நேர்மைக்குபரிசு
ஓர் ஊரில் ஆதன் என்ற சிறுவன் இருந்தான். அவன் வெகுதூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தான். ஒரு மிதிவண்டி வாங்க வேண்டுமென்பது அவனது கனவு. பணம் இல்லாத காரணத்தால் வாங்கமுடியவில்லை.
ஒரு முறை அவன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கையில், தெருவில் கைப்பை (Purse) பர்ஸ் ஒன்று கேட்பாரற்றுக் கீழே கிடந்தது.
அதை எடுத்துத் திறந்து பார்த்தான். உள்ளே கத்தையாகப் பணம் இருந்தது.
அந்தப் பர்ஸை எடுத்துக்கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தான்.
அதைக் கொண்டுபோய் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தான் ராமு.
இதைக் கேட்டு வியப்பு அடைந்த காவல்துறை அதிகாரி…
உனது நேர்மையைப் பாராட்டுகிறேன். உன் பெயரையும் முகவரியையும் கொடுத்துவிட்டுப் போ!
நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்குப் பின்பு ஒரு செல்வந்தர் ஆதனின் வீட்டுக்கு வந்தார்.
தம்பி, எனது பணத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததற்கு மிக்க நன்றி. உனது நேர்மையைப் பாராட்டுகிறேன்.
சிறு வயதிலேயே இவ்வளவு நேர்மையாக நடந்ததற்காக உனக்கு என் அன்புப் பரிசு இந்த மிதிவண்டி. பெற்றுக்கொள்!
அன்று முதல் ஆதன் வெகுதூரத்திலுள்ள பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் சைக்கிளில் சென்று வந்தான்.



