• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மூளையிலிருந்து நேரடியாக …

ஆகஸ்ட்2025பிஞ்சு 2025

“சைபர் புத்தர்” வினோத் ஆறுமுகம்

சின்னஞ்சிறிய பிஞ்சுகளே, ஒரு கேள்வி! உங்க மனசுல ஓடும் எண்ணங்களை, கனவுகளை, அப்படியே இன்டெர்நெட்டுல காட்ட முடியுமா? ஆச்சரியமா இருக்கா? அப்போ வாங்க, நாம ‘பிரெய்ன்டர்நெட்‘ (Brainternet) பத்தி தெரிஞ்சுக்கலாம்! இது நம்ம மூளையை இன்டெர்நெட்டோட இணைக்கும் ஒரு சூப்பர் டெக்னாலஜி.

‘பிரெய்ன்டர்நெட்’டுன் என்ன?

பிரெய்ன்டர்நெட்டுங்கிறது ரொம்பவே புதுமையான ஒரு விஷயம். நம்ம மூளை (Brain) எப்படி வேலை செய்யுதுங்கிறதை இணையம் (Internet) கூட இணைச்சுப் பார்க்குறதுதான் இது. தென்னாப்பிரிக்காவுல இருக்கிற அறிவியலாளர்கள் இதைச் செஞ்சு காட்டி இருக்காங்க. உலகத்துலேயே இப்படி மூளையையும் இன்டெர்நெட்டையும் நேரடியா இணைச்சது இதுதான் முதல் தடவைன்னு சொல்றாங்க. நம்ம மூளையை இன்டெர்நெட்ல இருக்கிற ஒரு ‘திங்‘ (Thing) – பொருள் மாதிரி மாத்துறதுதான் இவங்களோட நோக்கம்.

பிரெய்ன்டர்நெட் எப்படி வேலை செய்யுது?

இது எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கலாமா? முதல்ல, ஒரு EEG (Electro Encephalo Gram) சாதனம். அதாவது, ஸ்பெஷல் ஹெல்மெட் மாதிரி ஒண்ணு இருக்கும். அதைத் தலையில மாட்டிக்கிட்டா, நம்ம மூளையில இருந்து வர்ற சின்னச் சின்ன மின் அலைகளை (Brain waves – மூளை அலைகள்) அது பிடிச்சுக்கும். இந்த மின் அலைகள் தான் நம்மோட சிந்தனைகள், உணர்வுகள் எல்லாத்துக்கும் காரணம்.

அப்புறம், அந்த அலைகளை ஒரு சிறிய கணினி (Computer), அதாவது ராஸ்பெர்ரி பை (Raspberry Pi)ன்னு ஒரு குட்டிக் கம்ப்யூட்டர் எடுத்துக்கும். அந்தக் கணினி இந்த மூளை அலைகளை இன்டெர்நெட்ல எல்லாரும் பார்க்கிற மாதிரி ஒரு லைவ் ஸ்ட்ரீமா (நேரலையாய்) மாத்தி அனுப்பும். கடைசியா, இந்தத் தகவல்கள் ஒரு வலைத்தளத்துல எல்லோரும் பார்க்கிற மாதிரி தெரியும். இப்போது, நம்ம மூளை என்ன பண்ணுதுன்னு இன்டெர்நெட்ல பார்க்கலாம். அதாவது, இது மூளையிலிருந்து மட்டும் இன்டெர்நெட்டுக்குத் தகவல்களை அனுப்பும் (one-way communication).

பிரெய்ன்டர்நெட் எதுக்குப் பயன்படுது?

  • மூளையைப் புரிஞ்சுக்க: நம்ம மூளை எப்படி சிந்திக்குது, எப்படி உணர்வுகளை உருவாக்குதுன்னு இன்னும் நல்லா புரிஞ்சுக்க இது உதவும்.
  • ஆராய்ச்சிக்கு: அறிவியலாளர் மூளையைப் பத்தி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய இது ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கும்.
  • எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கு: கூடிய விரைவில் நம்ம மனசுல நினைச்ச உடனே கம்ப்யூட்டர்ல வேலை செய்யற மாதிரி வரலாம்! கை, கால்கள் செயல்படாதவங்க, மூளையாலேயே கருவிகளை இயக்க இந்தத் தொழில்நுட்பம் உதவலாம். எதிர்காலத்துல, மூளைக்கும் இன்டெர்நெட்டுக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் தகவல் பரிமாறிக்க (two-way communication) முடியும்னு சொல்றாங்க.

பிரெய்ன்டர்நெட்டுங்கிறது ரொம்பவே ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஓர் ஆராய்ச்சி. நம்ம மூளை எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு எண்ணிப் பாருங்க! இந்த மாதிரி தொழில்நுட்பங்கள் நம்ம வாழ்க்கையை எப்படி மாத்தும்னு கற்பனை பண்ணிப் பாருங்க!<

இணையத்தில் ‘திங்’ எனப்படும் Internet of things (IOT) என்று சொல்லப்படுவது கணினி. உணரிகள் (Sensor). செயலாக்கும் திறன், மென்பொருள், தொழில்நுட்பங்கள் சேர்ந்தவற்றைக் குறிக்கும். ஒரு செல்பேசி மூலம் நம்ம வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் இயக்குவதில்லையா? அதெல்லாம் இந்த IOTயின் பயன்கள்தாம்.
அப்படி நம்ம மூளையிலும் நினைச்சதை நடப்பில் நடத்தும்படி செய்வதற்கான முயற்சிதான் இந்த ஆராய்ச்சி.

 

2
உழைப்பே உயர்வு!19th August 2026
வந்தால் பெரியாராய்த்தான் வருவேன்! பெரியார் பிஞ்சின் அதிரடி!19th August 2026

மற்ற படைப்புகள்

இசைப்பாடல்செப்டம்பர் 2025பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

இசைப்பாடல் அறஞ்செய்க

Read More
357
செப்டம்பர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

நலமான உடலில் வளமான அறிவு (நினைவில் நிறுத்துவோம்! )

Read More
3
டிசம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

ஆம்பிளைப் பிள்ளை தண்ணிக் குடம் தூக்கலாமா? நம்ம ஊசர் பாட்டி-4

Read More
1567
நவம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி-3 அழிவைத்த ‘செல்’லு!

Read More
25
அறிவியல்ஜனவரி 2025பிஞ்சு 2025
6th January 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

ஒருவரையும் விடக் கூடாது! அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p