• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

தோல்வி அனுபவமும் பிள்ளைகளுக்கு வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம் )

Pg 16-17 copy
அக்டோபர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025

சிகரம்

பிள்ளைகளை வளர்க்கும்போது பெற்றோரின் பங்கு முதன்மை இடத்தைப் பிடிக்கிறது. சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது பிள்ளைகளுக்கு எந்தப் பாதிப்பும், சிரமமும், இடரும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பர்.

பிள்ளைகளின் வாழ்வை அவர்களே வாழ்வர். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி வாழவிட மாட்டார்கள். தங்கள் விருப்பப்படி பிள்ளைகள் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவர் – ஒரு திரைப் படத்தில் பிரகாஷ்ராஜ் செய்வது போல!

பிள்ளைகளுக்குப் பெரியவர்களும், பெற்றோரும் வழிகாட்ட வேண்டும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூற வேண்டும். மாறாக பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் இவர்களே செய்தல் கூடாது.

பிள்ளைப் பருவத்தில் முதல் நிலையில் குழந்தைகளுக்கு எதையும் அவர்களாகவே செய்து கொள்ள முடியாது. உண்ணுதல், உடுத்துதல், குளித்தல், கழிவுகளை வெளியேற்றித் தூய்மை செய்தல் எல்லாம் பெற்றோர்தான் செய்ய வேண்டியிருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அது குறிப்பிட்ட வயதுவரை தான். செய்யும் திறன், தகுதி வந்தவுடன் மெல்ல மெல்ல அவர்களே அவற்றைச் செய்யும்படி பழக்க வேண்டும். அப்படிப் பழக்கும் போது பெற்றோர், அல்லது பெரியோர் உடன் இருந்து உதவ வேண்டும்.

மாறாக, பிள்ளைகளே தங்கள் வேலைகளைச் செய்யும் தகுதி வந்த பிறகும் பெற்றோரோ அல்லது பெரியவர்களோ அவ்வேலைகளைச் செய்து கொண்டிருப்பது பிள்ளைகளின் செயல் திறனைப் பாதிப்பதோடு, அவர்களின் தன்முயற்சியைப் பாதிக்கும். அவர்களுக்கு எந்தவொன்றையும் தானே செய்து கொள்ளும் ஆற்றலை, பயிற்சியைத் தடுக்கும். எதற்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும்.

குழந்தைகளின் இயல்பு – எதையும் தானே செய்ய முற்படுவது. அப்படிப்பட்ட குழந்தைகளை நாம் துணைநின்று ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து “சர்க்கஸ் ரிங்மாஸ்டர்” போல ஆட்டுவித்தல் கூடாது.

பிறந்தவுடன் படுத்தேயிருக்கும் குழந்தை அடுத்து புரண்டு படுக்கும், பின் கவிழ்ந்து படுக்கும், அதன்பின் மெல்ல நகரும், சில மாதங்கள் ஆனதும் தவழும், முட்டிப்போட்டு நகரும், பிறகு எழுந்து நிற்கும். நிற்கும் போது கூட அடிக்கடி கீழே விழும், பின் அதுவே எழும். அதன்பின் மெல்ல மெல்லத் தடுமாறி நடக்கும். அந்நிலையில் அடிக்கடி விழும். உடனே பிள்ளைக்கு அடிபடும் என்று கையைப்பிடித்துக் கொண்டே நடக்க வைப்போம்.

அவ்வாறு கையைப் பிடித்துக் கொண்டு நடக்கவைக்கும் போது தொடர்ந்து கையைப் பிடித்துக் கொண்டே நடக்கச் செய்யக் கூடாது. இடையிடையே நாம் கையைப் பிடிக்காமல் நடக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் சில நாட்களிலே நம் கையைப் பிடிக்காமலே குழந்தை தானே நடக்கும்.

மாறாக, நாம் எப்பொழும் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டே நடக்கச் செய்தால், அது தானே நடக்கும் திறனை இழக்கும். சைக்கிள் ஓட்டப் பழகும்போது துணைக்கு வருபவர் தொடர்ந்து சைக்கிளைப் பிடித்துக் கொண்டிருக்கமாட்டார். கொஞ்ச தூரம் பிடித்துக் கொண்டே ஓடிவருவார். பிறகு பிடித்திருக்கும் கையை விலக்கிக் கொண்டு அருகிலே ஓடுவார். பழகுபவர் சாய்ந்தால் பிடித்து நிமிர்த்தி ஓட்டச் சொல்வார். பிறகு கையை எடுத்து விடுவார்.இப்படிப் பழகும் போது சில நாள்களிலே தானே ஓட்டும் பயிற்சி பழக்கத்தால் கிடைக்கும். அப்படித்தான் பிள்ளைகளையும் ஒவ்வொரு செயலிலும் பழக்க வேண்டுமே தவிர, நாமே செய்து கொண்டிருக்கக் கூடாது.

எப்படி விழாமல், அடிபடாமல் நடக்க முடியாதோ, சைக்கிள் ஓட்டக் கற்க முடியாதோ, அப்படியே தோல்வியே காணாமல் இடர்களை எதிர்கொள்ளாமல் பிள்ளைகள் எதையும் கற்க முடியாது.

விளையாட்டில், படிப்பில், போட்டிகளில் தோல்வியென்பது தவிர்க்க முடியாதது. தோல்வி வரத்தான் செய்யும். அந்தத் தோல்வியைக் கண்டு துவளாமல், சோர்ந்து போகாமல், தொடர்ந்து முயலும் உள்ள உறுதியை – முனைப்பை பிள்ளைகளுக்கு நாம் உருவாக்க வேண்டும்.தோல்வியென்பதும் இயல்புதான், தவிர்க்க முடியாததுதான் என்பதை அறியும்படிச் செய்ய வேண்டும்.

தோல்வியே வந்துவிடக்கூடாது என்று பிள்ளைகளை வாட்டி வதைத்தால் அது பிள்ளைகளின் உளநிலையைப் பெரிதும் பாதிக்கும். பெற்றோரும் மன உளைச்சல் அடைவர்.

பிள்ளைகள் தோல்வி அடையும்போது “கவலைப்படாதே! எல்லோரும் தோல்வியைச் சந்திப்பர். தோல்வியடையும் போது இத்தோல்வி எதனால் வந்தது என்று சிந்தித்து, காரணத்தைக் கண்டறிந்து, அதைச் சரி செய்து, மீண்டும் முயல வேண்டும்” என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

தம் பிள்ளைகள்தாம் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று எல்லா பெற்றோரும் முயல்வர். அது நடக்க கூடியதா? யாராவது ஒரு பிள்ளை தான் முதல் மதிப்பெண் பெற முடியும். உண்மை நிலை அப்படியிருக்க, நம் பிள்ளை முதல் மதிப்பெண் பெற முடியவில்லையே என்று கவலை கொள்வதோ, அதற்காகப் பிள்ளைகளைத் தண்டிப்பதோ தப்பாகும்.

தேர்விலோ, விளையாட்டுப் போட்டியிலோ அல்லது பிற போட்டிகளிலோ பிள்ளைகள் பங்கு பெறும்போது, தோல்வியே அடையக் கூடாது என்று பிள்ளைகளை நெருக்கினால் அவர்கள் மன உளைச்சல், மன இறுக்கம் கொள்வர். அது அவர்களுக்கு அந்தப் போட்டியின் மீது வெறுப்பை உருவாக்கும். தோற்று விடுவோமோ என்ற அச்சம் அவர்களின் ஆர்வத்தைக் கெடுக்கும்.

‘முடிந்த அளவுக்கு முயற்சி செய்! இந்த முறை தோற்றால் அடுத்த முறை வெற்றிபெறலாம்’ என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினால் அவர்கள் மன இறுக்கமின்றி ஆர்வமாய்ப் போட்டியிடுவர்.

தோல்விகள் ஒருவரைச் செம்மைப்படுத்தும்; தோல்விகள் திறமையை வளர்க்கும்; தோல்விகள் தான் ஒன்றில் ஆழ்ந்த நுட்பங்களைக் கண்டறிய உதவும். அறிவியல் அறிஞர்கள் பலரும் பல முறை  தோற்றுத்தான் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இந்த உண்மையைப் பெற்றோர்கள் முதலில் உணர்ந்து பிள்ளைகளும் உணரும்படிச் செய்ய வேண்டும். நாம் தோற்கும்போது வேறு ஒருவர் வெற்றி வாய்ப்பைப் பெறுகிறார் என்பதை, எண்ணி மகிழ வேண்டும். மாறாகப் பொறாமை, காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது.

இந்த மாண்பு பெற்றோருக்கு முதலில் வேண்டும். பிள்ளைகளுக்கு இந்த மாண்பை உருவாக்க வேண்டும்.<

1
உழைக்காமல் கிடைக்கும்  பணம்?(சமூக ஊடகத்திலிருந்து....)உழைக்காமல் கிடைக்கும் பணம்?(சமூக ஊடகத்திலிருந்து....)25th August 2026
கடந்த இதழ் கணிதப் புதிர் சுடோகு விடை25th August 2026

மற்ற படைப்புகள்

Pg 20-21 copy
அக்டோபர் 2025இயற்கைபிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

அக்கம் பக்கம் PACIFIC OCEAN யாருமில்லா …(இயற்கை )

Read More
Pg 6-7 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்
27th August 2026 by Periyar Pinju

16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த ‘பெரியார் பிஞ்சு’ ஷிவாங்க்! (பெருமிதம்-1)

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

புன்னகை இளவரசி

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

புள்ளிகளை இணையுங்கள்!

Read More
1637
தூணுக்குச் சீட்டுநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p