உன் அருமை எது சொல்?
பூ என்றால் மணக்கும்;
பொன் என்றால் சுடரும்;
மா1என்றால் இனிக்கும்!
உன் அருமை எது சொல்!
புலி என்றால் பாயும்;
புள்2ளென்றால் பறக்கும்;
அரி3என்றால் முழங்கும்!
உன் அரிய செயல்சொல்!
கதிர்4 ஈயும் வெளிச்சம்;
கடல் ஈயும் முத்து;
முகில்5 ஈயும் மாரி!
உன் ஈகை6 எது சொல்!
– முனைவர் முரசு நெடுமாறன்
சொல் விளக்கம்
- மா : மாம்பழம்
- புள் : பறவை
- அரி : சிங்கம்
- கதிர் : சூரியன்
- முகில் : மேகம்
- ஈகை : கொடை




