• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

ஜாதி ரத்தம்? (நம்ம ஊர் பாட்டி)

5
நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026பிப்ரவரி 2026

மாலை நேரம்…

பாட்டி தெரு முனையில் இருக்கும் கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். பாட்டி வீட்டின் எதிரில் இருக்கும் மரத்தடியில் சிறுவர்கள் அப்புவும், அகிலாவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததுமே குழந்தைகளுக்கு ஏதோ பிரச்சனை என்பதைப் புரிந்து கொண்டார் பாட்டி. தான் பொருள் வாங்கி வந்த பையைத் திண்ணையில் வைத்து விட்டு, “என்ன குட்டீஸ்… என்ன ஆச்சு? ஏன் இப்படி கப்பல் கவுந்து போன மாதிரி கவலையா உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டபடி அவர்களின் அருகில் சென்றார்.

“பாட்டி! நானும் அப்புவும், பக்கத்துத் தெருவுல எங்களோட பள்ளிக்கூடத்துல… எங்க கிளாஸ்ல படிக்கிற ஆனந்து, கீதா, மாலா, ரவி இவங்க கூட சேர்ந்து பெரிய புளியமரத்து அடியில ஜாலியா விளையாடிக்கிட்டிருந்தோம்” என்றாள் அகிலா.

“அந்த நேரம்… ஆனந்தோட மாமா பெரிய மீசைக்காரரு வந்து… டேய்! யார்டா நீங்கல்லாம்… ‘இங்க எதுக்குடா வந்தீங்க’ன்னு மிரட்டுனாரு. ‘இவங்க எல்லாம் எங்க கூட ஒண்ணா படிக்கிறாங்க. அதனால விளையாட வந்தோம்’னு சொன்னேன்” என்றான் அப்பு.

“அதுக்கு அந்த மீசைக்காரரு; எங்க பசங்களைப் பாத்தியா… கையில பச்சைக் கலர் கயிறு கட்டியிருக்காங்க. இவங்க எல்லாம் எங்க ஜாதி. பக்கத்துத் தெருப் பசங்க நீங்க, இங்க வந்து இவங்க கூட விளையாடக் கூடாது. பள்ளிக்கூடம் போனமா பாடம் படிச்சோமான்னு போயிடணும், புரியுதா? ஓடு…ஓடு… உங்க தெருவுல போய் விளையாடுங்க… அப்படின்னு எங்க ரெண்டு பேரையும் விரட்டி விட்டுட்டாரு பாட்டி!” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கண்கலங்கியபடி சொன்னாள் அகிலா.

“அடக் கொடுமையே! ஜாதி ஒழியணும். மக்கள் எல்லாரும் சமத்துவமா வாழணும்னு சொல்ற இந்தக் காலத்துல இப்படி ஒரு மனுஷனா… சீ! இப்படி ஒரு மிருகமா?” என்று கோபப்பட்டார் பாட்டி.

“பாட்டி! அது மட்டுமில்லே… ‘உங்க பள்ளிக்கூடத்தில வேலை செய்த சத்துணவு ஆயாவையே மாத்திட்டோம் தெரியுமா?’ மரியாதையா போயிடுங்கண்னு கோபமா சொன்னாரு” என்றான் அப்பு.

“சரி… சரி… விடுங்க கண்ணுகளா! அதை நான் பாத்துக்கிறேன்.

உலகம்… இன்னைக்கு எவ்வளவோ மாறின பிறகும், மாறாத சில மனிதர்கள் இன்னும் இருக்கிறதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.”

“பாட்டி! அந்தப் பசங்க கட்டியிருக்கிற கயிறு மாதிரியே நாங்களும் ஒரு கயிறு வாங்கிக் கட்டிக்கிட்டா… நாங்களும் அவங்க ஜாதியா மாறிடலாமா? என்றான் அப்பு.

“கலர் கயிறு வாங்கிக் கையில கட்டிக்கிட்டாலும் சரி, கலர் பெயின்ட் வாங்கி உடம்பு முழுக்க அடிச்சிக்கிட்டாலும் சரி… இல்ல… உடம்புக்குக் குறுக்கே ஒரு கயிறைக் கட்டிக்கிட்டாலும் சரி… யாரும் ஜாதி மாற முடியாது.

நாமளா விரும்பி ஒரு ஜாதியில பிறக்கல. இந்தக் கேவலமான ஜாதி, உலகத்திலே வேற எந்த நாட்டிலேயும் கிடையாது. இதை உங்கள மாதிரி குழந்தைகள் புரிஞ்சிக்கிட்டு எல்லோரையும் மனிதனாப் பார்க்கிற பக்குவத்தை வளர்த்துக்கணும்” என்றார் பாட்டி.

“ஏன் பாட்டி! இந்த இழிவுபடுத்துற ஜாதிய எல்லாம் யாரு கண்டுபுடிச்சாங்க? என்று கேட்டாள் அகிலா.”

“ஏற்றத்தாழ்வை உண்டாக்கி அடுத்த மனிதனை இழிவுபடுத்தற ஜாதிங்கிற படிநிலையை உழைக்காம ஊரை ஏமாத்தித் தின்ன நினைச்சவங்கதான் கண்டுபிடிச்சிருப்பாங்க. வேற யாரு வேலை மெனக்கட்டு இதைக் கண்டுபிடிப்பாங்க.

ஒரு மனுஷன் ஏழையா இருந்து பணக்காரனா ஆகலாம். கருப்பா இருந்து வெள்ளையாக் கூட மாறலாம். ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்துக்கு மாறலாம். ஆனா, பிறந்த ஜாதியில இருந்து வேறு ஜாதிக்கு மாறவே முடியாது! அதனாலதான், மனுஷனைப் பிரிச்சுவச்சு சில பேரு வயிறை வளர்க்கிற இந்த ஜாதியை ஒழிக்கணும்னு பல அறிவாளிங்க – சமூக அக்கறை உள்ளவங்க சொல்றாங்க.”

“ஆமா! பாட்டி அதை ஒழிக்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பாடுபடணும்.” என்றாள் அகிலா.

“அது ரொம்ப பெரிய வேலை. இப்ப இருட்டிப்போச்சு…  நீங்க வீட்டுக்குப் போங்க. அப்புறம் பேசலாம் அதைப்பற்றி” என்றார் பாட்டி.

குழந்தைகள் இருவரும் வீடு நோக்கி நடந்தார்கள்.

மறுநாள் காலை…

பொழுது விடிந்தது. வழக்கம் போல் பால் கொண்டு வரும் பலராமன் அந்த நேரத்துக்கு வரவில்லை. பால் பாத்திரத்தோடு திண்ணையில் அமர்ந்திருந்தார் பாட்டி.

நேரம் கடந்ததால் வேகவேகமாக வந்தார் பலராமன்.

“என்னப்பா… பால்ராமன் – ஏன் இவ்வளவு லேட்டு. நீ சீக்கிரம் எழுந்திருக்கலையா…?” எனக் கேலியாகக் கேட்டார் பாட்டி.

“அதெல்லாம் சரியான நேரத்தில் எழுந்து, பாலைக் கறந்து எடுத்துக்கிட்டு வந்துட்டேன். பக்கத்துத் தெருவுல இருக்காரே…  மீசைக்கார ஜெகநாதன்…  அவரு விடியக்காலைல அவரு தோட்டத்துல கிணறு வெட்டுற வேலைக்கு ஆளு வர்றாங்கண்ணு போனவரு… முப்பது அடி பள்ளத்துல தவறிவிழுந்துட்டாரு. மண்டையில அடிபட்டு இரத்தம் நிறையப் போயிடுச்சு.

அவரைப் பள்ளத்துல இருந்து தூக்கி ஆம்புலன்சை வரவழைச்சு, அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்ப உதவி செய்துட்டு வந்ததுல நேரமாயிடுச்சு.”

“யாரு…? ஜாதிப் பெருமை பேசிக்கிட்டு பள்ளிக்கூட சத்துணவு ஆயாவைக் கூட மாத்துனாரே அவரா?”

“அவரேதான்! பள்ளத்தில் விழுந்தவரைத் தூக்க ஊருல உள்ள எல்லா ஜாதிக்காரங்களும்தான் போனாங்க. நல்ல வேளை உயிரு போகல.”

“சரி… சரி… நீ பாலை ஊத்துப்பா!” என சிரித்தபடி கூறினார் பாட்டி.

“பாட்டி… ஆஸ்பத்திரிக்குப் போனவருக்கு அடிபட்டதுல இரத்தம் நிறைய போயிடுச்சாம். இப்ப அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுதாம். அந்த இரத்தம் கிடைக்குறது கஷ்டமாம். ஒரு சிலருக்குத்தான் அந்த இரத்தம் இருக்குமாம். அவரோட பெண்டாட்டி, புள்ளையெல்லாம் அந்த இரத்தம் யாருக்கு இருக்குன்னு தேடி அலையறாங்க.”

“ஏன்? ஜாதிப் பெருமை பேசுறவராச்சே… அவங்க ஜாதிக்காரங்க இரத்தம் தான் வேணும்னு சொல்லச் சொல்லேன் பார்க்கலாம்.

பால்ராமன்… மனிதர்களுக்கு ஜாதியை விட முக்கியமானது, ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டியது… அடுத்தவங்க மேலே அன்பும், மரியாதையும்தான். அது சரி… அவரை எந்த ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்கன்னு சொன்னே?”

“பக்கத்து ஊர்ல மெயின் ரோடுலே இருக்கே அரசாங்க ஆஸ்பத்திரி… அதுலதான சேர்த்திருக்காங்க,”

“அப்படியா! சரி…சரி! நீ கிளம்பு பால்ராமா” என்றபடி வீட்டின் உள்ளே போனார் பாட்டி.<

(பாட்டியின் லூட்டி தொடரும்)

 

2
கணிதப் புதிர் சுடோகு9th September 2026
திருக்குறள் துறவறவியல் - அறத்துப்பால்9th September 2026திருக்குறள் துறவறவியல் - அறத்துப்பால்

மற்ற படைப்புகள்

சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

சின்னககைச் சித்திரம்

Read More
3
டிசம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

ஆம்பிளைப் பிள்ளை தண்ணிக் குடம் தூக்கலாமா? நம்ம ஊசர் பாட்டி-4

Read More
சுடோகுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
Pg 14-15 copy
பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

மின் சிட்டு MINIVET(பறவைகள் அறிவோம்-24)

Read More
6
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

மேகாவும் குட்டி மேகமும்(கதை கேளு கதை கேளு)

Read More
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

உண்டியல்! (சிறார் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p