• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மக்களிடம் பேசிய பெரியார் (நடந்த கதை-8)

157
அக்டோபர் 2025நடந்த கதைபிஞ்சு 2025

விஷ்ணுபுரம் சரவணன்

பெரியாரை மட்டும்தான் கேரளாவில் இருந்து வைக்கம் போராட்டத்துக்கு அழைச்சிருந்தாங்களா அம்மா?”

“இல்லை செழியா… தலைவர்களைக் கைது செய்ய ஆரம்பிச்சதுமே பெரியார், ராஜாஜி உள்ளிடவங்கள அழைச்சாங்க. சிலர் வைக்கம் போறதுக்கு ஆர்வம் காட்டல. ஜாதிக்கு எதிரான போராட்டம்னா முதல் ஆளா களம் இறங்குறது பெரியார்தானே.. அதனால அவர் புறப்பட்டுட்டாரு”

“சரிங்க… அப்பறம் என்னாச்சு?”

“வைக்கம், சேர்த்தலை, ஆலப்புழை உள்ளிட்ட இடங்கள்ல மக்களைப் பார்த்து நடக்கிற போராட்டத்தோட நியாத்தை எடுத்துச் சொன்னாரு”

“போராட்ட இடத்தை விட்டுட்டு அங்கிட்டு எதுக்கு போகணும்?”

”நம்ம போராட்டத்துல நியாயமான காரணம் இருந்தாலும், தீவிரமா போராடணும்னு நாம உறுதியா இருந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால்தான் போராட்டம் வெற்றி அடையும்… இதை நல்லா புரிஞ்சவர்தான் பெரியார். அதனால வைக்கத்தைச் சுற்றி இருக்கிற ஊர்கள்ல வாழும் மக்கள்கிட்ட பேசினாரு”

“ஓ! சரிதான்”

”தமிழ்நாட்டுல இருந்து கோவை அய்யாமுத்து உள்ளிட்டவங்களும் போராட்டக் களத்துக்கு வந்திட்டாங்க”

“நிஜமாகவே மக்கள் போராட்டத்துல உணர்வோடு கலந்துகிட்டாங்களா அம்மா? ”

”இந்தச் சந்தேகம் ஏன் செழியா?”

“இல்லம்மா.. தலைவர்கள பத்தியே சொல்றீங்க… மக்கள் எப்படி இந்தப் போராட்டத்துல கலந்துகிட்டாங்கன்னு சொல்லலியே”

”சரியான சந்தேகம்தான் செழியா… 1924ஆம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தெருவில் நுழையும் போராட்டம் தொடங்கினது இல்லையா?”

“ஆமாம். தெருவுல நடக்கக்கூடாதுனு சொல்ற ஜாதியில ஒருத்தரும் மற்ற ஜாதிக்காரங்க இரண்டு பேரும் போனாங்க.. ஒவ்வொரு நாளும் நடந்ததைப் பற்றி சொன்னீங்களே”

“ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்த சத்தியாகிர ஊர்வலத்துல புலையர் ஜாதியைச் சேர்ந்த ஒருத்தர் கலந்துகிட்டாரு…”

சொல்லிவிட்டு அம்மா சில நொடி மெளனமானார். என்ன சொல்லப்போகிறார் என ஆவலோடு காத்திருந்தான் செழியன்.

“அவருக்கு வயது எழுபத்து அய்ந்து”

“என்னது… எழுபத்தி அஞ்சா?”

“ஆமா செழியா… காவல் துறையினர் அடக்குமுறை அதிகமான அந்த நேரத்துலேயும் யாருக்கும் பயப்படாமல் துணிச்சலோட ஊர்வலத்துக்கு வந்தார்… இதுவே மக்கள் ஆதரவு இந்தப் போராட்டத்துக்கு இருந்துச்சுனு புரிய வைக்குது இல்லையா?”

“ஆமாம்மா… இவ்வளவு ஆதரவு வர்றதைப் பார்த்து எதிராளிங்க எதுவும் செய்யலையா?”

“அதெப்படி சும்மா இருப்பாங்க… அன்னிக்கு மாலையில உயர் ஜாதி இந்துக்கள் ஒன்னு கூடி ஒரு கூட்டம் போட்டாங்க. இந்தச் சத்தியாகிரக ஊர்லத்தைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்தச் சொல்லிட்டு இருந்தாங்க. கடைசியா ஒரு முடிவு எடுத்தாங்க. அரசாங்கம் இந்தப் போராட்டக்காரர்கள்கிட்ட இன்னும் கடுமையா நடந்துக்கணும்னு மனு கொடுப்பதே அந்த முடிவு”

“ஏற்கெனவே தெருவில நுழைஞ்சா தடுத்து இழுக்கிறாங்க… அதுக்காக சாப்பிடாம பட்டினி வேற கிடக்கிறாங்க… இதுல இன்னும் கடுமையான என்ன பண்ணுவாங்க”

“அடிதடினு என்ன வேணாலும் நடக்கும் செழியா… பட்டினிப் போராட்டம் இருந்தவங்க கிட்ட காந்தி சாப்பிடச் சொன்னதை ஒத்துகிட்டாங்க. இப்படி ஒவ்வொரு கட்டத்தையும் காந்திக்கு தெரியப்படுத்திட்டு இருந்தாங்க”

“அப்பறம் என்னாச்சு?”

“போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுறதைப் போலவே தன்னார்வலர்களையும் வரவைக்கும் முயற்சியில பெரியார் இறங்கினாரு. கூடவே பணம் தேவைப்படும் இல்லையா… நிதி திரட்டவும் செய்தார்”

“ம்ம்”

“அப்போ, அங்குள்ள கரபுரம் ஈழவர் இளைஞர் கழகத்து விழா நடந்தது. அதுக்கு பெரியாரை அழைச்சிருந்தாங்க. ஜாதி, மதம் குறித்தும் வைக்கம் போராட்டத்தைப் பத்தியும் நீண்ட உரை ஆற்றினாரு பெரியார்”

“மலையாளத்துலேயா?”

“இல்ல செழியா… பெரியார் தமிழில்தான் பேசினாரு. அங்கிருந்தவர் அதை மலையாளத்துல மொழிபெயர்த்துச் சொன்னார்”

“ஓ..”

”ஏப்ரல் 17 ஆம் தேதி சீனிவாச அய்யங்கார் அங்கே வந்தார்”

“அவர் யாரும்மா?”

“அவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்ல ஒருத்தர். சென்னை மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்”

“ம்ம்ம்… அவர் வைக்கம் போனப்ப என்னாச்சு?”

“வைக்கம் கோயிலைச் சுத்தியுள்ள தெருக்களை எல்லாம் பார்த்தார். அவரோட மாவட்ட நீதிபதி, காவல் துறையைச் சேர்ந்தவங்க எனப் பலரும் போனாங்க. அவர் விடுதியில தங்கியிருந்தப்ப, ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் அவரைப் போய் பார்த்து பேசினாங்க”

“என்ன பேசினாங்க?”

“எந்தக் காரணத்தை வைச்சும் அந்தத் தெருவை பொதுவானதா மாத்த முடியாதுன்னு அழுத்தமாக சொன்னாங்க. அரசாங்கம் இவங்க எண்ணத்துக்கு எதிரா ஏதாச்சும் செய்தால் அந்த ஊரை விட்டே போயிடுவோம்னு சொன்னாங்க”

“இவ்வளவு போராட்டத்துக்கு அப்பறமும் அவங்க மனசு மாறலையா?”

“அதெப்படி மாறும்… இப்போ தெருவுக்குள்ள வர்றதுக்கு கேட்பாங்க… அப்பறம் கோயிலுக்குள்ள வர பார்ப்பாங்க… அதனால இதை வளரவிடக் கூடாதுன்னு ரொம்ப தெளிவான திட்டத்தோட அவங்க இருந்தாங்க”

“அவங்க பேசினது போராட்டக்காரங்களுக்கு தெரிஞ்சுதா?”

“தெரியாம எப்படிப் போகும்? இந்த ஆணவத்தை ஒழிச்சே தீரணும்னு போராட்டக்காரர்கள் சீனிவாச அய்யங்கார் கிட்ட சொன்னதோட, அனுமதி மறுக்கப்பட்ட ஜாதிக்காரங்க தெருவுக்குள்ள போற வரைக்கும் போராட்டத்தை நடத்தியே ஆகணும்னு உறுதியோடு சொல்லிட்டாங்க”

“சீனிவாசன் என்ன நினைச்சார்?”

“அவர் கேரளாவில சுற்றுப்பயணத்தை முடிஞ்சபோது கொடுத்த அறிக்கையில, ‘வைக்கத்துல பிரச்சனைக்கு உரிய தெரு யாருக்குச் சொந்தம் என விரிவாகச் சொல்லிட்டு, சத்தியாகிரகப் போராட்டம் ரொம்ப ரொம்ப சரியானதுனு சொன்னாரு”

”தமிழ்நாட்டில் இருந்தவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?”

”பெரியார் அங்கே நடக்கிறதை அறிக்கை வழியாவும் தந்தி வழியாகவும் பகிர்ந்துகிட்டுத்தான் இருந்தார். தமிழ்நாட்டுல இருந்து ஆதரவும் நிதியும் அங்கே அனுப்பப்பட்டுச்சு”

”ஓ…”

“ஆமா.. பெரியார் அங்கே போனப்ப போராட்டத்தை வலிமைப்படுத்தினார். இதை அப்போ வந்த பத்திரிகைகள் விரிவா எழுதவும் செய்தாங்க”

”இப்போ இருக்கிற மாதிரினா… ஃபேஸ்புக் லைவ் போட்டு இருக்கலாம் இல்லையா?”

”ஆமா…. இன்னிக்கு அதுமாதிரியான போராட்டம்னு ஒரே நாள்ல உலகத்துக்கே தெரிஞ்சுடும். அன்னிக்கு பத்திரிகைகள் வழியாகவும் பொதுக்கூட்டங்கள் வழியாகவும்தான் விஷயத்தைச் சொல்லணும்”

”இவ்வளவு வேலைகள் செய்ற பெரியார் தாத்தாவை அவங்க கைது செய்யவே இல்லையா அம்மா?”

“போராட்டத்தோடு மூளையா செயல்பட்ட பெரியாரை விட்டுடுவாங்களா என்ன?… என்னா ஆச்சுன்னா….”

(தொடரும்)

 

0
ஊர்ட்  மேகம்  (OORT CLOUD) வானியல்ஊர்ட் மேகம் (OORT CLOUD) வானியல்26th August 2026
வானவில்லும் வாழ்வும்!(சிறார் பாடல்)27th August 2026

மற்ற படைப்புகள்

ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
குறுக்கெழுத்துப் போட்டிடிசம்பர் 2025பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குக்கெழுத்துப் போட்டி விடை

Read More
18
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்:தொழுநோய் சுவாசத்தால் பரவும்!

Read More
36
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அ.யாழினிபர்வதம்

2025 வருக… வருகவே…

Read More
பிஞ்சு 2025மே,2025
17th August 2026 by Periyar Pinju

விண்மீன்கள்

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p