சிறார் பாடல் பொம்மையைக் காணோம்

தாத்தா தந்த
பொம்மையைக் காணோம்
பாட்டி தந்த
படங்களைக் காணோம்
அப்பா நீங்கள்
பார்க்கவில்லையா?
அன்பு கூர்ந்து
சொல்கிறீர்களா?
கண்ட இடங்களில்
போட்டு வைத்தால்
காணா மல்தான்
போகும் கண்ணே!
அம்மா எடுத்து
வைத்துள் ளார்கள்
அந்தப் பையைத்
திறந்து பாராய்
பையை உடனே
திறந்து பார்ப்பேன்
படங்களும் பொம்மையும்
பார்த்து மகிழ்வேன்
இனிமே எதனையும்
கருத்துடன் காக்கும்
எண்ணம் கொண்டுநான்
பொறுப்புடன் நடப்பேன்!<
– முரசு நெடுமாறன்






