• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

போதைப் பொருள்களுக்கு ஜா.ஓ.ககுணா எதிராக மாரத்தான் ஓட்டம்

ஜுன்,2025பிஞ்சு 2025

போதைப் பொருள் பயன்பாட்டின் அபாயங்களை விளக்கவும் – விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாரத்தான் ஓட்டப் பந்தயம் – 2025 தஞ்சாவூர், வல்லம், “பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன”த்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாரத்தான் ஓட்டப் பந்தயம் 01.05.2025 அன்று பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தின் எதிரிலுள்ள சாலையில் தொடங்கியது.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண்.இராமநாதன் பத்து கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர்  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார்  அய்ந்து கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சார்ந்த   துரை சுதாகர் மற்றும் தஞ்சாவூர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூத்த மண்டல மேலாளர் வெங்கட்சுப்ரமணியன் ஆகியோர் மூன்று கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பெரியார் கல்வி நிறுவனத்தின் நிர்வாக செயற்குழு உறுப்பினர்  வீ.அன்புராஜ்   மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக   திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,   கிரிஸ் மருத்துவமனை மரு.உஷாநந்தினி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், A2Z மருத்துவமனையின் இயக்குநர்  ஆர்.எம்.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் 10 கிலோமீட்டர் தூரத் திற்கான முதல் பரிசினை தஞ்சாவூர், எம்.சத்தீஸ்குமார், இரண்டாம் பரிசினை மகாராட்டிரம், இராமேஸ்வரன் மஞ்சா, மூன்றாம் பரிசினை மத்தியப் பிரதேசம் நிராச்சி சாலக்கி ஆகியோர் பெற்றனர். மேலும் ஏழு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

10 கிலோமீட்டர் பெண்களுக்கு உண்டான போட்டியில் முதல் பரிசினை துளசிசிறீ,  இரண்டாம் பரிசினை ஜெயராணி, மூன்றாம் பரிசினை டி.தீக்சா, ஆகியோர் வென்றனர்.

5 கிலோமீட்டர் ஆண்களுக்கு உண்டான போட்டியில் முதல் பரிசினை வருண்,  இரண்டாம் பரிசினை ஹரிஸ், மூன்றாம் பரிசினை பிரேம்குமார், ஆகியோர் வென்றனர். பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தினை, யாஸ்சிஸ் சச்சனா, இரண்டாம் இடத்தினை புவிசா, மூன்றாம் இடத்தினை யோகவர்த்தினி பெற்றனர்.

3 கிலோமீட்டர் ஆண்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசினை மாரீஸ்சரத், இரண்டாம் பரிசினை ஜெயக்குமார், மூன்றாம் பரிசினை கோவிந்தராஜன், பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசினை லத்திக்கா சிறீ, இரண்டாம் பரிசினை பிரதீஷா, மூன்றாம் பரிசினை தன்யா சிறீ ஆகியோர் வென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லா வாழ்க்கையை ஊக்குவித்து அனை வரும் ஒன்றினைந்து போராடும் கூட்டு மனப்பான்மையை உருவக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. இந்தியா முழுவதிலிருந்து 1000த்து மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்தனர்.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நிகழ்வில், பழகு முகாமில் கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகள் அனைவரும் 3 கி.மீ. தொடர் ஓட்டத்தில் பங்கேற்று, “போதை ஒழிப்பு” விழிப்புணர்வுப் பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டு சிறப்பு சேர்த்தனர். பெரியார் பிஞ்சுகள் அனைவருக்கும் பங்கேற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை விடுதலை, பெரியார் பிஞ்சு இதழ்களும் பெரியார் விஷன் ஓடிடியும் இணைந்து வழங்கின என்பது
குறிப்பிடத்தக்கது. <

4
பந்து விளையாடுவது யார்?17th August 2026
கடந்த இதழ் குருக்கெழுத்துப் போட்டி விடை:17th August 2026

மற்ற படைப்புகள்

சிறார் பாடல்டிசம்பர் 2025பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

ரெட்டைக் கிளவி!

Read More
16
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

மனிதரையும் விலங்குகளையும் பிரிப்பது ‘எது? எப்படி? ஏன்?’

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கிலுகிலுப்பை

Read More
பிஞ்சு 2025மே,2025
17th August 2026 by Periyar Pinju

சின்னககைச் சித்திரம்

Read More
குறுக்கெழுத்துப் போட்டிடிசம்பர் 2025பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குக்கெழுத்துப் போட்டி விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p