• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த ‘பெரியார் பிஞ்சு’ ஷிவாங்க்! (பெருமிதம்-1)

Pg 6-7 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்

பிஞ்சண்ணா

ஜெர்மன் நாட்டின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஷிவாங்க் வருண் வரதராஜன், துபாயில் பிறந்தார். இச்சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அவரது தாயார் யாழினி வரதராஜன் கூறும்போது, “ஷிவாங்க் குழந்தையாக இருந்தபோதே வீட்டில் கருவி இசைப் பாடல்களைத் தொடர்ந்து ஒலிக்க விடுவோம். இதனால், தனது மூன்றாம் வயதிலேயே தாளம் மற்றும் மெல்லிசைக்கு ஏற்ப துல்லியமாக வாசிப்பான்.

இசையின் தனித்துவமான பாணியை வைத்து இசையமைப்பாளர்களை அடையாளம் காணும் திறனையும் வளர்த்துக் கொண்டான்’ என்றார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ஆம் நாள் துபாயில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் ஷிவாங்க் பங்கேற்றான். அப்போது, பல்வேறு இசையமைப்பாளர்களின் புகழ்பெற்ற இசைத் துணுக்குகள் வரிசையாக இசைக்கப்பட்டன.

அவற்றைக் கூர்மையாகக் கேட்ட சிறுவன் ஷிவாங்க், ஒரு நிமிடத்தில் பாக், மொசார்ட், பீத்தோவன், சோபின், விவால்டி, சாய்கோவ்ஸ்கி, வாக்னர், பிராம்ஸ் உள்பட 16 இசையமைப்பாளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினான்.

இதையடுத்து, ஒரே ஒரு நிமிடத்தில் (குறைந்த நேரத்தில்) நிதானத்துடனும் மிகுந்த கவனத்துடனும் செயல்பட்டு அனைத்து இசையமைப்பாளர்களையும் சரியாக அடையாளம் கண்ட ஷிவாங்கிற்கு கின்னஸ் உலகச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது. அவனது இந்தத் திறமையை ‘அசாதாரண இசைப் பரிசு’ என கின்னஸ் உலக சாதனை அமைப்பு பாராட்டியுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்தப் பிஞ்சு ‘ஷிவாங்க்’ நமது பெரியார் பிஞ்சுகளுக்கு அறிமுகமானவர் தான். குழந்தையாக அல்ல; கதாபாத்திரமாக!

ஆம், அய்ன்ஸ்ரூலி என்ற பெயரில் சில ஆண்டுகள் வெளிவந்த அறிவியல் படக்கதைத் தொடரில், ‘ஷிவு’ என்ற பெயரில் வந்த கதாபாத்திரத்தின் உண்மை உரு தான் ‘ஷிவாங்க்’! அவரை கதாபாத்திரமாக உருவாக்கியவர், நிஜத்தில் அவரை உருவாக்கியவரான அவரது தாய் யாழினி – ஆம், அதே, யாழு சிவா தான்!

நம்முடைய பெரியார் பிஞ்சு ஒருவர் கின்னஸ் சாதனையாளராகச் சிறந்திருப்பது பெரியார் பிஞ்சு இதழ் வரலாற்றில் ஒரு மகத்தான மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்லவா? <

1
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:27th August 2026
துணை நிழல்கள்(கதை கேளு கதை கேளு)27th August 2026துணை நிழல்கள்(கதை கேளு கதை கேளு)

மற்ற படைப்புகள்

1561
அக்டோபர் 2025ஓவியம் வரையலாம்பிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)

Read More
Pg 22-23 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025மனிதன்
2nd September 2026 by Periyar Pinju

கற்ற கல்வியின் பலன்: ஓர் உண்மைக் கதை (மனிதன் )

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

உதிரி உடல்கள் மருத்துவப் புரட்சியை ஏற்படுத்துமா?

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

வாசிப்பும் – நேசிப்பும்!

Read More
6
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அபி

துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

Read More
சுடோகுடிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் கணிதப் புதிர் சுடோகு விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p