• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கொம்பன் ஆந்தைகள் ஒரு தன்னனுபவம்(நூல் மதிப்புரை )

26
டிசம்பர் 2025நூல் மதிப்புரைபிஞ்சு 2025

தென்றால் மணிமேகலை

புத்தகத்தின் பெயர்: கொம்பன் ஆந்தைகள் ஒரு தன்னனுபவம்
நூலாசிரியர்: த.முருகவேள்
பக்கங்கள்: 20
நன்கொடை: 100
வெளியீடு:
உயிர் பதிப்பகம்,
எண்: 4, 5வது தெரு, சக்தி கணபதி நகர்,
திருவொற்றியூர், சென்னை – 19
செல் : 9840364783

பகலில் கண் தெரியாது.
இரவில் கண் தெரியும் அது என்ன?
ஆம் ! ஆந்தை தான் சரியான விடை

 

மீன் ஆந்தை (fish owl), கோட்டான் (whimbrel) வன ஆந்தை என 200 வகை ஆந்தைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கொம்பன் ஆந்தை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆந்தையும் அவற்றின் அளவு நிறம், வாழ்விடத்தைப் பொறுத்து வேறுபடும்.

பேராசிரியர் த.முருகவேல் அவர்கள் கொம்பன் ஆந்தைகள் பற்றிய தன்னுடைய அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி இருக்காங்க. அதுபற்றித்தான் நான் உங்களுக்கு சொல்லப் போறேன்.

நன்மங்கலம் காட்டுப்பகுதி அனைவரும் அறிந்ததே! இந்தக் காட்டுப்பகுதியில் 50 வகையான பறவைகள், சிற்றுயிர்கள். கொறி விலங்குகள் வாழ்கின்றன.

பலவகையான பறவை இனங்கள் இருந்தாலும் இரவாடியான கொம்பன் ஆந்தையே முதன்மையான பறவையாக அங்கு வாழ்கிறது.

வலுவான கால்கள், இரவிலும் ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்ட கண்கள், இரையை வீழ்த்தும் திறன் பெற்ற, பலம் பொருந்திய அலகுகள் என வேட்டையாடி, இரையைப் பிடிக்கும் திறனைக் கொண்டிருப்பதால் வான்வெளியின் புலிகள் என்று கொம்பன் ஆந்தைகள் கருதப்படுகின்றன.

ஆந்தை இனங்களில் மிகப் பெரியதாக உள்ளவை கொம்பன் ஆந்தைகள். நல்ல பழுப்பு மஞ்சள் நிறத்தில் அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிற அடர்த்தியான வரிகள் இதன் உடலில் காணப்படுகின்றன. தலையின் மேல் கொம்புகள் போன்ற இறகுக் கற்றைகள் மேல் நோக்கி நீண்டிருப்பதால் தான், இந்த ஆந்தைக்கு “கொம்பன் ஆந்தை” என்று பெயர்.

கண்கள் உருண்டை வடிவத்தில் பெரிதாக மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

பச்சோந்தி எப்படி இடத்திற்கு ஏற்றாற்போல் நிறம் மாற்றிக் கொள்ளுமோ, அது போல ஆந்தைகள் வேட்டையாடும் நேரத்திற்கும், கண்கள் கருவிழி நிறத்திற்கும் தொடர்பு உள்ளதாக சிலர் கூறினாலும் ஆராய்ச்சியின் மூலமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் இந்த வகை ஆந்தைகள் அந்திமாலையில் இரவில் அரிதாகப் பகலிலும் வேட்டையாடுகின்றன. பகல் பொழுதில் பாறையில் இடுக்குகளிலும் மாலையில் சூரிய ஒளியின் தாக்கம் குறையும் போதும் சுறுசுறுப்பாக வெளியில் வருவதை காணலாம். மேகமூட்டமான சமயங்களில் வழக்கமான நேரத்தை விட முன்பாகவே வெளியில் வந்து விடும். அது போன்ற நேரத்தில் ஆந்தைகள் எலிகளையே உண்டாலும் பாம்புகள், தவளைகள், வண்டுகள் போன்ற பூச்சிகளையும் உண்ணுகின்றன என்பதை அவை உண்டு செறித்துப் பின் உமிழ்ந்து இருக்கும் பெல்லெட்சை (pellets) எடுத்து உதிர்த்துப் பார்த்து ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொம்பன் ஆந்தைகள் மழைக்காலம் முடியும் நேரத்தில் முட்டை இடும். அவை பெரிதாகக் கூண்டுகள் கட்டாமல் நிழலான பாறைகள் மேல் முட்டைகள் இடுகின்றன அல்லது பெரிய முட்புதர், மரத்தின் கீழ் கூட முட்டை இடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன; நான்கு முட்டைகள் அல்லது 2, 3 முட்டைகள் தான் இடும்.

கொம்பன் ஆந்தைகள் முட்டைகளை ஒரே நாளில் இடுவதில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடும். எனவே குஞ்சுகள் பொறிப்பதும் தாமதமாகும்.

முட்டைகள் இடும்போது அந்த இடத்தை மூர்க்கமாகப் பாதுகாக்கும். ஒரு ஆந்தை அடைகாக்கும் போது பறவைகளோ மனிதர்களோ வேறு எந்த உயிரினமோ சென்றால் கடுமையாகத் தாக்கும் திறன் கொண்டது.

தாய் என்றாலே தன் குழந்தையை பாதுகாக்கும் ஆற்றல் உடையவள் இதில் தன் குழந்தைக்கு ஆபத்து என்றால் எந்த தாயாவது பார்த்துக் கொண்டிருப்பாரா? பறவைகளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?.

இது போன்று கொம்பன் ஆந்தைகளைப் பற்றி பல்வேறு தகவல்களைப் பேராசிரியர் தா.முருகவேல் எழுதியுள்ளார்.

அந்தப்புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவும்.<

2
இவையெல்லாம் உண்மையல்ல(நினைவில் நிறுத்துவோம்)இவையெல்லாம் உண்மையல்ல(நினைவில் நிறுத்துவோம்)7th September 2026
எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள் விடைகள்7th September 2026

மற்ற படைப்புகள்

குறுக்கெழுத்துப் போட்டிடிசம்பர் 2025பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குக்கெழுத்துப் போட்டி விடை

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

புத்துணர்ச்சி பெறவே கோடை விடுமுறை! புரிந்து செயல்படுங்கள்!

Read More
1591
அக்டோபர் 2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

கொஞ்சம் ‘ஹெல்ப்’ பண்ணுங்க!(கதை கேளு கதை கேளு)

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

டிங் டாங் பாட்டி

Read More
122
ஓவியம் வரையலாம்நவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

ரோஜா பூந்தொட்டி(ஓவியம் வரையலாம்)

Read More
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

புள்ளிகளை இணையுங்கள்! நீந்துங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p