புரட்சியாளர் இவர்போலே …

பெரியார் போலே எவர் பிறப்பார்
பூமியில் இனிமேலே!
புரட்சி யாளர் இவர்போலே
போராட யாருளரே!
வைக்கம் வீரர் சீர்திருத்த
வேங்கை குறிக் கோளர்
இமைக்காமல் அஞ்சாமை சளைக்காமல்
எவருழைத்தார் பெரியாராய்?
கொதித்தார் கடவுளர் பெயரால்
கொழுத்தோர் ஆதிக்கம்
சிதைத்தார் தெய்வம் துதிப்போரின்
துயரத்தைத் துடைத்தார்!
சூழ்ந்த மடமை அறியாமை
சுட்டெரித்தார் ஈ.வெ.ரா.
தாழ்ந்த தொல்குடியை நிமிர்த்திட்ட
சுடரோன் நம் பெரியார்!
தொண்ணூற்றி அய்ந்து அகவையிலும்
துவளாமல் உழைத்தாரே!
மண்ணகத்தே சாதித் தளையறுத்த
மாமனிதர் பெரியார்!
சமத்துவம் சமுதாயச் சீர்த்திருத்தம்
சாதித்த ஞானமகன்!
இமயமென உயர்ந்திட்ட நாத்திகர்
இனமானச் சிங்கமன்றோ!!<
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை




