• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

எது அன்னதானம்?

பிஞ்சு 2025மே,2025

பாப்பாவின் பாவலர் முரசு நெடுமாறன்

மகள் : அப்பா இன்று நீங்கள்ஏன்

அளவு கடந்த மகிழ்ச்சியில்,

துள்ளித் துள்ளிக் குதிக்கிறீர்?

சொல்லுங் கள்ஏன்? சொல்லுங்கள்!

தந்தை: அன்பு மகளே நேற்றுநான்

அளித்த அன்ன தானம்தான்

வெற்றி வெற்றி பெரும்வெற்றி

அதனால் இப்படி மகிழ்கிறேன்!

மகள் :            அன்ன தானம் யாருக்காம்

அதனைக் கொஞ்சம் சொல்லுங்கள்

எத்தனை பேர்அதில் பயன்பெற்றார்

எடுத்துக் கொஞ்சம் கூறுங்கள்!

தந்தை: ஆயிரம் பேர்கள் தெரியுமா?

அத்தனை பேரும் செல்வந்தர்

வகைவகை யான உணவெல்லாம்                              வழங்கிய என்னைப் புகழ்ந்தார்கள்!

மகள் :            நானும் அன்ன தானத்தை

நாள்தவ றாமல் செய்கின்றேன்

எப்படி என்று கேட்பீர்கள்

எடுத்துச் சொல்வேன் கேளுங்கள்!

பள்ளியில் உணவு வேளையிலே                                பசியைப் போக்க நம்வீட்டில்

நிறைய உணவு தந்தென்னை

நீங்கள் அனுப்பி வைப்பீர்கள்!

அங்கே சிலபேர் உணவின்றி
அழுவர்! அவர்கள் பசிதீர

என்றன் உணவில் ஒருபகுதி

எடுத்து வழங்கி மகிழ்ந்திடுவேன்!

ஒருசில நாளில் முழுஉணவும்

உவந்தே அவர்க்குத் தந்திடுவேன்                                அவர்கள் உண்டு களிப்பதையே                           அன்பாய்ப் பார்த்து மகிழ்வேனே!

மிகவும் சிறிய இச்செயலும்                                      மேன்மை மிக்கது  இல்லையா?

அப்பா இதுவும் மிகநல்ல

அன்ன தானம் ஆகாதா?

தந்தை:  ஆமாம் மகளே நீசெய்யும்

அச்செயல் மிகமிகப் பெரிதான

அன்ன தானமாம் ஒப்புகிறேன்

அன்பு மகளே வாழ்த்துகிறேன்!

பசியைப் போக்கும் செயல்தானே

பயன்மிக அன்ன தானம்ஆம்!                                  பகுத்தறிவுள்ள என் மகளே,

பாவிஎன் கண்ணைத் திறந்தாயே!<

 

 

0
இளநீருக்குள் தண்ணீர் எப்படிப் போனது?15th August 2026
புத்துணர்ச்சி பெறவே கோடை விடுமுறை! புரிந்து செயல்படுங்கள்!15th August 2026

மற்ற படைப்புகள்

செப்டம்பர் 2025பிஞ்சு 2025
24th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
25
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
3rd March 2025 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

Read More
1567
நவம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி-3 அழிவைத்த ‘செல்’லு!

Read More
29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More
13
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 11: உடலுக்குள் ஒரு பயணம்

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p