• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

எந்த வீரமணி?

ஜுலை,2025பிஞ்சு 2025

உடுமலை

ஆசிரியர் வீரமணி தாத்தா, திராவிடர் கழகத்தின் தலைவர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (பல்கலைக்கழகம்) வேந்தர், சிறந்த நிருவாகி, தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறந்த மேடைப் பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர், ஓயாத உழைப்பாளி என்றுதான் அவரைப் பற்றிப் பலருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றி பலரும் அறியாத ஒரு சேதி என்னவென்றால், அவர் சிறந்த நகைச்சுவை உணர்வுக்குச் சொந்தக்காரர்.

அப்படிப்பட்ட ஆசிரியர் தாத்தா, 15.06.2025 அன்று கோபியில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்காக, கோபியிலிருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார். ஆசிரியர் தாத்தா, காலையிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு, உள்ளூர் கழகத் தோழர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சந்திப்பு என்று மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.

அந்த நேரத்தில், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் – திலகவதி இணையர்கள் தங்கள் மகன் ‘அன்பு வீரமணி’யின் 10 ஆம் ஆண்டு பிறந்தநாளை ஆசிரியர் முன்னிலையில் கொண்டாடும் ஆவலுடன், ஒரு பிறந்தநாள் கேக்குடன் ஆசிரியர் தாத்தாவிடம் வந்தனர். ஆசிரியர் தாத்தா என்ன ஏதென்று விசாரித்துவிட்டு, கேக்கில் “அன்பு வீரமணி” என்று எழுதியிருந்ததைப் பார்த்து, அவனுடன் சற்று விளையாடலாம் என்று உள்ளுக்குள் முடிவுசெய்துவிட்டு, “கேக்கில் எழுதியிருப்பது யாருடைய பெயர்?” என்று கேட்டிருக்கிறார்.

இதை எதையும் அறியாத, பெரியார் பிஞ்சு அன்புவீரமணி சட்டென்று, “என்னுடைய பெயர்தான்” என்று சொல்லிவிட்டார். பிறகுதான் ஆசிரியர் தாத்தாவின் பெயரும் இதுதானே என்று அவருக்கு உறைத்திருக்கிறது. உடனே, “இல்லையில்லை இது உங்கள் பெயர்” என்று வேகவேகமாகச் சொல்லியிருக்கிறார். அன்பு வீரமணியிடம் சட்டென்று ஏற்பட்ட அந்த இனிமையான தடுமாற்றம் தந்த சுகத்தால் அனைவரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். அந்த அரங்கமே சில மணித்துளிகள் கலகலப்பாக மாறிவிட்டது. அப்புறம் பிறந்தநாளைக் கொண்டாடிய பெரியார் பிஞ்சு அன்புவீரமணிக்கு, ஆசிரியர் தாத்தா ஒரு சிறு கேக் துண்டை ஊட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தாத்தாவின் வாழ்க்கையில் இது போன்று எத்தனையோ இனிய நிகழ்வுகள் உண்டு.<

2
திருக்குறள் துறவறவியல் - அறத்துப் பால்19th August 2026
சின்னககைச் சித்திரம்19th August 2026

மற்ற படைப்புகள்

ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
அக்டோபர் 2025படக்கதைபிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

மூளை இருக்கா?(படக்கதை )

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

உதிரி உடல்கள் மருத்துவப் புரட்சியை ஏற்படுத்துமா?

Read More
Screenshot 2026-08-25 111505
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

நிலவையும் குப்பையாக்கி விட்டோமா?-பெருமாள் சாமி சுப்புராஜ்

Read More
165
நடந்த கதைநவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

தனித் தெரு வேண்டாம்; பொதுத் தெரு வேண்டும்!(நடந்த கதை-9)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p