• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பாக் நீரிணையைக் கடந்த பெரியார் பிஞ்சு புவி ஆற்றல்!(பெருமிதம்-2 )

1647
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்

சமா.இளவரசன்

உங்கள் சந்தேகம் புரிகிறது. புவி ஆற்றல் என்பது பெயர் தான்! அறிவியல் அடிப்படையிலான பெயர். பெயருக்கேற்ற ஆற்றல் கொண்டவர் – சாதனையாளர்.

பாபநாசத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் வசிப்பவருமான 12 வயது மாணவர் புவி ஆற்றல் இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை கடலில் நீச்சலடித்து, இளம் வயதில் கடலைக் கடந்த மாற்றுத் திறனாளி என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

மாஸ்டர். புவிஆற்றல் (வயது 12) [01.12.2012] – சென்னை முகப்பேர் மேற்கு வேலம்மாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். மாற்றுத் திறனாளியான இவர் சிறந்த நீச்சல் வீரர்.

“எதுவும் முடியும் எல்லோராலும், முயற்சியும் பயிற்சியும் வெற்றியை யேத் தரும்” என்னும் நோக்கத்தோடு, 2022 ஆண்டு தனது பயிற்சியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், செனாய் நகர், சென்னையில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் சதீஷ்குமார் அவர்களுடைய வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயணத்தைத் தொடங்கினார்.

2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கப்பதக்கமும், இரண்டு வெள்ளி பதக்கங் களும் வென்றார். இவருக்கு திறந்தவெளி கடலில் நீந்துவது மிகவும் பிடித்தமான ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளாக விடுமுறை நாட் களில் கோவளம் கடலில் பயிற்சி செய்கிறார்.

தற்போது உலக சாதனைக்காக இவர் இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியா தனுஷ்கோடி வரையான 30 கிலோமீட்டர் தூரத்தைத் தனி ஒருவராக நீந்தி உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

உலகத்திலேயே இளம் வயது மாற்றுத் திறனாளி நீச்சல் வீரராக உள்ளார். இந்த முயற்சிக்கும் வெற்றிக்கும் காரணமானவர்கள் என இவர் குறிப்பிடுவது – தலைமைப் பயிற்சியாளர் சதீஷ்குமார், துணைப் பயிற்சியாளர்கள் – கோபி. சின்னசாமி, கார்த்திக் குணசேகர், மற்றும் செல்வம் ஆகியோர்.

03.10.2025 பிற்பகல் 01.30 மணியளவில் அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டனர். மாலை 07.00 மணியளவில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் கடலில் இலங்கை அரசின் சோதனைக்காக காத்திருந்தனர்.இரவு 08.00 மணி யளவில் இலங்கை அரசின் சோதனைகள் முடிக்கப்பட்டு காத்திருந்தனர்.

04.10.2025 அதிகாலை 2.45 க்கு இலங்கை தலைமன்னாரில் தனது உலக சாதனை பயணத்தை தொடங்கிய புவிஆற்றல் நண்பகல் 11.50 மணியளவில் இந்தியா தனுஷ்கோடி கரையை அடைந்தார்.

இவர் தனது சாதனையை 09 மணி 11 நிமிடங்களில் நேரத்தில் முடித்து சாதனை ஏற்படுத்தினார்.

புவிஆற்றல் உலக சாதனை ‘WORLD BOOK OF RECORDS LONDON’-இல் பதிவுசெய்யப்பட்டது

காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தாலும் கரையில் உறவினர்களும், அவர்களது நண்பர்கள் குடும்பங்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்திய அரசின் அதிகாரிகள் தங்களின் வழக்கமான சோதனை களை முடித்துக்கொண்ட பின்னர் சாதனையாளர் புவி ஆற்றலுக்கு இந்திய தேசியக்கொடியினைப் போர்த்தி விழாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இந்தியாவின் தென்பகுதி அலுவலர் அன்கிடா ஷா, புவிஆற்றலுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். புவிஆற்றல் தாத்தாவும், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளருமான வி.மோகன் நன்றி கூறி முடித்தார்.

புவிஆற்றல் நெடிய பாரம்பரியம் கொண்ட சுயமரியாதை இயக்க குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது கொள்ளுத் தாத்தா, கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் வை.விசுவநாதன். இவரது சகோதரி மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் – பொம்மி கணேசன், (பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகனின் சகோதரி) ஆகியோர். இவர்களின் மகன் பெரியார் செல்வன் – மருமகள் பத்மபிரியா ஆகியோரின் மகன் மகன் தான் புவி ஆற்றல். இவர் நான்காம் தலைமுறை சுயமரியாதைக் குடும்பம். மாணவர் புவிஆற்றல் பெரியார் பிஞ்சுகள் பழகுமுகாமில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தகக்து.

நம் அழைப்பை ஏற்றுப் பெரியார் திடலுக்கு வந்திருந்தார் புவி ஆற்றல். அவருடைய குரலில் அப்படியோர் உறுதி – தெளிவு!

பெ.பி: நீச்சல் மீது ஆர்வம் எப்படி வந்தது?

புவி ஆற்றல்: பல காணொளிகளைப் பார்த்து ஆசை வந்தது. அம்மா, அப்பா கிட்ட சொன்னேன். எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை. நீயும் சாதனை செய்யலாம் என்று ஊக்கம் தந்தார்கள். கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

பெ.பி: கற்றுக் கொள்ளத் தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்னென்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?

புவி ஆற்றல்: நீச்சல் குளத்திலும், பொது வெளியிலும் நீந்துவதற்கான பயிற்சி பெற்றுள்ளேன்.

பெ.பி: சாதனை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? பெற்றோர்கள் சொன்னார்களா?

புவி ஆற்றல்: அதையும் நானாகத் தான் தொடங்கினேன். பல காணொளிகளைப் பார்த்தேன். அதிலிருந்து நானாகத் தேர்ந்தெடுத்தது தான் கடலைக் கடக்கும் சாதனை முயற்சி.

பெ.பி: நீங்கள் பயிற்சி எடுத்தது கோவளத்தில்; சாதனை செய்தது தலைமன்னார் – தனுஷ்கோடி கடலில்! இரண்டு கடல்களுக்கும் என்ன வேறுபாடு?

புவி ஆற்றல்: கோவளம் கடற்கரையில் அலைகள் அதிகம் இருக்கும். நான் முதலில் தலைமன்னாரில் தொடங்கும் போது அலைகள் குறைவு. தனுஷ்கோடியில் முடிக்கும் போது மழை வந்தது. அதனால் அலைகள் கூடின. பயிற்சி பயன் தந்தது.

பெ.பி: அடுத்த முயற்சி என்ன?

புவி ஆற்றல்: இங்கிலீஷ் கால்வாயைக் கடப்பது.

பெ.பி: பலரும் உங்களிடம் கடவுள் உடனிருப்பார் என்றெல்லாம் சொல்லியிருப் பார்கள்? நீங்கள் பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்தவர். கடலைக் கடக்கும்போது ஏதாவது தோன்றியதா? எப்படி இருந்தீர்கள்?

புவி ஆற்றல்: உரிய பயிற்சி எடுத்துக் கொண்டேன். முயற்சி செய்தேன். எல்லோரும் ஊக்குவித்தார்கள். நான் படிக்கும் வேலம்மாள் பள்ளி எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறது. அதனால் சாதனை செய்தேன். வேறு ஒன்றும் எண்ணம் வரவில்லை. எனக்குத் துணிச்சல் இருந்தது! அவ்ளோதான்.

பெ.பி: உங்கள் வயதை ஒத்த நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புவி ஆற்றல்: என்னைப் போலவே எல்லோராலும் சாதனை செய்ய முடியும். பயிற்சியும் முயற்சியும் எல்லோருக்கும் அவசியம்!

கொஞ்ச நேரம் தான் பேச முடிந்தது. அடுத்த பயிற்சிக்குக் கிளம்பிவிட்டார். ஆனால், அவரது தெளிவும், ஊக்கமும், உறுதியும் இன்னும் பல சாதனைகளுக்காக அவருடன் நம்மைப் பேசச் செய்யும். <

 

1
சின்னக்கைச் சித்திரம்2nd September 2026
பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)2nd September 2026பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

மற்ற படைப்புகள்

Pg 2 copy
சிறார் பாடல்நவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

பச்சைக் கிளி(சிறார் பாடல்)

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

புள்ளிகளை இணையுங்கள்!

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
45
இதுதான் ஆங்கிலம்செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

பிழைகள் 12 வகை மட்டுமே!(இதுதான் ஆங்கிலம்-3)

Read More
Pg 20-21 copy
ஆகஸ்ட்2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

ஆசிரியர் – மாணவர் உறவில் ஈர்ப்பும் வெறுப்பும் நினைவில் நிறுத்துவோம்

Read More
Pg 8-9 copy
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

MIND YOUR LANGUAGE! இதுதான் ஆங்கிலம் 2 எம் ஆர் மனோகர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p