• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட டைரனோசர்களின் முன்னோடி:பரிணாம வரலாறு மாறுமா?

ஜுலை,2025பிஞ்சு 2025

மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், அறிவியலாளர்கள் ஒரு புதிய வகை ரைனோசரைக் கண்டுபிடித்துள்ளனர். இவை டைரனோசரைக் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை ‘மாற்றி எழுதக்கூடியவை‘ என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.  அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஓர் உயிரினத்திலிருந்து வந்தவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இது டி–ரெக்ஸ் (T-rex) எனும் பிரபலமான விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன்.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, ரைனோசர்களின் அழிவுக் காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்திவாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

‘பிரின்ஸ்‘ ஓர் ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு

கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டார்லா ஜெலெனிட்ஸ்கி, “பிரின்ஸ்‘ என்பது ஓர் ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு என்பதைக் குறிக்கிறது” என்று விளக்கினார். டைரனோசராய்டுகள் என்பவை இரண்டு கால்களால் நடந்த மாமிச உண்ணி டைனோசர்களின் ‘சூப்பர் ஃபேமிலி‘ வகையாகும்.

பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கியுடன் இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய பி.எச்.டி மாணவர் ஜாரெட் வோரிஸ் பின்வருமாறு விளக்கினார்: “இவை சிறிய, ஆனால் வேகமாக வேட்டையாடும் விலங்குகள். உணவுச் சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகளாக இருந்த பெரும் டைனோசர்களின் நிழலில் இவை வாழ்ந்தன.”

பரிணாம இடைநிலை புதைபடிவம்: கான்கூலூ

ஜுராசிக் காலத்தில் சுற்றித் திரிந்த சிறிய வேட்டை விலங்குகள் என்பதிலிருந்து, டி–ரெக்ஸ் உள்ளிட்ட வலிமைமிக்க ராட்சத விலங்குகள் என மாறியது வரை ‘கான்கூலூ‘ ஒரு பரிணாம மாற்றத்தைக் குறிக்கிறது. “இது சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும், அதே நேரத்தில் ஒரு பெரிய டி–ரெக்ஸ் அதை விட எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம். எனவே, இது முந்தைய மூதாதையர்களுக்கும் வலிமைமிக்க டைரனோசர்களுக்கும் இடையிலான ஒரு இடைநிலைப் புதைபடிவம்” என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறுகிறார்.

“இது டைரனோசர்களின் பேரின வரிசையைத் (Family Tree) திருத்தவும் டைரனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததை மாற்றி எழுதவும் உதவியது” என்று அவர் கூறுகிறார்.

சக்திவாய்ந்த தாடைகளின் ஆரம்பகால வளர்ச்சி

இந்தப் புதிய இனம், டைரனோசர்களின் கொடுங்கோன்மைக்கு முக்கியமான பண்புகளாக இருந்தவற்றின் ஆரம்பகால பரிணாமக் கட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, வலுவான தாடையைக் கொண்ட மண்டை ஓடு கட்டமைப்பு.

“அதன் மூக்கு எலும்பில் சில விஷயங்களை கவனிக்க முடிகிறது. அவை பிற்காலத்தில் டைரனோசர்களுக்கு அவற்றின் இரையைக் கடிக்கக்கூடிய வலிமையான ஆற்றலைக்  கொடுத்தன” என்று ஜாரெட் வோரிஸ் கூறுகிறார். இத்தகைய ஆற்றல்வாய்ந்த தாடைகளின் பரிணாம வளர்ச்சிதான், பெரிய இரைகளின் மீது பாய்ந்து, அதன் எலும்பைக் கூட கடிக்கும் ஆற்றலை டி–ரெக்ஸ் விலங்குகளுக்கு அளித்தது.

கண்டுபிடிப்பும் இடம்பெயர்வும்

இந்த ஆராய்ச்சியில், குழு ஆய்வு செய்த இரண்டு (பகுதியளவிலான) எலும்புக்கூடுகள் முதன்முதலில் 1970-களின் முற்பகுதியில் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆரம்பத்தில் ‘அலெக்ட்ரோசொரஸ்‘ என்று அழைக்கப்படும் ஓர் இனத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்பட்டன. ஆனால், வோரிஸ் அவற்றை ஆய்வு செய்தபோது, அதன் தனித்துவமான டைரனோசொரஸ் தொடர்பான கூறுகளை அவர் அடையாளம் கண்டார்.

“அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘அதில் இதுவொரு புதிய இனம் என நினைக்கிறேன்‘ என வோரிஸ் கூறியிருந்தார்” என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி நினைவுகூர்ந்தார்.

அந்த காலத்தில் சைபீரியாவையும் அலாஸ்காவையும் இணைத்திருந்த தரைப்பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இந்த டைனோசர்களால் இடம்பெயர முடிந்தது. அது புதிய வாழ்விடங்களைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பதில் அவற்றுக்கு உதவியது. “கண்டங்களுக்கு இடையேயான இத்தகைய பயணங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு டைரனோசர் குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன”என வோரிஸ் விளக்கினார்.

“கொடும் ஆட்சி புரிந்த அரசர்களாக மாறுவதற்கு முன்பு, ‘டைரனோசர்கள்’ இளவரசர்களாக இருந்தன என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குக் காட்டுகிறது” என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறினார்.<

2
பற்பசையும் துலக்கியும்!19th August 2026
புள்ளிகளை இணையுங்கள்!19th August 2026

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்2025எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
Screenshot 2026-08-25 110022
அறிவியல்செப்டம்பர் 2025பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

அறிவின் விரிவு-14 சாட் ஜிபிடியை புத்திசாலித்தனம் பயன்படுத்துவோமா சைபர் வினோத் ஆறுமுகம்

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
19
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
3rd March 2025 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – நெருப்புக்கோழி

Read More
Untitled-1
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

விரும்பி இங்கே வாழ்வோம்

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

பந்து விளையாடுவது யார்?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p