• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

டி.வி.எஸ் 50 ஓட்டி வந்த பாட்டி!(நம்ம ஊர் பாட்டி-5)

31
ஜனவரி 2026நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026

எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காலை 8.30 மணி. பொய்யாமணியில்   கடைத் தெருவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பாட்டி பக்கத்து ஊர் வங்கிக்குப் போக பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

தன் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளி இருக்கும் மேரியின் மகள் ஏஞ்சல் வேக வேகமாக பேருந்து  நிறுத்தத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள். அதற்குள் அவள்  ஏறிப் போக வேண்டிய தனியார் பேருந்து வேகமாக வந்து, நிற்காமல் சென்று விட்டது.

இந்தப் பேருந்தை விட்டால் இன்றும் ஒரு மணி நேரம் கழித்துதான் அடுத்த பஸ்.

தூரத்தில் பேருந்து வருவதைப் பார்த்து விட்டுத்தான் ஏஞ்சல் ஓடோடி வந்தாள். ஆனாலும், கூட்டம் அதிகம் இருந்ததால் பேருந்து நிற்காமல் போய்விட்டது.

ஏஞ்சல் அழுது கொண்டே பேருந்து நிறுத்தத்தில் நின்றாள். இதையெல்லாம் பார்த்த பாட்டி அவள் அருகே சென்றாள்.

“என்னாச்சு…. இந்த பஸ்சு நிற்காமல் போயிடுச்சேன்னு அழறியா?.. அடுத்த பஸ்சு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகுது…” என ஆறுதல் சொன்னார் பாட்டி.

“பாட்டி… இன்னைக்குக் கணக்கு பரிட்சை – அதுவும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. 9:15 மணிக்கு கொஸ்டீன் பேப்பர் குடுத்துருவாங்க. இங்கயே மணி 8:30 ஆயிடுச்சு. பஸ் ஏறிப்போனாலே அரை மணி நேரமாகும். அடுத்த  பஸ் 9:00 மணிக்குத்தான் வரும். அய்யோ… அம்மா நேரமாச்சுமான்னு வீட்டுல அம்மாகிட்ட கெஞ்சிக்கிட்டிருந்தேன். தோ…தோன்னு டிபன் செய்யிறதுக்கு லேட்டாயிடுச்சு. அதுக்கப்புறம் தலை சீவி கிளம்பி வரதுக்குள்ள பஸ்சு நிக்காமல் போயிருச்சு. நான்தான் ஸ்கூல் ஃபஸ்ட்டு வருவேன்னு எல்லார்கிட்டேயும் சவால் விட்டேன். போச்சு… போச்சு… எல்லாமே போச்சு..” என புலம்பித் தள்ளினாள் ஏஞ்சல்..

“ஏஞ்சல் நீ 9:10க்கு பள்ளிக்கூடத்துலே இருக்கணும். அவ்வளவுதானே! ஒரு நிமிடம் இரு, இதோ வந்துடுறேன்” என்று சொல்லி சற்றுதூரம் போன பாட்டி… ஒரு டி.விஎஸ் 50 வண்டியை ஒட்டியபடி வந்தார்.

“ஏஞ்சல் வா. வா! சீக்கிரம் இதுல ஏறி உக்காரு.” என்றார்.

ஏஞ்சலுக்கு எதுவுமே புரியவில்லை.

‘வயசான பாட்டி… வண்டி ஓட்டுறதே ஆச்சரியம். அதுவும் இந்த இடத்தில பாட்டியை நம்பி யாரு வண்டி குடுத்து உதவி இருப்பாங்க…?’ எனப் பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்கூடம் போய் சேர்ந்து பரிட்சை எழுதுனாப் போதும்னு நினைச்சுக்கிட்டே. பின்னால் ஏறி உட்கார்ந்தாள் ஏஞ்சல்.

“உன் பள்ளிக்கூடம் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியாது. நீதான் வழி சொல்லணும்” என்றார் பாட்டி.

“ஒரே நேராப் போங்க” என்றாள் ஏஞ்சல்.

பறந்தது டி.வி.எஸ். 50. பாட்டி வண்டி ஓட்டிய வேகத்தைப் பார்த்து மிரண்டு போனாள் ஏஞ்சல்.

சற்று நேரத்தில் பள்ளிக்கூட வாசலில் நின்றது வண்டி.

“மணி என்ன ஆச்சு?” பாட்டி.

“மணி ஒன்பது அஞ்சுதான் ஆச்சு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பாட்டி” என்றாள் ஏஞ்சல்.

“கவலையில்லாம பரிட்சை எழுது கண்ணு, நான் வரட்டுமா.”

“பை… பாட்டி” என்ற படி பள்ளிக்கூடத்தின் உள்ளே ஓடினாள் ஏஞ்சல்.

தேர்வை வெகு சிறப்பாக எழுதி முடித்து  மகிழ்ச்சியாக  வகுப்பறையை விட்டு  வெளியில் வந்தாள் ஏஞ்சல்.

வீட்டுக்குத் திரும்பப் பேருந்து உடனே கிடைத்துவிட்டது. உச்சி வெயில் நேரத்தில் கடைவீதியில் பேருந்தை விட்டு இறங்கினாள்.

கடை வீதியில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரே கூட்டம். கவுஸ் பாய் கறிக் கடையில் இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு  பெரிய கூட்டம் என எட்டிப் பார்த்தாள்.

கூட்டத்தின் நடுவில் நம்ம பாட்டி. ஒரு பக்கம் கறிக்கடை கவுஸ் பாய்; இன்னொரு பக்கம் துணிக்கடைக்காரர் நிக்கிறாரு. நடுவுல்ல டி.வி.எஸ்.50.

தன்னைச் சரியான நேரத்துக்குக் கொண்டு போய் தேர்வு எழுத உதவிய பாட்டிக்கு ஏதோ சிக்கல் என்பது மட்டும் ஏஞ்சலுக்குப் புரிந்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால்  போனாள்.

“நான் சொல்றதுதான் உண்மை. அதுக்கு தான் வண்டியை எடுத்தேன். பள்ளிக்கூடம் போயி இந்தப் பிள்ளையை விட்டுட்டுத் திரும்பும் போது பெட்ரோல் இல்லாம வண்டி நின்னு போச்சு. அதான் தள்ளிக்கிட்டு வந்தேன்” என்று பாட்டி சொன்னார்.

“பார்றா… இந்த கிழவியை… இதுவரைக்கும் உன்னை நான் இந்த  ஏரியாவுலேயே பாத்ததில்லே… வண்டியைத் திருடிக்கிட்டுப் போயிட்டு பெட்ரோல் இல்லேன்னு உடனே திரும்பக் கொண்டாந்து விட்டே. நாங்க உன்னைப் பாத்ததும்… ஒரு பொண்ணு பரிட்சை எழுதப் போகணும்,  மணி ஆயிடுச்சுன்னு துடிச்சுது, அழுதது நான் கொண்டு போய் விட்டேன்னு யாருகிட்டே கதை உடுறே. இதுல வேற இந்தக் கிழவி வண்டி ஓட்டுனேன்னு பொய் சொல்லுது. இது நம்புற மாதிரியா இருக்கு” என்றார் கவுஸ் பாய்.

“பாய்… உடனே ஸ்டேஷனுக்குப் போயி போலீஸ்ல சொல்லுங்க.  பாட்டிய கூட்டிக்கிட்டுப் போயி முட்டிக்கு முட்டி தட்டுனாங்கன்னா.. பாட்டி உண்மையைக் கக்கிடப் போகுது” என்றார் துணிக்கடைக்காரர்.

“அதாங்க சரி. இப்படி திருடுற கூட்டமே இருக்குங்க. இந்தக் கிழவி தனி ஆளு கிடையாது  கூட்டாளிங்க இருப்பாங்க. நல்ல வேளை பெட்ரோல் மட்டும் நிறைய இருந்தது. வண்டியைத் தள்ளிக்கிட்டுப் போயிருக்கும் கிழவி” என்றார் மற்றொருவர்.

“நிறுத்துங்க! நான்தான் பரிட்சை எழுதப்போன பொண்ணு. 8:30 மணி பஸ்சைப் புடிக்க ஓடி வந்தும் புடிக்க முடியலை. பஸ்சை நிறுத்தாமப் போயிட்டாங்க.

எங்க ஊரு பாட்டி இவங்க. புதுசா வந்திருக்காங்க. பரிட்சைக்கு நேரமாச்சுன்னு நான் அழுததைப் பார்த்து… சாவியோட  உங்க கடை வாசல்லே நின்ன வண்டிய எடுத்துக்கிட்டு வந்து என்னைக் கொண்டு போய் பள்ளிக் கூடத்திலே விட்டாங்க. அதுதான் உண்மை” என்று நடந்ததை விளக்கினாள் ஏஞ்சல்.

“விட்டுட்டுத் திரும்பி வரும் போது பெட்ரோல் தீந்து போனதுனாலே தள்ளிக்  கொண்டு வய்துவிட்டேன். வர்ற வழியில பெட்ரோல் பங்க்கே இல்லை. இதான் நடந்துது!” என்றார் பாட்டி.

“பாப்பா! நீ ஏட்டு ஆரோக்கியசாமி மக தானே? நம்ம கடை கஸ்டமர் பொண்ணு. உனக்குத்தான் உதவி செய்துதா இந்தப் பாட்டி?” என்றார் கவுஸ்பாய்.

“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப் போற பொண்ணுக்கு உதவி செய்தது.  தப்பா? அதுக்காகத்தான் சாவியோட  நின்ன வண்டியைக் கொண்டு போனேன்.”

“ஏங்க பாட்டியம்மா எடுத்துக்கிட்டு போன வண்டியைத் திரும்பக் கொண்டு வந்து நிறுத்துனதுக்கே இவ்வளவு பேரு சேர்ந்து கேள்வி கேக்குறீங்களே… பரிட்சை நேரத்திலே… தனியார் பஸ்ஸை நிறுத்தாமல் போறாங்களே… அவங்களை நாம எல்லாரும் சேர்ந்து நிறுத்தச் சொல்லி கேக்கணுமா இல்லியா?” என்றாள் ஏஞ்சல்.

“அதைத் தட்டிக் கேட்டு எல்லா பஸ்சும் ஸ்டாப்பிங்ல முறையா நின்னு போக வழி செய்யுங்க.

பாய்! உங்க வண்டியைச் சொல்லாம எடுத்துக்கிட்டுப் போனதுக்கு   மன்னிச்சுக்குங்க. திடீர்னு வண்டி காணோமின்னா யாரா இருந்தாலும் கோவம் வரத்தான் செய்யும். அவசரத்துல அப்படிச் செய்துட்டேன். வரட்டுமா?…

வா… கண்ணு போலாம்” என்றார் பாட்டி.

சரியான நேரத்தில் தேர்வு எழுத பாட்டி செய்த செயலை எண்ணி மகிழ்ந்த ஏஞ்சல் பாட்டியின் கையை இறுகப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினாள்.

கூட்டம் முழுவதும் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றது.<

(பாட்டியின் லூட்டி தொடரும்)

 

2
உண்டியல்! (சிறார் பாடல்)8th September 2026
திருக்குறள் அரசியல் - பொருட்பால்8th September 2026திருக்குறள்  அரசியல் - பொருட்பால்

மற்ற படைப்புகள்

36
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)

Read More
1567
நவம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி-3 அழிவைத்த ‘செல்’லு!

Read More
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

Read More
சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

சின்னககைச் சித்திரம்

Read More
26
ஜனவரி 2026பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

மீன் கொத்தி (KING FISHER) (பறவைகள் அறிவோம்)

Read More
1
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

2026 பொங்கல் நல்வாழ்த்து!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p