• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி-3 அழிவைத்த ‘செல்’லு!

1567
நவம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025

எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

பலராமனிடம் வாங்கிய பாலில் காஃபி போட்டுக் குடித்துவிட்டு… காலை உணவுக்கு என்ன செய்யலாம் எனப் பாட்டி யோசிக்கும்போது குழந்தை அழும் சத்தம் கேட்டது.

வேகவேகமாக வந்து வீட்டுக் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால் திண்ணையில் பத்து வயதுச் சிறுவன் ஒருவன் தூணில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தான்.

“யாரு கண்ணு நீ…? எதுக்கு திண்ணையில உக்காந்து அழுதுக்கிட்டிருக்கே?” என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தார் பாட்டி.

பாட்டி அருகில் வந்ததும் அழுகைச் சத்தம் அதிகமானது. “குட்டிப் பையா முதல்ல அழுறத நிறுத்து. என்ன நடந்ததுன்னு எங்கிட்டே சொல்லு. நீ சொல்றதைக் கேட்டு எனக்கும் அழ வந்தா ரெண்டு பேரும் சேந்து அழுவோம்” என்றார் பாட்டி.

சிறுவன் சட்டெனச் சிரித்தான்.

“அழுத புள்ளை சிரிச்சுதாம்… கழுதைப் பாலைக் குடிச்சுதாம்…” என்றார் பாட்டி.

சிரித்த சிறுவன் பாட்டியை உற்றுப் பார்த்தபடி… “யாரு பாட்டி நீ… இவ்வளவு நாளா பூட்டியிருந்த வீட்டுக்குள்ளே இருந்து வர்றே…?” என்று கேட்டான்.

“நானா… ‘ஜிங்கிரி போங்கிரி டாங்கிரி… கடையிலே விக்குறான் ஜாங்கிரி’ங்கிற மாதிரி… இன்னைக்குக் காலையிலேதான் இந்த வீட்டுக்கு வந்தேன்.”

“ஓ… புதுசா வந்திருக்கீங்களா?”

“இல்லே… பழசுதான்… மறுபடி வந்திருக்கேன்.’

“எனக்குப் புரியலே…” என முழித்தான் சிறுவன்.

“உன்னை மாதிரி சின்னப் புள்ளையா இந்த ஊர்ல பொறந்து, வளர்ந்து, கல்யாணம் முடிஞ்சு வெளி ஊருக்குப் போயிட்டு, கடைசி காலத்திலே சொந்த ஊர்ல இருக்கலாம்னு வந்திருக்கேன்.”

“புரியுது… புரியுது! சின்ன வயசுலே ஊரை விட்டுப் போயிட்டு… பெரிய வயசுலே மறுபடி வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க!…”

“ஆமாடா கண்ணு. அதேதான். அது சரி… நீ எதுக்காக அழுதே…?”

“பாட்டி! எங்க அப்பாவோட செல்போனை எடுத்து விளையாடிக்கிட்டிருந்தேன். எங்க அப்பா வேலைக்குப் போக நேரமாச்சு… செல்லைக் குடுப்பான்னு புடுங்கிக்கிட்டு கிளம்பிட்டாரு.

விளையாட்டுல… ஜெயிக்கிற நேரத்துல அப்பா செல்லை வாங்கிக்கிட்டாரேன்னு அழுதேன். எங்க அம்மா ஏன் கத்துறேன்னு அடிக்க வந்தாங்க. அழுதுக்கிட்டே இங்கே வந்துட்டேன்.”

“ஓ… செல்லுனாலே வந்த அழையா அது. உன் பேரென்னா?”

“என் பேரு சுரேசு.” என்று சொல்லி முடிப்பதற்குள்… ‘சுரேசு! சுரேசு!’ என்று குரல் கொடுத்தபடி அவன் அம்மா தெருவில் தேடிக் கொண்டு வந்தார்.

“கண்ணு சுரேசு! உன்னைத்தான் யாரோ தேடி வர்றாங்க.”

“பாட்டி! யாரோ இல்லே. எங்க அம்மாதான் அது. அவங்க கையில மாட்டுனேன்… அடி பின்னி எடுத்துடுவாங்க.”

“சுரேசு! நீ கவலைப்படாதே! பாட்டி இருக்க பயமேன்! நான் பாத்துக்கிறேன். உங்க அம்மா பேரு என்ன?”

“எங்க அம்மா பேரு கோடீஸ்வரி! இப்ப அதுவா முக்கியம். ஆபத்து கிட்டே வந்துடுச்சே…” எனப் பதைபதைத்தான் சுரேசு.

“சுரேசு… திண்ணையைவிட்டு இறங்கி என் பின்னாலே வந்து நில்லு. உங்க அம்மாக்கிட்டே நான் பேசிக்கிறேன்” என்றார் பாட்டி.

சுரேசும் பாட்டி பின்னால் வந்து நின்றான். அம்மா கோடீஸ்வரி, ‘சுரேசு! சுரேசு!…’ என்றபடி பாட்டி வீட்டுக்கு அருகில் வந்ததும்…

“அம்மா… கோடி… இங்கே வாம்மா!” என்றார் பாட்டி.

“யாரு? நீங்க… இதுவரையில இந்தத் தெருவுல உங்களைப் பாத்ததே இல்லே. ரொம்ப பழகுன மாதிரி என் பேரைச் சொல்லி கூப்பிடுறீங்க!” என்றபடி பாட்டி அருகில் வந்தார் அம்மா கோடீஸ்வரி.

“கூப்பிடத்தானே பேரு! அதான் கூப்பிட்டேன். பழகுனாத்தான் பேசணுமா? நான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. உன் மகன் சுரேசைத்தானே தேடுறே…”

“ஆமா! அவன் மட்டும் என் கையில கிடைச்சான்…” என்று இழுத்துச் சொல்லி முடிப்பதற்குள் பாட்டி…

“டாரா கிழிச்சு… டப்பா டேன்சாட விட்டுடுவியோ…?” என்றார் பாட்டி.

அம்மா கோடீஸ்வரி அப்படியே அசந்துபோய் நின்றார்.

“சின்னப் புள்ளை மேலே எதுக்கு இவ்வளவு கோவம் யம்மா?…”

“புள்ளையா அது! ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு செல்லம் கொடுத்தது தப்பாப் போச்சு. கோவக்கார மனுசன் வேலைக்குக் கிளம்புற நேரத்திலே அவரோட செல்லை எடுத்து வச்சுக்கிட்டு லொள்ளு பண்ணுணா கோவம் வராம… குணமாவா பேச வரும்?” என்று பொரிந்து தள்ளினார் கோடீஸ்வரி.

“வூட்டுக்காரரும் கோவக்காரரு. நீயும் கோவக்கார கோடீஸ்வரி… உங்களுக்கு நடுவுலே குஸ்தி கத்துக்கிறவன் குத்திப் பழகுற மூட்டை மாதிரி குட்டிப் பையன் சுரேசு… நல்லாயிருக்கும்மா நீங்க உங்க புள்ளய நடத்துறது.

அம்மா! கோடி… சின்னக் குழந்தைங்க மட்டுமில்லே, பெரிய மனுஷங்க எல்லாருமே செல்போன் இல்லாம இயங்க முடியாதுங்கிற அறிவியல் உலகத்துலே, வாழுறோம்.

அந்த ஒத்தைச் சின்னப் பெட்டிக்குள்ள உலகத்தையே அடக்கி வச்சுப்புட்டாங்க. என்ன செய்ய… அதைப் பயன்படுத்துற பக்குவத்தைப் பெரியவங்களும் கத்துக்கணும். சின்ன புள்ளைக்கும் சொல்லித் தரணும். அதை விட்டுப்புட்டு… அடிக்கிறேன், உதைக்கிறேன்னு சின்னப் புள்ளைகளை மிரட்டிக்கிட்டிருக்கக் கூடாது.”

“கண்ணு சுரேசு… முன்னே வாய்யா! அம்மா… உன்னோட நன்மைக்குத்தான் சொல்றாங்க. அதை நீ புரிஞ்சுக்கிட்டா நீ பயப்படவும் வேணாம். அம்மா கோவப்படவும் வேணாம். செல்போன்ல விரட்டி விரட்டி விளையாடுறதை விட்டுட்டு, உன் நண்பர்களோட என் வீட்டுக்கு  வாங்க. நான் நிறைய விளையாட்டு சொல்லித் தர்றேன். செல்லுலே ரொம்ப நேரம் விளையாடுனா… கண்ணுக்குக் கெடுதல், கழுத்து வலிக்கும்… பக்கத்துல என்ன நடக்குதுன்னு பாக்கவும் தோனாது. யாரு எதைச் சொன்னாலும் காதுலே ஏறாது. அதனால செல்லுல விளையாடுறத விட்டுட்டு மத்தவங்களோட சேந்து விளையாடு. அது உடம்புக்கும் நல்லது; மனசுக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.

அம்மா கோடி! சுரேசை அடிக்காதே, திட்டாதே! அவன் சொன்ன பேச்சைக் கேட்டுக்குவான். சோறு போட்டா தின்னுக்குவான். நல்ல புள்ளையா நடந்துக்குவான். குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போம்மா! போப்பா சுரேசு. அப்பறம் வர்றியா?…”

“சரி பாட்டி” என்று சிரித்தான் சுரேசு.

“வர்றேன் பாட்டியம்மா” என்று பாட்டி சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டு அவரை வியந்து பார்த்தபடி சுரேசைக் கையில் பிடித்தபடி நடந்தார் கோடீஸ்வரி.

பாட்டி டாட்டா… காட்டியபடி நின்றார்.<

(பாட்டியின் லூட்டி தொடரும்)

 

0
பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)2nd September 2026
எண்ணிப்பார் 7 வேறுபாடு!2nd September 2026

மற்ற படைப்புகள்

சுடோகுநவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
1561
அக்டோபர் 2025ஓவியம் வரையலாம்பிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)

Read More
37
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

திருக்குறள் ஒழிப்பியல் – பொருட்பால்

Read More
ஆகஸ்ட்2025இசைப்பாடல்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

ஆலமாம் இசைப்பாடல்

Read More
31
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by கு.விஜயலெட்சுமி, திருவிடைமருதூர்

அனுபவம்:நான் பார்த்த கொள்ளிவாய்ப் பிசாசு

Read More
Pg 6-7 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்
27th August 2026 by Periyar Pinju

16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த ‘பெரியார் பிஞ்சு’ ஷிவாங்க்! (பெருமிதம்-1)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p