• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

அறிவின் விரிவு-14 சாட் ஜிபிடியை புத்திசாலித்தனம் பயன்படுத்துவோமா சைபர் வினோத் ஆறுமுகம்

Screenshot 2026-08-25 110022
அறிவியல்செப்டம்பர் 2025பிஞ்சு 2025

சாட் ஜிபிடி ஒரு புது நண்பன் மாதிரி,சாட் ஜிபிடி ஒரு புது நண்பன் மாதிரி, இல்லையா? அது கேள்விகளுக்குப் பதில் சொல்லும், கதைகள் சொல்லும். ஏன், சில நேரங்களில் வீட்டுப் பாடம் செய்யக்கூட உதவும். ஆனா, இந்த மாதிரி தொழில்நுட்ப நண்பர்களைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்னு உங்களுக்குத் தெரியுமா?

அண்மைய ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னா, சாட்ஜிபிடி மாதிரியான கருவிகளை நாம அதிகமாப் பயன்படுத்தினா, நம்மளோட மூளை சுறுசுறுப்பா வேலை செய்யறது கொஞ்சம் குறையலாம். நீங்களே யோசிச்சுப் பாருங்க, ஒரு கணக்குப் போடும்போது நீங்க யோசிச்சுப் பார்த்தா உங்க மூளைக்கு வேலை கிடைக்கும். அதே கணக்கை சாட்ஜிபிடி கிட்ட கேட்டா அது உடனே பதில் சொல்லிடும். அப்போ உங்க மூளைக்கு வேலை இல்லாமப் போயிடும் இல்லையா?

அதனால, சாட் ஜிபிடியை எப்படிப் பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம்.

நம்ம மூளை ஓர் அழகான, பெரிய விளையாட்டுத்திடல் மாதிரி! நீங்க ஒரு கடினமான கணக்கைப் போடும்போது, அல்லது ஒரு கட்டுரை எழுதும்போது, அந்தத் திடலில் இருக்கிற எல்லா வீரர்களும் (நம்ம மூளையில் உள்ள செல்கள்) உற்சாகமா ஓடி ஆடி வேலை செய்வாங்க. ஒரு பக்கம் நினைவாற்றல் வீரர் தகவல்களைத் தேடுவாரு, இன்னொரு பக்கம் சிந்திக்கும் வீரர் புதுப் புது கருத்துகளை உருவாக்குவாரு, இன்னொருத்தர் அதை எல்லாம் அழகா வரிசைப்படுத்துவாரு. இப்படி எல்லாரும் சேர்ந்து வேலை செய்யும்போதுதான் உங்க மூளைக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ஆனா, நீங்க சாட்ஜிபிடி கிட்ட அந்த வேலையைக் கொடுத்தா, அது எல்லாத்தையும் தானே செஞ்சுடும். அப்போ உங்க மூளைங்கற விளையாட்டுத் திடல் காலியா, அமைதியா இருக்கும். எந்த வீரரும் ஓடவும் மாட்டாங்க, பயிற்சி எடுக்கவும் மாட்டாங்க.

அதனாலதான், சாட்ஜிபிடியை ரொம்ப அதிகமாப் பயன்படுத்தினா ஒரு பிரச்சனை வரும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய பயிற்சி கிடைக்காமப் போனா, அதோட தசைகள் (சிந்திக்கும் திறன்) கொஞ்சம் கொஞ்சமா பலவீனமாகிடும். அதாவது, நீங்களா யோசிச்சு ஒரு முடிவெடுக்கறதுக்கு, புதுசா ஏதாவது கண்டுபிடிக்கிறதுக்கு, அல்லது படிச்சவற்றை ஞாபகம் வச்சுக்கிறதுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். இதை “அறிவாற்றல் கடன்” (cognitive debt) அப்படின்னு சொல்றாங்க. அது உங்க மூளையைச் சோம்பேறியாக்கி, எல்லாத்துக்கும் சாட்ஜிபிடியை எதிர்பார்க்க வைக்கும். அதனால, சாட்ஜிபிடியை ஒரு உதவியாளனா மட்டும் வச்சுக்கிட்டு, மூளையோட வேலையை நீங்களே செய்யணும். அப்போதான் உங்க மூளை எப்பவும் ஆரோக்கியமாவும் இருக்கும்.

எப்போ பயன்படுத்தலாம்?

=  உங்களுக்கு ஒரு தகவலைப் பத்தி பொதுவா தெரிஞ்சுக்க ஆசை இருக்கும்போது கேட்கலாம்.

=  புரியாத தகவல்களைப் புரியும்படி சுலபமா தெரிஞ்சுக்கக் கேட்கலாம்.

=  உங்களுடைய கருத்துகளை இன்னும் நல்லா டெவலப் பண்ணிக்கிறதுக்கு உதவி கேட்கலாம்.

எப்போ எச்சரிக்கை இருக்கணும்?

=  முழுசா வீட்டுப் பாடத்தையே அதுகிட்ட கொடுத்து செய்யச் சொல்லக்கூடாது. நீங்களா முயற்சி பண்ணி செய்யுறதுதான் உங்க மூளைக்கு நல்லது.

=  அது சொல்ற எல்லாத்தையும் அப்படியே நம்பிடக்கூடாது. சில சமயம் அது தப்பான தகவல்கூட சொல்லலாம். அதனால நீங்க படிச்ச புத்தகங்களைப் பார்த்தும், ஆசிரியரிடம் கேட்டும் உறுதிப்படுத்திக்கோங்க.

=  உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை (உங்க பேரு, பள்ளிக்கூடப் பேரு, போட்டோ) அதுகிட்ட சொல்லவே கூடாது. அது ஒரு ரோபோ மாதிரிதான், எல்லாமே பொதுவானதா இருக்கணும்.

சாட்ஜிபிடி ஒரு நல்ல கருவிதான். ஆனா, அதைச் சரியாவும் கவனமாவும் பயன்படுத்தக் கத்துக்கிட்டா அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். நீங்கதான் உங்களுடைய அறிவை வளர்த்துக்கணும். சாட்ஜிபிடி ஓர் உதவிக்காரனாக மட்டும் இருக்கட்டும். உங்களுடைய சொந்த மூளைதான் ஹீரோ.<

 

2
நேர்மைக்குபரிசு25th August 2026
நிலவையும் குப்பையாக்கி விட்டோமா?-பெருமாள் சாமி சுப்புராஜ்25th August 2026நிலவையும் குப்பையாக்கி விட்டோமா?-பெருமாள் சாமி சுப்புராஜ்

மற்ற படைப்புகள்

டிசம்பர் 2025படக்கதைபிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

விற்றுக் கற்ற பாடம்!

Read More
167
கதைகதை கேளு கதை கேளுநவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

துணை நிழல்கள்(கதை கேளு கதை கேளு)

Read More
9
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 2 : A1 டாக்டர்

Read More
6
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அபி

துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

Read More
2019_dec_a9
அறிவியல்டிசம்பர் 2019
27th November 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை : அய்ன்ஸ்ரூலி

Read More
26
ஆகஸ்ட்2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

கண்கட்டி வித்தை கதை கேளு கதை கேளு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p