• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

துணை நிழல்கள்(கதை கேளு கதை கேளு)

167
கதைகதை கேளு கதை கேளுநவம்பர் 2025பிஞ்சு 2025

விழியன்

அம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று கடுப்பாக இருந்தேன். டீ பாய்லர் அருகே என்னை அம்மா விட்டதே இல்லை. வெளியூரில் கல்லூரி சீட் கிடைத்தால் அம்மா தனியாக இருக்க நேரிடும். அந்தக் கவலைதான் என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. இதுவரைக்குமே இரண்டு முறை மட்டுமே டீ பாய்லர் முன்னாடி நின்றிருக்கேன். எனக்கு டீ போட வரும் என்பது உண்மைதான். அப்பா எங்களை விட்டுட்டு வேற ஒருத்தங்ககூட போயிட்டார். அது நான் ஒன்னாவது படிக்கும்போது நடந்தது. அம்மா அதைப்பற்றிப் பெருசா கண்டுக்கவே இல்லை. கண்டுக்கிட்ட மாதிரி காட்டினதே இல்லை. இந்த டீக்கடையே முழு உலகம்னு இதுநாள் வரைக்கும் இருந்துவர்றாங்க.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அம்மா இங்கே டீ போடுகின்றார். அம்மாவின் டீக்கடைதான் இது. ஒரு பெண் டீக்கடை வைத்திருப்பது எவ்வளவு சிரமம் என நன்றாகத் தெரியும். கடுமையான உடல் உழைப்பு. அம்மா இன்று என்னை பாய்லர் முன் நிற்க வைத்துவிட்டுச் செல்வதற்குக் காரணம், இங்கே இருக்கும் இந்த அம்மாதான். ஊரில் எல்லோரும் இவரை ‘பெரியம்மா’ என்று கூப்பிடுவார்களாம். பெரியம்மா என்றே நானும் சொல்லிக்கறேன். இன்றுதான் முதன்முதலில் பார்க்கின்றேன். இவரின் அன்பையும் பண்பையும் செய்கைகளையும் கேட்டதுமே எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. அதான் உடனே நானும் பெரியம்மான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.

கொஞ்ச தூரத்தில் இருக்கும் பள்ளிக்குத்தான் அம்மா போயிருக்காங்க. காலை ஒன்பதுமணி வாக்கில் இந்த சங்கரேஸ்வரியும், கூடவே ஒரு பெண்ணும் வந்தனர். அந்தப் பெண் என்னைவிட பெரியவர்போல இருந்தார். பெயர் மஞ்சுளா. மூன்றாம் நாளாக பள்ளிக்கு வருகிறார்களாம். அந்தப் பெண் மஞ்சுளாவிற்கு, பத்தாம் வகுப்பிற்கு அட்மிஷன் போடத்தான் அலைந்துகொண்டு இருக்கின்றார்களாம்.

எனக்கு முதலில் அதிர்ச்சிதான். கல்லூரி முடிக்கும் தோற்றத்தில் இருக்கும் மஞ்சுளாவிற்குப் பத்தாவது வகுப்பு அட்மிஷனா என்று இருந்தது. எதுக்கு இந்த வயதில் பள்ளி என்று நினைத்தேன். ‘எப்படா ஸ்கூல் முடிப்பேன்’ என்று எனக்கு இருந்தது. ‘கைத்தொழில் கத்துக்கிட்டு ஏதாவது செய்யலாமில்ல’ எனத் தோன்றியது. ‘பையன் இப்படித்தாண்டா நினைப்ப’ என அம்மா திட்டுவாங்க எப்படியும்.

மஞ்சுளா ஒன்பதாவது படிக்கும்போது பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். கிராமத்தில் இருக்கும் தாத்தா பாட்டியுடன் சென்றுவிட்டார். மஞ்சுளாவிற்குப் படிக்க ஆசை. ஆனால், வீட்டுச் சூழல் சரியில்லை. சங்கரேஸ்வரி அந்த ஊருக்குச் சென்றிருக்கார், உடனே நான் படிக்க வைக்கிறேன் என்று கூட்டி வந்திருக்கார்.

சங்கரேஸ்வரியைப் பற்றிச் சொல்லவில்லையே… துப்புரவுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்கின்றார். கால் நீட்டினால் வீடு முடிந்தது என்னும் அளவிற்கு மிகச்சிறிய வீடு. தனியார் பள்ளியில் வேன் குழந்தைகளை ஏற்றி இறக்கும் உதவியாளராக வேலை செய்திருக்கின்றார். வேனில் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு, ‘ஏன் நம்ம பகுதிலே உள்ள பசங்க ஆங்கிலம் பேசக்கூடாது?’ என நினைத்தார். சின்னதாக ஒரு டியூசன் மய்யத்தை உருவாக்கினார். தானும் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார். அங்கே தொடங்கிய பயணம் போல… அவங்க எல்லாம் பத்தாம் வகுப்பு, கல்லூரி போகும் வரைக்கும் துணையாக இருக்கின்றார்.

படிக்கணும்னு ஆசைப்படற பொண்ணை அப்படியே விட்டுடுவாரா என்ன? அதான் இந்த அலைச்சல். இந்தத் தலைமை ஆசிரியர், சீட் தரமாட்டேன்னு நிக்கிறார் போல. சங்கரேஸ்வரி பெரியம்மாவுக்கு உடல்நலம் கொஞ்சம் மோசமா இருக்கு. 2 மணி நேரம் காத்திருக்கச் சொல்லி இருக்காங்க. காலையில் சாப்பிடாததால் டீயாச்சும் சாப்பிடலாம்னு இங்க வந்திருக்காங்க. அம்மாகிட்ட கதையைச் சொன்னதும் “நீ உட்காருக்கா! நான் போய் சீட் வாங்கறேன்”ன்னு அம்மா கிளம்பிட்டாங்க. ஆச்சரியமா இருக்கு, ஏன்னா அம்மா வழக்கமா கடையைவிட்டு போகவே மாட்டாங்க.

“பெரியம்மா, டீ ஒன்னு நான் போட்டுத் தரட்டுமா?” என்றேன். கடைக்கு இந்த நேரத்தில் அதிகமாக வரமாட்டார்கள். அவங்க கதையை இவ்வளவு நேரம் கேட்டுக்கிட்டிருந்தேன்.

“அந்த எச்.எம். ஒத்துக்கமாட்டாரு பெரிம்மா. எனக்குத் தெரியும். பத்தாவது வரைக்கும் நான் அங்கதான் படிச்சேன். ரிசல்ட் ரிசல்ட்டுனு இருப்பாரு”

“அவர் என்ன பண்ணுவாரு பாவம். எல்லா பள்ளிக்கூடத்திலும் மேல் இடத்தில இருந்து நல்ல ரிசல்ட் காட்டணும்னு சொல்றாங்க. போன வாரம் கலெக்டர் வீடியோ பார்த்தியா?”. பரவாயில்லை எல்லாமே கவனிக்கிறார்ன்னு தோனுச்சு.

வெளிய இருந்து வந்தேன். அப்பத்தான் இவங்க பேசிக்கிட்டு இருக்கிறதைக் கேட்டேன். அம்மா வீட்டுக்குள்ள இருந்து பலகாரம் கொடுத்தாங்க. வழக்கமா இப்படிச் செய்யமாட்டாங்க. இவங்க இருவரையும் அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு போல.

அம்மாவும் மஞ்சுளாவும் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார்கள். பெரியம்மாவின் மூட்டுவலியால் அவர் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தார். ஆனால், அம்மா அப்போது செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பரண் மேல் இருந்து பெட்டி ஒன்றினை எடுத்தார். அதில் ஒரு நோட்டினை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். இந்த நோட்டினை இதுவரை என்னிடம் காட்டியதுகூட இல்லை. அது அம்மா பத்தாவது படித்தபோது எழுதிய நோட்டு. அந்தப் பெண் நோட்டைப் புரட்டினார். அம்மாவின் பெயரும், அதற்கு முன்னர் வக்கீல் என கொட்டை எழுத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அம்மாவிற்கு வக்கீலாக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால், பதினொன்றாம் வகுப்பே படிக்கமுடியவில்லை.

“சங்கரேஸ்வரி மாதிரி ஒரு கை இருந்திருந்தா நான் மேல ஏறி இருப்பேன்” எனச் சொல்லும்போது அம்மாவின் குரல் தழுதழுத்து இருந்தது.

சங்கரேஸ்வரி கண் விழித்து எழுந்து வந்தார். “அக்கா, எச்.எம். ஒத்துக்கல. ஒரு வக்கீலாட்டம் பாயிண்ட் பாயிண்டா எடுத்து வெச்சேன். ஒத்துக்கிட்டார். கடைசியா, இந்தப் பொண்ணு மார்க் கம்மியா வாங்கினாலோ ஃபெயிலானாலோ அவங்க தாத்தா பாட்டிகிட்ட கேட்க மாட்டாராம். ‘என்கிட்ட கேளுங்க’ன்னு டப்புன்னு சொல்லிட்டேன்”. அம்மா முகத்தில் அவ்வளவு பெருமிதம். அதன் பின்னர்தான் அம்மா எல்லா இடங்களிலும் எப்படி அட்டகாசமாக வாதம் பண்ணுவார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அம்மா வக்கீலாகி இருக்க வேண்டும் என அப்போது தோன்றியது. அம்மாவை +2 எப்படி எழுத வைக்கலாம் என்று ஆராய வேண்டும்.

அன்று முழுக்க எனக்குள் இரண்டு வரிகள் ஓடிக்கொண்டே இருந்தன. பெரியம்மாவும் மஞ்சுளாவும் கிளம்பும்போது அம்மா மஞ்சுளாவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“மஞ்சு, நீ நல்லா படிப்பியா?”

“படிக்க ரொம்பப் பிடிக்கும்மா”

‘ஆமாம். நல்லா படிக்கிறவங்களைத்தான் படிக்க வைக்கணுமா?’ ச்சே… இத்தனை நாளா எப்படி இப்படி நெனச்சிட்டு இருந்திருக்கேன்.<

1
16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்!  கின்னஸ் சாதனை படைத்த 'பெரியார் பிஞ்சு' ஷிவாங்க்! (பெருமிதம்-1)16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த 'பெரியார் பிஞ்சு' ஷிவாங்க்! (பெருமிதம்-1)27th August 2026
கடந்த இதழ் கணிதப் புதிர் சுடோகு விடை27th August 2026

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்2025சுடோகுபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
2020_aug_v32
ஆகஸ்ட் 2020கோமாளி மாமா
1st September 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-8 : மாற்றம் வருமா?

Read More
2022_jan_v14
கதைகதை கேளு கதை கேளுஜனவரி 2022
3rd January 2022 by விழியன்

பொத்த்த்..

Read More
9
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
4th February 2025 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 11: குயில்

Read More
2018_nov_v44
கதை கேளு கதை கேளுநவம்பர் 2018
29th October 2018 by விழியன்

”ரோலிங் சர்ர்ர்ர்ர்”

Read More
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p