விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)

நாம் அனைவருமே வட்டரங்கிற்கு (சர்க்கஸ்) வேடிக்கை பார்க்கச் சென்று இருப்போம் அல்லவா! அங்கு நகைச்சுவையின் மூலமாக நம்மை மகிழ்விக்க வருகை தரும் விகடக்காரர் (கோமாளி) தங்களது உடல்மொழி மூலமாக நகைச்சுவையை ஏற்படுத்தி பார்வையாளரையும் மகிழ்விக்கும் ஒரு கலைஞர் முகத்தில் வண்ணப் பொடி கொண்டு அலங்கரித்தும் தலையின் மேலே கூர்மையான வண்ணத் தொப்பி அணிந்திருப்பார். இவரது உடலசைவுகளும், வேடிக்கைச் செய்கைகளும் நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதுபோல் அமைந்து, அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும் இத்தகு பெருமைமிக்க விகடக்காரரை ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் எவ்வாறு வரையலாம் என்பதைக் காண்போம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் V, D, C மற்றும் O. வாங்க வரையலாம்.
‘V’ எழுத்தைப் படத்தில் காட்டியபடி தலைகீழாகவும் சற்றே சாய்வாகவும் எழுதவும்.
Vஇன் அடிப்பகுதியில் ‘D’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
Dஇன் உட்பகுதியில் ‘C’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும். இது இமையாகும். Cஇன் அடிப்பகுதியில் ‘D’ எழுத்தைத் தலைகீழாக எழுதி, அதன் உட்பகுதியில் ‘U’ எழுத்தை எழுதிக் கொண்டால் கண், இமை கிடைத்து விடும்.
இரு கண்களுக்கு இடையே படத்தில் காட்டியபடி ‘O’ எழுத்தை எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிடவும்.
படத்தில் காட்டியபடி அழகுபடுத்திக் கொண்டால் அழகிய கோமாளி கிடைத்துவிடுவார்.<




