அக்கம் பக்கம் PACIFIC OCEAN யாருமில்லா …(இயற்கை )

சுதர்சன் ராஜசேகர்

“அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” என்று யாராவது அண்ணாவோ, அக்காவோ பாடிக் கொண்டிருந்தால். “பூமி எல்லாம் கிடைக்காது. ஒரு தீவு இருக்கு? போறியா?” என்று கேட்கலாம். ஆம், தனிமையை விரும்பும் மனிதர்களுக்கான ஓர் இடம் இருக்கிறது. அது, பாய்ன்ட் நீமோ. இதுவே உலகின் மிகத் தனிமையான இடம் என்று குறிப்பிடப்படுகிறது.
பூமியில் இருக்கும் இடத்தைவிட விண்வெளியில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையம் இதற்குப் பக்கமாக உள்ளதாம். அதாவது 417 கி.மீ.
கைவிடப்பட்ட விண்கலங்களை இங்கு வரவழைத்து அழிக்கிறார்களாம். அந்த அளவுக்குத் தனிமையான இடம்.
ரொம்பத் தனிமை தேவைப்பட்டால் அங்குச் சென்று வரலாம்.. கேப்டேன் நீமோ நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தீவு தென் பசிபிக் பகுதியில் ஏறத்தாழ 48˚ 52.6’3 123˚ 23.6w என்ற இடத்தில் அமைந்துள்ளது. எந்தக் கண்டத்துடனும் நெருங்காமல் தொலை தூரத்தில் இருப்பதால், இது உயிரியல் பாலைவனம் என்று சொல்லும் அளவில் ஆள்அரவமற்றே இருக்கிறது.<



