• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

காரணமின்றி கண்மூடித்தனமாய் எதையும் ஏற்காதீர்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

133
நினைவில் நிறுத்துவோம்

சிகரம்

க

ுகழந்தைப் பருவத்தில் பெற்றவர்களும் மற்றவர்களும் கூறுவதை அப்படியே ஏற்றுச் செயல்படுவர். காரணம், அப்போது எது சரி, எது தப்பு, எது நல்லது, எது கெட்டது என்று சிந்தித்து அறியும் திறன் அவர்களுக்கு இருக்காது.

இதனால், இப்பருவத்தில் நிறைய அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளும், செயல்களும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. பெற்றோரும், பெரியவர்களும் கூறுவதை ஏற்று அவர்களும் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர்தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தங்கள் விருப்பங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், கருத்துகளை எல்லாம் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. தானே பிள்ளைகளுக்கு சிந்திக்கவும், முடிவு செய்யவும் வாய்ப்பளிக்க வேண்டும். தங்களிடம் அய்யங்களையும், விளக்கங்களையும், காரணங்களையும் கேட்டுத் தெளிவு பெற அறிவுறுத்த வேண்டும். பிள்ளைகள் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்; அவர்களின் கேள்விகளுக்குச் சரியான, அறிவுக்கு உகந்த பதில்கள், விளக்கங்கள் அளிக்க வேண்டும்.

மாறாக, “இது நம்முன்னோர்கள் செய்தது, கூறியது, அவர்கள் நம்பியது. எனவே, நாமும் செய்ய வேண்டும், நம்ப வேண்டும், ஏற்க வேண்டும்” என்று கூறுவது தப்பாகும். பிள்ளைகளின் அறிவுத் திறனையும், வளர்ச்சியையும் இது பாதிக்கும்.

தலைமுறை இடைவெளி

25 ஆண்டுகள் என்பது ஒரு தலை முறை இடைவெளி. அந்த 25 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள் உலக அளவில் – நாடு அளவில், மாநில அளவில் – வட்டார அளவில் ஏற்படும். ஒவ்வொரு துறையிலும், கொள்கை மாற்றங்கள் ஏற்படும். அறிவியல் முடிவுகள் மாறும், நம்பிக்கைகள் மாறும். அப்படியிருக்க தங்கள் கருத்துகளையும், நம்பிக்கைகளையும் பிஞ்சுப் பிள்ளைகளின் மூளையிலும், செயல்களிலும் ஏற்றுவதும் அதற்கேற்ப பிஞ்சுகளை மாற்றுவதும் சரியா? என்று பெற்றவர்களும், பெரியவர்களும் சிந்திக்க வேண்டும்.

‘பூமி தட்டை’ என்று நம்பிய காலக் கருத்துகளை இன்றைய பிள்ளைகளின் சிந்தனையில் ஏற்றுவது சரியா? நிலவு சிவன் தலையில் உள்ளது என்ற நம்பிக்கையை நிலவில் காலடி வைத்து நடக்கும் காலத்தில் பிள்ளைகளுக்குக் கூறுவது நேர்மையா? மனிதர்களை ஜாதியாகப் பிரித்து உரிமைகளைப் பறித்த, அடக்கி ஒடுக்கிய நடைமுறைகளை, இன்றைய பிள்ளைகளின் மனதிலும் ஏற்றுவது குற்றமல்லவா? ஜாதி உணர்வை ஊட்டுவதும், வளர்ப்பதும், தப்பல்லவா?

கல்விக்குக் கடவுள் சரஸ்வதி, செல்வம் தருவது லட்சுமி, வீரம் கொடுப்பது துர்க்கை என்று இக்காலத்திலும் பிள்ளைகளுக்குக் கூறுவது அவர்களது தன்னம்பிக்கையையும், முயற்சியையும், உழைப்பையும் கெடுக்காதா? கடவுளை வணங்கினால் வாழ்வில் உயரலாம், மந்திரத் தாயத்து, முடிக்கயிறு கட்டினால் ‘நல்லது நடக்கும், கெட்டது நீங்கும்’ என்று பிள்ளைகளை நம்ப வைப்பது அவர்களுக்குச் செய்யும் கேடல்லவா? ஆண் என்றால் உயர்வு, பெண் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும், பெண்கள் ஆண்களைப்போல எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடாது, எல்லோருடனும் பேசக் கூடாது, பழகக் கூடாது என்பன போன்ற பழைய கொள்கைகளை இன்றைக்கும் திணிக்க முற்படுவது கூடாது. கால மாற்றம், உலக மாற்றம், தேவை மாற்றம் இவற்றைப் புரிந்து, உணர்ந்து பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

கேடானவை, தீங்கானவை, செய்யக்கூடாதவை, தவிர்க்க வேண்டியவை – காலம் மாறினாலும், தலைமுறை மாறினாலும் மாறாதவை. எனவே, அவற்றை விலக்குவது, தவிர்ப்பது என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். அவற்றை நீக்கச் சொல்வதும் தவிர்க்கச் சொல்வதும் சரியாகும்.

புகைப் பிடிக்கக்கூடாது, மது அருந்தக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, கேடு செய்யக் கூடாது என்பன போன்றவற்றை என்றைக்கும் சொல்ல வேண்டும். எலோருக்கும் சொல்ல வேண்டும், பிஞ்சுப் பருவத்தில் அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.காரணம், நல்லவை பழகுவதும், தீயவை விலக்குவதும் சிறு வயதிலே பழக்கத்தில் வர வேண்டியது கட்டாயம்.

பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக நடந்தும் காட்ட வேண்டும். பிள்ளைகள் முன் சண்டையிட்டுக் கொள்வது, தப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றவை பிஞ்சுகளின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும், பிள்ளைகள் செய்யக் கூடாது என்று நாம் நினைப்பதை அவர்கள் முன்னிலையில் நாம் செய்யக் கூடாது.

பிஞ்சுகளும் தங்களுக்குச் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் தெளிவும் வந்தபின் பெற்றோர்கள் கூறுவதை அப்படியே ஏற்காமல், தங்களுக்குச் சரியில்லையென்று தோன்றினால், தங்கள் அய்யங்களைக் கேள்வியாகக் கேட்க வேண்டும். பெற்றோர் சரியான காரணமும், விளக்கமும் கூறினால், அது தங்களுக்குச் சரியென்று பட்டால் மட்டுமே அதை ஏற்றுப் பின்பற்ற வேண்டும்.

மாறாக, பெற்றோர் கூறிவிட்டார்கள், அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. பெற்றோர், பெரியவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் கூறினாலும் அவர்கள் கூறுவது தங்களுக்குச் சரியில்லை என்று தோன்றினால், ஆசிரியரிடம் அதுகுறித்துக் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர் சரியான காரணம் கூறினால் மட்டுமே அதை ஏற்க வேண்டும்.

இதைத்தான் நம்ம தாத்தா பெரியார் அவர்கள் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வலியுறுத்தினார். யார் சொன்னாலும், நானே சொன்னாலும் அது சரியென்று உங்கள் சிந்தனைக்குப் பட்டால் மட்டுமே அதை ஏற்க வேண்டும் இல்லையென்றால் அதை ஏற்கக் கூடாது என்றார்.

எனவே, பிள்ளைகள் நீங்கள் யார் கூறினாலும், சரியென்றால் மட்டுமே அதை ஏற்க வேண்டும். பிறர் கூறுவது அறிவுக்கும், அறிவியலுக்கும், நடைமுறைக்கும் ஏற்றதல்ல என்றால், அவற்றை அறவே ஒதுக்க வேண்டும், ஏற்கக் கூடாது. இப்படி பிள்ளைகள் தெளிவோடு செயல்படும் போது அவர்களைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். மாறாக அவர்களை கண்டிக்கவோ திட்டவோ கூடாது.<

1
ரோஜா பூந்தொட்டி(ஓவியம் வரையலாம்)ரோஜா பூந்தொட்டி(ஓவியம் வரையலாம்)27th August 2026
வண்ணம் தீட்டி மகிழுங்கள்!27th August 2026

மற்ற படைப்புகள்

Pg 16-17 copy
அக்டோபர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

தோல்வி அனுபவமும் பிள்ளைகளுக்கு வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம் )

Read More
13
ஜனவரி 2026நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
357
செப்டம்பர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

நலமான உடலில் வளமான அறிவு (நினைவில் நிறுத்துவோம்! )

Read More
Pg 20-21 copy
ஆகஸ்ட்2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

ஆசிரியர் – மாணவர் உறவில் ஈர்ப்பும் வெறுப்பும் நினைவில் நிறுத்துவோம்

Read More
25
டிசம்பர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

இவையெல்லாம் உண்மையல்ல(நினைவில் நிறுத்துவோம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p