• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கண்ணகி நகருக்குப் பெருமை சேர்க்கும் “கார்த்திகா எக்ஸ்பிரஸ்”

pijkj
நவம்பர் 2025பிஞ்சு 2025

சாக்

ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், அந்த அணியின் துணை கேப்டனான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மூன்றாம் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் (Asian Youth Games 2025) பஹ்ரைன் நாட்டின் மனமா நகரில் நடைபெற்று வருகின்றன. 2013ஆம் ஆண்டில் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற பின், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடர் நடைபெறுகிறது. அதிகராப்பூர்வமாக அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் அக்டோபர் 31ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் தலா ஒரு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளனர்.

இதில் ஆடவர் அணியின் வெற்றியை விட, இந்திய மகளிர் கபடி அணியின் வெற்றி மிகவும் கவனிக்கத்தக்கதாகும். இந்த தொடரில் 4 லீக் போட்டிகள், 1 இறுதிப்போட்டி என 5 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா 75-21 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இந்த தொடரில் 5 போட்டிகளில் மொத்தம் 312 புள்ளிகளை வென்ற இந்திய அணி, வெறும் 89 புள்ளிகளை மட்டுமே எதிரணியிடம் இழந்திருப்பது மகளிர் அணியின் சிறப்பை எடுத்து எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றியே சிறப்பு என்றாலும், அதன் துணை கேப்டன் தமிழரான கார்த்திகா என்பது தனிச்சிறப்பு.

கார்த்திகா சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். சென்னை நகரின் விரிவாக்கத்திற்காக, பெரும்பாக்கம், கண்ணகி நகர் பகுதிகளில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் உருவாக்கட்டு, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட பகுதியாகும். அப்படிப்பட்ட மிகவும் பின்தங்கிய சமூகச் சூழலில் இருந்து, இந்திய அணியின் துணை கேப்டனாக இளம் வயதிலேயே ஒரு 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல. ஏனெனில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்து இந்திய 18 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்திருப்பவர் கார்த்திகா என்பதே சான்று.

கார்த்திகாவின் தந்தை கட்டட தொழிலாளியாவார். முன்பு தூய்மைப் பணியாளராக இருந்த இவரது தாயார், தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கார்த்திகா தனது சிறுவயதில் இருந்தே கபடியின் மீது ஆர்வம் கொண்டவர். 6ஆம் வகுப்பில் இருந்தே கடும் பயிற்சியிலும் ஈடுபட்டு விளையாடி வருகிறார். தமிழ்நாடு மகளிர் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இவரைப் பொதுவாக அணியில் ‘கார்த்திகா எக்ஸ்பிரஸ்‘ என்றே அழைப்பார்களாம். அந்தளவிற்கு வேகமாக செயல்படக்கூடியவராகக் கார்த்திகா இருக்கிறார்.

கண்ணகி நகர் என்றாலே அது ‘குற்றவாளிகளின் கூடாரம்’ என்பது போன்ற மாயைகள் பொதுதளத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்களில் கூட பல தவறான காட்சிப்படுத்துதல்களைப் பார்க்க முடியும். “நானும் எனது அணியும் சேர்ந்து கபடியில் தொடர் வெற்றிகளைக் குவித்து கண்ணகி நகர் குறித்து பேச்சுக்களைப் போக்குவோம்; கண்ணகி நகரை ஒரு பிராண்டாக மாற்றுவதே எனது முதன்மையான நோக்கம்” என்று சூளுரைத்த அவரது சமூக நோக்கு இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ளது. கண்ணகி நகரில் மகளிர் கபடி அணி ஒன்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த கபடி வீராங்கனைகள் அனைவருக்கும் பயிற்சியாளர் கே.ராஜி ஆவார். இன்னும் பல கார்த்திகாக்கள் உருவாகட்டும்! <

0
இமயமலை மோனல்  (HIMALAYAN MONAL) (பறவைகள் அறிவோம்-21)இமயமலை மோனல் (HIMALAYAN MONAL) (பறவைகள் அறிவோம்-21)2nd September 2026
எழுதும் திறன்(சிறார் பாடல்)2nd September 2026எழுதும் திறன்(சிறார் பாடல்)

மற்ற படைப்புகள்

Screenshot 2026-08-25 110022
அறிவியல்செப்டம்பர் 2025பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

அறிவின் விரிவு-14 சாட் ஜிபிடியை புத்திசாலித்தனம் பயன்படுத்துவோமா சைபர் வினோத் ஆறுமுகம்

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

உழைப்பே உயர்வு!

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
3644
சிறார் பாடல்நவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

எழுதும் திறன்(சிறார் பாடல்)

Read More
Pg 22-23 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025மனிதன்
2nd September 2026 by Periyar Pinju

கற்ற கல்வியின் பலன்: ஓர் உண்மைக் கதை (மனிதன் )

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுடிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p