திருக்குறள் துறவறவியல் – அறத்துப் பால்
அதிகாரம் 30 – குறள் எண்: 297
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.”
ஒருவன், எப்பொழுதும் பொய்யாமையாகிய ஓர் அறச்செயலை மட்டும் போற்றிக் கடைப்பிடித்து வருவானேயானால், அவன் எப்பொழுதும் மற்ற அறங்களைச் செய்யாவிட்டாலும்கூட, அவன் பொதுவாக நன்மையையே எய்துவான்.

