• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நாம ஊர் பாட்டி-2 யார் இற்க அஞ்சலையம்மா?

Pg 8-9 copy
அக்டோபர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025

எழுத்து ஓவியம் மு கலைவாணன்

கோலம் போட்டு முடித்து விட்டு வீட்டுக்குள் போன பானுமதியிடம்….

“யாரும்மா!. அது… உங்ககிட்ட யாரோ பேசிக்கிட்டிருந்தாங்க?” என்றார் மாமனார் பரமசிவம்.

“மாமா! பக்கத்துத் திண்ணை வீட்டுக்கு ஒரு பாட்டி வந்திருக்காங்க. அந்த வீடே அவங்க வீடு தானாம்! நான் கல்யாணமாகி வந்து அஞ்சு வருசமாச்சு. இது வரையிலே அந்த வீட்டுக்கு யாருமே வந்ததில்லை. இப்ப புதுசா வந்திருக்காங்க ஒரு பாட்டி”.

“அடடே! அஞ்சலையம்மா வந்துட்டாங்களா?” என வியப்போடு கேட்டார் பரமசிவம்.

“ஓ! அஞ்சலையம்மாவா அவங்க பேரு?”  என்றார் பானுமதி.

தனது அறையிலிருந்து வெளியில் வந்த விஜய் “பக்கத்து வீட்டுக்கார அஞ்சலையம்மாவா வந்துருக்காங்க…?” என்றார்.

“அட… ஏங்க உங்களுக்கு அந்த பாட்டியம்மாவைத் தெரியுமா?” என்றார் பானுமதி.

“உன்னை மாதிரித்தான் நானும்… எனக்கும் அஞ்சலையம்மாவைப் பத்தி ஒன்னும் தெரியாது அப்பப்ப… அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்…” என்றார் விஜய்.

“அவங்களைப் பத்தி ஏதும் தெரியாமத்தான் பெருசா தெரிஞ்ச மாதிரி கேட்டீங்களா? சரி…சரி… இருங்க, உங்க ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டு வரேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்தார் பானுமதி.

சற்று நேரத்தில் காப்பியுடன் வந்தார்  பரமசிவமும் அவர் மகன் விஜய்யும் காப்பியை எடுத்து கொண்டனர்.

“அவங்க அப்பா பன்னீர்செல்வம் தான் இந்த ஊர்லையே அதிகம் படிச்ச பெரிய மனுஷன். தன் ஒரே மகளுக்கு அன்னைக்கு இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாப் போராடுன போராளியான அஞ்சலையம்மா பேரை வச்சாரு.          இந்த அஞ்சலையம்மா நல்லா படிச்சாங்க. கல்லூரிப் படிப்பை முடிச்சு டீச்சர் வேலைக்குப் போகனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க ஆனா… அதுக்குள்ள நல்ல மாப்பிள்ளை கிடைச்சாருனு கல்யாணம் செஞ்சு வைச்சுட்டாங்க சென்னைக்குப் போயிட்டாங்க அஞ்சலையம்மா.

அவங்க அப்பா வெளிநாட்டுக்கு விமானத்தில போகும்போது விபத்துல இறந்து போயிட்டாரு. உடம்பு கூட கிடைக்கல. அதே கவலையில அவங்க மனைவியும் ரெண்டு மாசத்தில இறந்துட்டாங்க. அப்ப… இருந்து இந்த வீடு பூட்டியே கிடக்குது.”

“இப்பத்தான் பாட்டி வந்துட்டங்களே! அவங்க வீட்டுக்காரரு இறந்துட்டாராம். ஒரே பையன் வெளிநாட்டுல இருக்குறாராம். கடைசிக் காலத்துல இங்கே இருக்கலாம்னு வந்திருக்காங்களாம்.!” என்று மீதியைச் சொன்னார் பானுமதி.

“அப்பா! விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலையம்மானு சொன்னீங்களே… அவங்க யாருப்பா?” என விவரம் தெரியாமல் கேட்டார் மகன் விஜய்.

“அவங்க ரொம்பத் தைரியமான பெண்!” 1857லே சிப்பாய்க் கலகம் நடந்தப்ப… சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த சிப்பாய்களையும், பொது மக்களையும் ஈவு இரக்கம் இல்லாமக் கொன்னு மரக்கிளையிலே தொங்க விட்டான் ஆங்கிலேயப் படைத்தளபதி கர்னல் ஜேம்ஸ் நீல். அவனுக்குச் சென்னையில சிலை வச்சாங்க.

அப்போ… கோவத்தோட வீராவேசம் அடைஞ்சாங்க சுதந்திரப் பேராளி அஞ்சலையம்மா. அந்த வெள்ளைக்காரன் சிலையைக் கோடரியைக் கொண்டு சேதப்படுத்தினாங்க.

அதுக்காகச் சிறையில போட்டாங்க. 9 வயசு மகள் அம்மாக்கண்ணுவோட ஜெயிலுக்கு போனாங்க. இப்படிப்பட்ட விடுதலை வீராங்கனையோட பேரைத்தான் இந்தப் பாட்டிக்கு வச்சாங்க.

காந்தியாரு அஞ்சலையம்மாவப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனா வெள்ளைக்காரன் அதுக்கும் தடை போட்டான்.

ஆனா, அஞ்சலை அம்மா பர்தா போட்டுக்கிட்டு ரகசியமா வந்து காந்தியாரைப் பார்த்துட்டுப் போனாங்க.

அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட காந்தி, ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ன்னு பாராட்டுனாரு! அதே மனவலிமையும் தைரியமும் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற அஞ்சலைப் பாட்டிக்கும் உண்டு!

பள்ளிக் கூடத்துல படிக்கும் போதே ரொம்பத் தைரியமா அடுத்த பசங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஓடி வந்து நிக்கும் இந்த அஞ்சலை.

“கொஞ்ச நேரத்துல  நான் குளிச்சிட்டுப் போயி அவங்களைப் பார்த்திட்டு வர்றேன்.”

“அம்மா… பானுமதி…  மாமியார் இல்லாத இந்த வீட்டுல நீ பெண்ணா தனியா இருக்கியேன்னு பல நேரம் பயந்ததுண்டு. இனி எனக்கு அந்தக் கவலையே இல்லை. உனக்கு அந்த பாட்டி ரொம்பவும் துணையா இருப்பாங்க. கவலையே படாதேம்மா.”

“சரிங்க மாமா! சீக்கிரம் குளிச்சிட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. நான் டிபன் ரெடி பண்றேன்” என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தார் பானுமதி.<

(பாட்டியின் லூட்டி தொடரும்)

 

2
குழந்தைப் பாடல்கள் நூறு25th August 2026
சின்னக்கைச் சித்திரம்25th August 2026

மற்ற படைப்புகள்

எண்ணிப்பார் 7 வேறுபாடுநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

புள்ளிகளை இணையுங்கள்!

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

பெரியார் பிஞ்சு பழகு முகாம் கற்றுத் தரும் பாடம் என்ன?

Read More
அக்டோபர் 2025சுடோகுபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
1
டிசம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

புரட்சியாளர் இவர்போலே …

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p