• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கொஞ்சம் ‘ஹெல்ப்’ பண்ணுங்க!(கதை கேளு கதை கேளு)

1591
அக்டோபர் 2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025

விளியன்

இரவு நேரம். ஒன்பது மணிக்கே படுக்கையறைக்கு நால்வரும் வந்துவிட்டோம். மகள் குழலி தன் வீட்டுப் பாடத்தில் சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தாள். வாசலில் தொம் தொம் தொம் எனச் சத்தம். “விழியன் சார்..” என்று குரல் நன்றாகக் கேட்டது. யாரது இந்த நேரத்தில் என்று வெளியே வந்து விளக்குப் போட்டு, முன் வாசலுக்குச் சென்றேன். எங்கள் வீடு இரண்டாம் தளத்தில் இருக்கு. ‘லிப்ட்’ வசதி இல்லை. பெரும்பாலும் யாரும் ஏறி வரமாட்டார்கள். அதுவும் வருவதென்றால் ஃபோன் செய்துவிட்டு வருவார்கள். இரவு நேரத்தில் நிச்சயம் யாரும் வரமாட்டார்கள். வாசலில் யாரையுமே காணவில்லை. திகிலாக இருந்தது. அண்மையில் இப்படி அழைத்து, வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்துவிட்டனர். விழியன் என்று பெயர் சொல்லி அழைத்தது நன்றாகக் கேட்டதே!

ஆனால், வாசலில் யாருமில்லை. பிரமை என நினைத்தேன். வாசல் கதவைச் சாத்தும்போது மீண்டும் விழியன் சார்..அப்போதுதான் படிக்கட்டுகளைக் கவனித்தேன். சுமார் நானூறு ஷார்ப்னர்கள் அங்கே இருந்தன. விதவிதமான ஷார்ப்னர்கள். அங்கே இருந்துதான் விழியன் என்ற சத்தம் வந்தது.

“யாரு?”

“நாங்கதான், ஷார்ப்பனர்கள்..”

இந்த நேரத்தில் ஏன் வந்திருக்கீங்கன்னு கேட்க நினைத்தேன். அதற்குள் மஞ்சள் நிற ஷார்ப்னர் ஒன்று, “உங்க வாட்ஸப்பை பாருங்க… எங்க குழுவுல இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கும்” என்றது. என்னங்கடா, ஷார்பனர்களுக்கு வாட்ஸப் குரூப்பா என யோசித்தேன். பாக்கெட்டில் இருந்த அலைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். 4 வரிகளில் 5 தவறுகள் இருந்தன. ஷார்ப்பனர்களை எடுத்து வரக்கூடாது என்று இவர்களைத் தொந்தரவு செய்துள்ளது. படித்துவிட்டு படிக்கட்டில் இருந்த ஷார்ப்பனர்களைப் பார்த்தேன்.

“நீங்க வாங்க” என்றன.

“வாங்களா?… எங்கே?” என்றேன்.

அந்த பிரின்சிபல் வீட்டுக்குப் போய் உடனே இந்தத் தகவலைத் திரும்பப் பெற வைக்க வேண்டும் என்றன. இதைப் பற்றி நான் எழுதுறேன் என்றேன். அந்தக் கதை எல்லாம் வேணாம் என்றன. வீட்டுக்குள் சென்று வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு படிக்கட்டிலிருந்து இறங்கினேன். ஒரு சின்ன வேலை இருக்கு என்று வீட்டில் சொன்னேன். ஷார்ப்பனர்கள் எல்லாம் படிக்கட்டின் வழி இறங்கவில்லை. மாறாக மேலே இருந்து ‘தொபக்கடீர்!’ என்று தரைத்தளத்தில் குதித்தன.

கீழே வண்டியை எடுக்கலாம் என வாகன நிறுத்துமிடம் சென்றேன். அங்கே ஆயிரக்கணக்கான ஷார்ப்னர்கள் நின்று கொண்டு இருந்தன. இவர்களுக்கு உதவவில்லை என்றால் பெரும் கலவரம் நடக்கும்போல என நினைத்தேன்.

“பிரின்சிபல் வீட்டுக்கு வழியை வாட்ஸப்பில் அனுப்பி இருக்கோம்” என்றது சிகப்பு நிற ஷார்ப்பனர்.

‘Technology has improved so much’ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஆனால், ஆயிரக்கணக்கான ஷார்ப்னர்கள் இருந்தும் ஒரு சின்ன நீல நிற ஷார்ப்பனர் எல்லார் முன்னிலையிலும் வந்தது.

“ஹலோ, நீங்கதானே பென்சில்களின் அட்டகாசம் கதை எழுதினது?” எனக் கேட்டது.

“ஆமாம்” என்றேன் – மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும்.

“இதுல என்ன மகிழ்ச்சி. அதுல நாங்க என்னவோ வில்லன் கேரக்டர் மாதிரி எழுதி வெச்சிருக்கீங்க” என்றது. மவுனமாக நின்றேன்.

“யோசிச்சுப் பாருங்க. நாங்க இல்லைன்னா பசங்க எப்படி பென்சிலைச் சீவுவாங்க? ‘Blade’ எவ்ளோ ஆபத்து! கத்தி வெச்சு சீவ முடியுமா? நாங்க பசங்களுக்கும் பாதுகாப்பு, பென்சில்களுக்கும் பாதுகாப்பு. ப்ளேடு வச்சு சீவுனா இன்னும் வேகமா பென்சில் கரைஞ்சிடும் தெரியுமில்லே! சில குட்டிப் பசங்க பென்சிலை ஷார்ப்பனரில் சீவி விளையாடத்தான் செய்வாங்க. அப்படிச் சேட்டை செய்யற பசங்க 3 பென்சில் இல்லை, 30 பென்சில் கொடுத்தாலும் சீவிச் சீவி கூர் முனைய உடைச்சிர்க்கிட்டே இருப்பாக. போய், நீங்க செய்த தப்பைச் சரி செய்யுங்க. அந்த பிரின்சிபல்கிட்ட எங்களுக்காக வாதாடுங்க” என்றது.

ஒரே நிசப்தம்…

“வருந்தினேன். திருந்தினேன்” என நினைத்துக்கொண்டேன்.

வண்டியில் சாவியைப் போட முயன்றேன். சாவி ஓட்டைக்குள் போகவில்லை. ஓட்டையில் ஏதோ அடைக்கப்பட்டு இருந்தது. என்னாச்சு என ‘டார்ச் லைட்’ அடித்துப் பார்த்தேன்.

காலடியிலிருந்து ஒரு குரல் “வருந்தினேன் திருந்தினேன்”. இது யாரு?

நட்ராஜ் பென்சில் ஒன்று. “என் பெயர் சிலோ. ஷார்ப்பனர்கள் எங்க எதிரிங்கன்னு நெனச்சோம். அதனால் அவங்களுக்கு உதவப்போகும் உங்களைத் தடுக்க நினைச்சோம். சாவி ஓட்டையில் பென்சில் கூர்களால் நிரப்பியுள்ளோம். உங்க டயரையும் பஞ்சராக்க நினைச்சோம். ஷார்ப்பனர் பேசின பிறகுதான் புரிந்தது. “வருந்தினோம் திருந்தினோம்” என்றது. தாக்க வந்த ஷார்ப்பனர்கள் அமைதியாகின.

என்னைப் போகவிடாமல் தடுக்க 97 பென்சில்கள் கூடி இருந்தன. வழியெல்லாம் தடை ஏற்படுத்தத் திட்டம் போல. அடப்பாவிங்களா! இப்போது ஆயிரக்கணக்கான ஷார்ப்பனர்களுடன் பென்சில்களும் பிரின்சிபல் வீட்டை நோக்கிக் கிளம்பினோம்.

என் பின் இருக்கையில், என் பாக்கெட்டில், என் தலையில், காலடியில் என ஸ்கூட்டர் முழுக்க ஷார்ப்னர்கள். இடைப்பட்ட இடங்களில் எல்லாம் பென்சில்கள் அமர்ந்து கொண்டன. 113 அடி சென்றிருப்போம். சாலை டடங்கா புடங்காவென்று இருந்தது. க்க்… குலுங்கியது வண்டி.

“விழியன் சார்! எப்பத்தான் இந்த ரோடு எல்லாம் சரியாகும். நீங்கள் எழுதறீங்க, அழறீங்க, கதர்றீங்க. ஆனா, ஒன்னுமே நடக்கமாட்டேங்குது”

“மிஸ்டர் ஷார்ப்பனர், இப்ப நம்ம இலக்கு உங்களைப் பள்ளிக்கு அனுமதிப்பது” என்று கறாராகப் பேசினேன்.

பிரதானச் சாலையை அடைந்தோம்.

”இங்க வண்டிய நிப்பாட்டுங்க” என்றது HB பென்சில் ஒன்று.

“பசங்க ஹோம்வொர்க், ஆர்ட்வொர்க் எல்லாம் செய்யாம காத்திருப்பாங்க. நாங்க இறங்கி வீட்டுக்குப் போகிறோம்” என்றது.

ஒவ்வொரு பென்சிலாக இறங்கிக்கொண்டன. ஷார்ப்பனர்கள் சிலது வழியில் குதித்து தத்தமது வீடுகளுக்கு சென்று இருந்தன.

“எல்லாரும் போயிட்டா எப்படி ?” என்றேன் ஷார்ப்பனர்களைப் பார்த்து.

“உங்களை நம்பறோம் விழியன் சார்..” என்றபோது கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது.

நானும் நீல நிற ஷார்ப்பனர் மட்டும் இருந்தோம்.

“என்னாச்சு?” என்றது அந்த ஷார்ப்பனர்.

“ஃபீலிங்ஸ்” என்றேன்.

“அதை ஓர் ஓரமா உட்கார வெச்சுட்டு பிரின்சிபல் வீட்டுக்கு விடுங்க. எல்லாக் கதையிலும் ஒரு அழுகையை சேர்த்துக்கிறது” என்றது.

மேப்பைப் பார்த்து பிரின்சிபல் வீட்டுக்கு வண்டியை ஓட்டினேன், அமைதியாக.<

1
விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)26th August 2026
ஊர்ட் மேகம் (OORT CLOUD) வானியல்26th August 2026ஊர்ட்  மேகம்  (OORT CLOUD) வானியல்

மற்ற படைப்புகள்

16
கதைசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
9th September 2023 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 11 : சுடு தண்ணியும் பச்சத் தண்ணியும் !

Read More
சுடோகுடிசம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More
2018_feb_s4
கதை கேளு கதை கேளுபிப்ரவரி
1st February 2018 by - விழியன்

சிங்காங்

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

மீன் தொட்டி

Read More
5
கதை கேளு கதை கேளுநவம்பர் 2023பிஞ்சு 2023
1st November 2023 by விழியன்

லாலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p