• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நியூட்டோனியனா? நான் நியூட்டோனியனா?

பிஞ்சு 2025மே,2025

“யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில, திருட்டுத்தனமா சமையலறைக்குள்ளே போய், சர்க்கரை, வெல்லம் சாப்பிடறதோட நிறுத்தாம, கண்ணாடிக் குடுவையில இருக்கும் தக்காளிச் சாஸை, குட்டிக் கிண்ணத்தில் ஊற்றி சாப்பிடுவேன்” என்று என் நண்பர் சொல்லுவார். “இதுல அம்மா வருவதற்குள்ள, அந்த கண்ணாடி குடுவையில் இருந்து தக்காளிச் சாஸை ஊற்றுவது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா? சட்டென்று ஊற்றவும் முடியாது. நாலு அஞ்சு தடவை குலுக்கிட்டே இருந்தா, தண்ணீர் மாதிரி ஆகி  அதிகமா வந்துடும்.. ஒரு வழியா சரியான அளவு ஊத்துறவதுக்குள்ள என் தங்கை வந்து பார்த்துட்டு, அம்மாகிட்ட சொல்லிடுவா” என்று சொல்லிகிட்டே அவரின் தங்கையை முறைத்துப் பார்ப்பார், என் நண்பர். அவரும் ஒழுங்கு காட்டி ஓடிவிடுவார். சரி, அது இருக்கட்டும், நாம அறிவியலுக்கு வருவோம். வழக்கம் போல ஒரு கேள்வி இருக்கும் அல்லவா. அது என்ன? தக்காளி சாஸ், ஏன் கண்ணாடிக் குடுவையில் இருக்கும் போது கெட்டியாகவும், நாலு அஞ்சு தடவை குலுக்கினால், தண்ணீர் போல் இளகிய மாதிரியும் ஆகிடுது?

முதலில் நாம பாகுநிலை பற்றிப் பார்ப்போம். தேனை, ஒரு குடுவையில் இருந்து இன்னொரு குடுவைக்கு மாற்றி வைக்குறோம் என்று வைத்துகொள்ளலாம். தேன் ரொம்ப வேகமா மற்றொரு குடுவைக்குள்ள போகாது. அது ரொம்ப மெதுவாகத்தான் பாயும். அதுவே தண்ணீரை எடுத்துகொண்டால், ரொம்ப வேகமாப் பாயும் அல்லவா?

ஒரு திரவம், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எந்த வேகத்துல பாயுது என்பதையே பாகு நிலை என்று சொல்கிறோம். வீட்டில் வெல்லம், சர்க்கரை எல்லாம் காய்ச்சி, திடநிலையிலிருந்து திரவ நிலைக்குக் கொண்டுவருவதை பாகு காய்ச்சுதல் என்று சொல்வாங்க இல்லியா? அந்த பாகு நிலையைத் தான் சொல்றேன். ஒரே உயரத்துல இருந்து தண்ணீரையும் தேனையும் ஊற்றினால், தேன் மெதுவாகத்தான் தரையில் வந்து விழும், இதுக்குக் காரணம் தேனின் பாகுநிலை, தண்ணீரை விட அதிகம்.

ஆப்பிள் மரத்துக்கு அடியில உட்கார்ந்ததால, புவி ஈர்ப்பு விசை பற்றி உலகுக்குச் சொன்ன நம்ம அய்சக் நியூட்டன், திரவங்கள் பற்றியும் சொல்லி இருக்கார். ஒரு திரவத்தின் மேல எவ்வளவு விசை கொடுத்தாலும், அதன் பாகுநிலை மாறாமல் இருந்தால், அந்தத் திரவத்தை எல்லாம் Newtonian liquid என்று சொன்னார் நம்ம நியூட்டன். ஆனால், திரவத்தின் மேல கொடுக்கப்படும் விசைக்கு ஏற்ப அந்தத் திரவத்தின் பாகுநிலை மாறினால், அதை non-Newtonian liquid  என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்போ, நம்ம தக்காளி சாஸ்?? கண்டிப்பா non-newtonian liquid தான்.

தக்காளி சாஸ் குடுவையை, நாலு அஞ்சு தடவை குலுக்கும்போது, அந்தத் திரவத்தின் மேல நாம விசையைக் கொடுக்குறோம். அப்போ, எவ்வளவு விசை குடுக்குறோமோ, அதுக்கு ஏற்ப அந்தத் தக்காளி சாஸின் பாகுநிலை குறைந்து, தண்ணீர் போலப் பாய ஆரம்பித்துவிடும். இதுவே, முட்டையை ரொம்ப நேரம் அடித்துக்கொண்டே இருந்தால், அதோட பாகுநிலை அதிகமாகி, அதன் பாயும் தன்மை குறைந்து விடும். அப்போ, முட்டையும் non -Newtonian liquid தான்.

எதனால இப்படி ஆகுது என்பது குறித்து ஆராய்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு! நீங்களும் வளர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு எதனால பாகுநிலை விசைக்கு ஏற்ப மாறுது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. ஆனால், இப்போ, உங்களைச் சுற்றி எந்தத் எந்த திரவங்கள் எல்லாம் non Newtonian liquids என்று கண்டுபிடிங்க….  பார்க்கலாம்!<

2
சின்னககைச் சித்திரம்17th August 2026
குறுக்கெழுத்துப் போட்டி17th August 2026

மற்ற படைப்புகள்

ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
டிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டே லே!

Read More
3644
சிறார் பாடல்நவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

எழுதும் திறன்(சிறார் பாடல்)

Read More
1
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
4th January 2025 by ஆசிரியர்

”மருந்தும் விருந்தும் திருக்குறளே”

Read More
11
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

Read More
சுடோகுநவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p