செப்டம்பர் 15: அறிஞர் அண்ணா பிறந்தநாள் மேடை முழக்கம் இடியொலிக்கும்!

காஞ்சியில் பிறந்த மாமனிதர்
கன்னல் பேச்சில் பேரறிஞர்
ஆழ்ந்து கற்ற மூதறிஞர்
அண்ணா வாழ்வில் மாண்பாளர்!
கன்னல் போல பேச்சிருக்கும்
கடமையில் அவரின் மூச்சிருக்கும்
மின்னல் போல செயலிருக்கும்
மேடை முழக்கம் இடியொலிக்கும்
கண்ணியம் கட்டுப் பாடிருக்கும்
தம்பிக்குக் கடிதம் மயங்கவைக்கும்
அண்ணாவின் பேச்சில் பொடியிருக்கும்
அண்ணாவின் தொண்டில் உயிரிருக்கும்!
காட்சிக்கு எளியர் அண்ணாதான்
கடுஞ்சொல் அறியார் அண்ணாதான்
ஆட்சியில் சிறந்தவர் அண்ணாதான்
அவனிக்கே ஒருவர் அண்ணாதான்!!<
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை
