திருக்குறள் அரசியல் – பொருட்பால்

அதிகாரம் 51 – குறள் எண் 504
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.”
ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, அவனுடைய குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியாக இருப்பவை எவை என்று கண்டறிந்து அதன் பின்னர் அப்படி மிகுதியாக இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் அவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்து தெளிவு கொள்ளுதல் வேண்டும்.



