• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நம்மால் முடியும்!(இதுதான் ஆங்கிலம்)

9
இதுதான் ஆங்கிலம்ஜனவரி 2026பிஞ்சு 2026

எம் ஆர் மனோகர்

பெரியார் பிஞ்சுகளே! ஆறு இதழ்கள் மூலம் ஆங்கில  மொழி சார்ந்த பலவற்றைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இந்த ஏழாவது இதழ் உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோகும். உன்னிப்பாக, கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொள்ளுங்கள். ரெடியா?

வினைச்சொற்கள் (VERBS)

செயல்களைக் குறிக்கும் சொற்கள் verbs. இதில் இரண்டு வகைகள் – Regular verbs; Irregular verbs. ed சேர்த்து கடந்த காலத்தைக் குறிப்பிட முடிந்தால் அவை Regular Verbs. உதாரணமாக – walk / walked; talk / talked; push / pushed இப்படிப் பல. ஆனால் வேறு பல verb களுக்கு ed சேர்த்து விட முடியாது. அவற்றின் வடிவம் வித்தியாசமாக இருக்கும். அவை யாவும் Irregular verbs.  உதாரணமாக – drink கடந்த காலத்திற்கு ed சேர்த்து  drinked என்று எழுத முடியுமா? drank தான் சரி. அது மட்டுமா?  Past Participle – drunk. (drink – drank – drunk மூன்றுமே வித்தியாசமானவை) இன்னொரு உதாரணம் – draw – drew – drawn;  sing; sang; sung இப்படிப் பல.

சில verb களில்  இரண்டாவதும் மூன்றாவதும் ஒரே மாதிரி இருக்கும். bring – brought – brought (broughted  அல்ல). catch – caught – caught (caughted அல்ல). இவையும் irregular verbs தான்.

இன்னொரு வகை – முதலாவதும் மூன்றாவதும் ஒன்றாக இருக்கும். இரண்டாவது மட்டும் வித்தியாசமாக இருக்கும்.  come – came – come. become – became – become. I come by bus (present); I came yesterday (Past); I had come when the bell rang (Past Participle) (மணியடித்த போதே நான் வந்து விட்டிருந்தேன்).

மற்றொரு வகையில் மூன்றுமே ஒரே மாதிரி இருக்கும். cut – cut – cut; put – put – put. கட்டட் அல்ல. புட்டட் அல்ல. ed சேர்க்கவே கூடாது.

என்ன செய்யலாம் பிஞ்சுகளே? தமிழில் இப்படிப்பட்ட சிக்கல்களே இல்லை. அதனால் தான் வடநாட்டுக்காரர்கள் சுலபமாக நம் தமிழைக் கற்றுக்கொண்டு ஜாலியாக ஒடிவிடுகிறார்கள். நமக்குச் சிரமமாக இருக்கிறது, ஆனாலும் நாம் கற்றுக் கொண்டே தீருவோம் வாருங்கள். எவராலும் முடியாதது நம்மால் முடியும் அல்லவா?

துணை வினைச் சொற்கள் (Helping Verbs)

கண்ணுக்குத் தெரியாத செயல்கள் Helping Verbs. உதாரணமாக – “I am tired” களைப்பாக இருக்கிறீர்கள். அந்த இருப்பதைக் குறிக்கும் “am” தான் helping verb.

“Be quiet”! – அமைதியாக இரு. இங்கேயும் இருக்கச் சொல்லும் வார்த்தை ‘be’ ஒரு helping verb.

Helping verbs களில் மூன்று வகைகள் உண்டு. ‘be’ verb, ‘do’ verb’, ‘have’ verb.

‘be’ verbs இல் எட்டு வகை:

be/ being/ been/ am /is /was /are /were. ‘do’ verbs இல் அய்ந்து வகை: do /doing /does /did /done; ‘have’ verbs இல் நான்கு வகை: have /having /has /had.

உதாரணமாக – I have a pen. (Pen வைத்திருப்பதே கண்ணுக்குத் தெரியாத செயல். எனவே வினைச்சொல் – verb. “Do your homework”. வீட்டுப் பாடத்தைச் செய். இந்தச் “செய்வது” ஒரு செயல். எனவே வினைச்சொல் – verb.

இனி மேற்கண்ட அத்தனை helping verb களையும் வாக்கியங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம் வாருங்கள். (8+5+4=17 வாக்கியங்கள் வர வேண்டும்).

  1. Don’t be idle.
  2. You are being watched.
  3. I had been to Mumbai.
  4. I am busy now.
  5. She is good at dancing.
  6. He was punished.
  7. You are very clever.
  8. We were playing chess. – இவை “be’ verb இன் 8 வகை.
  9. Do your work silently.
  10. Doing nothing is boring.
  11. She does her home work regularly.
  12. I did it quickly.
  13. We have done nothing wrong. – இவை ‘do’ verb இன் 5 வகை.
  14. I have a calculator.
  15. She is proud of having a lap–top.
  16. He has a smart watch.
  17. We had three cars long ago. இவை ‘have verb இன் 4 வகை.

‘எங்களால் முடியும்’ என்ற மன உறுதியோடு இவற்றையெல்லாம் ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். சிரமப்பட்டால் மட்டுமே கிடைப்பது தானே அறிவு?<

(அடுத்த மாதம் இன்னுன் நிறைய!)

 

0
துலிப் பூ(Dulip)(ஓவியம் வரையலாம்)துலிப் பூ(Dulip)(ஓவியம் வரையலாம்)7th September 2026
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை7th September 2026

மற்ற படைப்புகள்

16
நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

ஜாதியற்ற மனிதன்(நம்ம ஊர் பாட்டி-7)

Read More
Pinju February 2026 – Pages-2
பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

நம் அண்ணா (அறிஞ்ர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3)

Read More
36
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)

Read More
25
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

வெறுப்பற்ற கல்வி வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
Pg 14-15 copy
பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

மின் சிட்டு MINIVET(பறவைகள் அறிவோம்-24)

Read More
சுடோகுஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p