துணுக்குச் சீட்டு – 30 அபி

மினுக் மினுக்’ என்று விண்மீன் மட்டும் தான் மின்னுமா? விண்மீனுக்குப் போட்டியா, இரவு நேரத்துல, குட்டியா ஒரு பூச்சி மின்னும் பார்த்து இருக்கீங்களா? அதாம்ப்பா, மின்மினிப் பூச்சி! சரி, மின்மினிப் பூச்சி மட்டும் என்ன, அதோட உடம்புல தனியா பல்பா வச்சிருக்கு? அப்படி பல்பு இருந்தாலும், அதோட உடம்புக்குள்ளே எப்படி மின்சாரம் போகுது?
உண்மையா, மின்மினி உடம்புல மின்சாரம் எல்லாம் பாயலைங்க. அதுக்குப் பதிலா, ஒளியை வெளியிடும் ஓர் உறுப்புதான் இருக்கு! இந்த உறுப்பு, எப்படி ஒளியை உருவாக்குதுன்னு பார்ப்போமா?
‘மினுக் மினுக்’ என்று விண்மீன் மட்டும் தான் மின்னுமா? விண்மீனுக்குப் போட்டியா, இரவு நேரத்துல, குட்டியா ஒரு பூச்சி மின்னும் பார்த்து இருக்கீங்களா? அதாம்ப்பா, மின்மினிப் பூச்சி! சரி, மின்மினிப் பூச்சி மட்டும் என்ன, அதோட உடம்புல தனியா பல்பா வச்சிருக்கு? அப்படி பல்பு இருந்தாலும், அதோட உடம்புக்குள்ளே எப்படி மின்சாரம் போகுது?

ஓர் உயிரினத்தின் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால, ஒளியை ஓர் உறுப்பு வெளியிட்டுதுன்னா, அந்த உறுப்பைப், போட்டோபோர் (photophore) என்று சொல்லுவாங்க. இப்படி வேதியியல் மாற்றத்தால் ஒளி வெளியிடப்படுவதுதான் பயோலூமிநெசென்ஸ் (bioluminescence). இப்படி ஒளி வெளியிடுவதுக்கு, ஏதாச்சும் சில வேதியியல் சேர்மங்கள் (chemical compounds) தேவை அல்லவா? அப்படி உதவும் சேர்மங்களை, லுசிபெரின் (luciferin) என்று சொல்றாங்க வேதியியலாளர்கள். இந்த லுசிபெரின், உயிர்வளியுடன் (oxygen) சேரும்போது நடக்கும் வேதியியல் மாற்றத்தால்தான், ஒளியைப் போட்டோபோர் வெளியிடுது.
அப்போ மின்மினிப் பூச்சியின் உடம்பிலும் லுசிபெரின் இருக்கும் அல்லவா? ஆமாம், அந்த லுசிபெரினின்களின் பெயர் கால்சியம் மற்றும் அடநோசின் ட்ரைபாஸ்பெட் (adenosine triphosphate). இவை இரண்டும், உயிர்வளியுடன் சேரும்போதுதான், மின்மினியின் உடம்பில் பல்பு போட்ட மாதிரி வெளிச்சம் வருது.
சரி, நான் ஒரு சேதியை இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன், அத தெரிஞ்சிக்கிட்ட வேகத்துல உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்குறேன், சொல்லவா?
பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. இது, நம்ம கேள்விக்குப் பதிலைத் தேட உதவுற சேதிதான். அதனால, தொடர்ந்து படிங்க. சும்மா சொல்லலை, உண்மையாவே பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அப்போ, நுரையீரல் இல்லாம பூச்சிகள் எப்படி உயிர் வாழமுடியும்? அவை உயிர்வளியின் உதவியோடதான் வாழுது. நாம நுரையீரல் பயன்படுத்துறோம். பூச்சிகள் நுரையீரலுக்குப் பதிலாக, மூச்சுத் துளைகளையும், மூச்சுக் குழாய்களையும் பயன்படுத்துகின்றன.
காற்று, பூச்சியின் உடம்பின் மேற்பரப்பில் இருக்கும் மூச்சுத் துளைகள் மூலமா, பூச்சியின் உடம்புக்குள்ள போகுது, இந்தக் காற்று, மூச்சுக்குழாயின் மூலம், மூச்சுக்குழாயின் நுண்ணிய குழாயினுள்ளே போகுது. இங்கதான், உடம்புக்குத் தேவையான உயிர்வளியைப் பூச்சி எடுத்துக்கிட்டு, தேவை இல்லாத கார்பன் – டை – ஆக்சைடை வெளியிடுது.
இந்த உயிர்வளியை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்தி, பூச்சி உயிர்வாழத் தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. ஆனால், போட்டோபோர் ஒளியை வெளியிடவும், உயிர்வளி தேவையாச்சே! இப்போ உயிர்வளி, செல்லுக்குப் போகுமா? இல்லாட்டி, போட்போருக்குப் போகுமா? இந்த மாதிரி கடினக் காலத்துல, நம்ம உயிர்வளியைக் காப்பாத்தத்தான், அதோட தோழி நைட்டிரிக் ஆச்சைடு வருது.
இன்னொரு சேதி சொல்லவா? நாம நம்மளோட எண்ணங்களை அடுத்தவங்களுக்குப் புரியவைக்க மொழியைப் பயன்படுத்துறோம் இல்லையா? அதே மாதிரி மின்மினிப் பூச்சியும் ஒளியைப் பயன்படுத்துது! அப்போ, எல்லா நேரமும் மின்மினி உடம்புல இருந்து வெளிச்சம் வந்துக்கிட்டே இருக்காது இல்லையா? ஆமாம். என்னதான் நாள் முழுதும் உயிர்வளியைச் சுவாசித்தாலும், மின்மினிதனக்குத் தேவையான நேரத்தில் மட்டும் தான், ஒளியை வெளியிடும். அதுக்குத் தேவை எனப்படும் சமயத்தில், போட்டோபோருக்குள்ளே இருக்குற மூச்சுக் குழாய்களில், நைட்ரிக் ஆச்சைடை உற்பத்தி செய்யுது நம்ம மின்மினி. இந்த நைட்ரிக் ஆச்சைடு, மூச்சுக்குழாயின் செல்களின் மீது படர்ந்து விடும், இப்படிப் படரும் போது, அந்தச் செல்களால், உயிர்வளியை அதுக்குள்ளே இழுக்க முடியாது. இப்படி இருக்கும் போது, உயிர்வளி நேரா போட்டோபோருக்குப் போகுது. இந்த உயிர்வளியை வச்சிக்கிட்டு, போடோபோர் ‘மினுக்’ ஒளியை வெளியிடுது. இப்படித் தான் மின்மினிப் பூச்சி மினுக்குது. நேரம் ஆக ஆக, நைட்ரிக் ஆச்சைடின் ஆற்றல் குறையும், அப்போ மீண்டும் செல்களுக்கு உயிர்வளி போகும்.
அது சரி, மின்மினிப் பூச்சி ஏன் இரவில் மினுக்குது? பதில் அனுப்புறீங்களா?