இது தான்ஆங்கிலம் -எம் ஆர் மோகனார்
நம்மால் முடியும்
| ப |
ெரியார் பிஞ்சுகளே! ஆறு இதழ்கள் மூலம் ஆங்கில மொழி சார்ந்த பலவற்றைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இந்த ஏழாவது இதழ் உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோகும். உன்னிப்பாக, கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொள்ளுங்கள். ரெடியா?
வினைச்சொற்கள் (VERBS)
செயல்களைக் குறிக்கும் சொற்கள் verbs. இதில் இரண்டு வகைகள் – Regular verbs; Irregular verbs. ed சேர்த்து கடந்த காலத்தைக் குறிப்பிட முடிந்தால் அவை Regular Verbs. உதாரணமாக – walk / walked; talk / talked; push / pushed இப்படிப் பல. ஆனால் வேறு பல verb களுக்கு ed சேர்த்து விட முடியாது. அவற்றின் வடிவம் வித்தியாசமாக இருக்கும். அவை யாவும் Irregular verbs. உதாரணமாக – drink கடந்த காலத்திற்கு ed சேர்த்து drinked என்று எழுத முடியுமா? drank தான் சரி. அது மட்டுமா? Past Participle – drunk. (drink – drank – drunk மூன்றுமே வித்தியாசமானவை) இன்னொரு உதாரணம் – draw – drew – drawn; sing; sang; sung இப்படிப் பல.
சில verb களில் இரண்டாவதும் மூன்றாவதும் ஒரே மாதிரி இருக்கும். bring – brought – brought (broughted அல்ல). catch – caught – caught (caughted அல்ல). இவையும் irregular verbs தான்.
இன்னொரு வகை – முதலாவதும் மூன்றாவதும் ஒன்றாக இருக்கும். இரண்டாவது மட்டும் வித்தியாசமாக இருக்கும். come – came – come. become – became – become. I come by bus (present); I came yesterday (Past); I had come when the bell rang (Past Participle) (மணியடித்த போதே நான் வந்து விட்டிருந்தேன்).
மற்றொரு வகையில் மூன்றுமே ஒரே மாதிரி இருக்கும். cut – cut – cut; put – put – put. கட்டட் அல்ல. புட்டட் அல்ல. ed சேர்க்கவே கூடாது.
என்ன செய்யலாம் பிஞ்சுகளே? தமிழில் இப்படிப்பட்ட சிக்கல்களே இல்லை. அதனால் தான் வடநாட்டுக்காரர்கள் சுலபமாக நம் தமிழைக் கற்றுக்கொண்டு ஜாலியாக ஒடிவிடுகிறார்கள். நமக்குச் சிரமமாக இருக்கிறது, ஆனாலும் நாம் கற்றுக் கொண்டே தீருவோம் வாருங்கள். எவராலும் முடியாதது நம்மால் முடியும் அல்லவா?
துணை வினைச் சொற்கள் (Helping Verbs)
கண்ணுக்குத் தெரியாத செயல்கள் Helping Verbs. உதாரணமாக – “I am tired” களைப்பாக இருக்கிறீர்கள். அந்த இருப்பதைக் குறிக்கும் “am” தான் helping verb.
“Be quiet”! – அமைதியாக இரு. இங்கேயும் இருக்கச் சொல்லும் வார்த்தை ‘be’ ஒரு helping verb.
Helping verbs களில் மூன்று வகைகள் உண்டு. ‘be’ verb, ‘do’ verb’, ‘have’ verb.
‘be’ verbs இல் எட்டு வகை:
be/ being/ been/ am /is /was /are /were. ‘do’ verbs இல் அய்ந்து வகை: do /doing /does /did /done; ‘have’ verbs இல் நான்கு வகை: have /having /has /had.
உதாரணமாக – I have a pen. (Pen வைத்திருப்பதே கண்ணுக்குத் தெரியாத செயல். எனவே வினைச்சொல் – verb. “Do your homework”. வீட்டுப் பாடத்தைச் செய். இந்தச் “செய்வது” ஒரு செயல். எனவே வினைச்சொல் – verb.
இனி மேற்கண்ட அத்தனை helping verb களையும் வாக்கியங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம் வாருங்கள். (8+5+4=17 வாக்கியங்கள் வர வேண்டும்).
- Don’t be idle.
- You are being watched.
- I had been to Mumbai.
- I am busy now.
- She is good at dancing.
- He was punished.
- You are very clever.
- We were playing chess. – இவை “be’ verb இன் 8 வகை.
- Do your work silently.
- Doing nothing is boring.
- She does her home work regularly.
- I did it quickly.
- We have done nothing wrong. – இவை ‘do’ verb இன் 5 வகை.
- I have a calculator.
- She is proud of having a lap–top.
- He has a smart watch.
- We had three cars long ago. இவை ‘have verb இன் 4 வகை.
‘எங்களால் முடியும்’ என்ற மன உறுதியோடு இவற்றையெல்லாம் ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். சிரமப்பட்டால் மட்டுமே கிடைப்பது தானே அறிவு?<
(அடுத்த மாதம் இன்னுன் நிறைய!)