ஓவியம் வரையலாம் வாங்க
| த |
ுலியா இனத்தைச் சேர்ந்த துலிப்ஸ் என்பது வசந்த காலத்தில் பூக்கும் வனப்புமிகு மூலிகை ஆகும். பூக்கள் பெரியதாகவும், பகட்டானதாகவும், மினுமினுப்பான/ பளபளப்பான வண்ணங்களைக் கொண்ட தாகவும் இருக்கும். பெரும்பாலும் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. வசந்தகாலத்தில் பூக்கும் பூக்கள், இலைகள் கோடை காலத்தில் துளிர் விட்டு வளர்ந்து அழகிய மலர்களை மலரச் செய்கின்றன. இத்தகைய வியக்கத்தக்க சிறப்புத் தன்மை கொண்ட துலிப் பூக்களை எவ்வாறு ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் வரையலாம் என்பதைக் காணலாம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் ‘V’ மற்றும் ‘U’
வாங்க வரையலாம்.
‘V’ எழுத்தின் உட்பகுதியில் படத்தில் காண்பது போல் வளைவு கோடு வரைந்து கொள்ளவும்.
‘V’ இன்
மேற்பகுதியில் படத்தில் காண்பது போல் சிறிய அளவு இடைவெளிவிட்டு இரண்டு வளைவுக் கோடுகளை வரைந்து கொள்ளவும். பின்னர் தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
வளைவுக் கோடுகளை படத்தில்
காண்பது போல இணைத்துவிட்டு
‘U’ எழுத்தை எழுதிக் கொள்ளவும்.
‘U’ இன் மேற்பகுதியில் வளைவுக் கோடு கொண்டு படத்தில் காண்பது போல் இணைத்து விட்டு ‘U’ ன் அடிப்பகுதியில் பூவின் தண்டுப் பகுதியை வரைந்து கொள்ளவும்.
வளைவுக்கோடு கொண்டு இலைகளை வரைந்த பின்னர் வண்ணம் தீட்டி மகிழுங்கள்.<