள் – வலிக்காதபடி!
  2. ஜூன் மாத இதழிலேயே பார்த்தோம். தவறான உச்சரிப்பு. வெங்காயம் – ஆனியன் அல்ல. (Onion)  அன்யன். யாராவது  சிரித்தால் சிரிக்கட்டுமே? நாம் சரியாக உச்சரிப்போம்
    (Correct Pronunciation).<

(அடுத்த இதழில் சந்திப்போமா?)

 

9
அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER20th December 2025
வண்ணம் தீட்டி மகிழுங்கள்!20th December 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

டிங் டாங் பாட்டி

Read More
37
Uncategorised
7th December 2024 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

கல்விப் பாதை வழிநடப்போம் !

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

விண்வெளிக்குச் சென்று இரண்டாவது இந்தியர்

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

கிலுகிலுப்பை

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

ஒருவரையும் விடக் கூடாது அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p