• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

விண்வெளிப் பயணங்கள் நமக்குக் கற்பிக்கும் பாடம் தோல்விகள் வீழ்த்துவதற்கு அல்ல!(அறிவியல் வளர்ச்சி)

j
அறிவியல் வளர்ச்சிபிஞ்சு 2026பிப்ரவரி 2026

சரவணா இராஜேந்தரன்

விண்வெளி ஆராய்ச்சிக்கு விண்கலங்களை அனுப்புவது மிகவும் அறைகூவலான ஒன்று. பல வெற்றிகளைக் குவித்து உலகையே வியக்க வைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது பயணங்களில் சில தோல்விகளையும் சந்தித்துள்ளது.

தோல்விகள் என்பவை நம்மை வீழ்த்துவதற்காக அல்ல; அடுத்த முறை இன்னும் பலமாகத் திரும்புவதற்கான பாடங்கள்.

சிறிய சறுக்கலும் பெரிய பாடமும்!

பட்டம் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். சில நேரம் பட்டம் அழகாக மேலே பறக்கும், சில சமயம் திடீரென நூல் அறுந்து எங்காவது போய் விழுந்துவிடும் அல்லவா? அதே போன்ற ஒரு நிகழ்வு தான் அண்மையில் நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் நடந்துள்ளது.

என்ன நடந்தது?

கடந்த ஜனவரி 12, 2026 அன்று, ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து PSLV-C62 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில் EOS-N1 என்ற முக்கியமான செயற்கைக் கோளுடன், மொத்தம் 16 சிறிய செயற்கைக் கோள்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.

உந்தூர்தி (Rocket – ராக்கெட்) கிளம்பும்போது நெருப்பைக் கக்கிக் கொண்டு வீரமாக மேலே சென்றது. முதல் இரண்டு நிலைகள் (Stages) வெற்றிகரமாக முடிந்தன. ஆனால், மூன்றாவது நிலையில் ராக்கெட் செல்லும்போது, அதன் பாதையில் ஒரு சிறிய தடுமாற்றம் (Anomaly) ஏற்பட்டது. இதனால், அந்தச் செயற்கைக்கோள்களைத் திட்டமிட்டவாறு நிலைநிறுத்த முடியாமல் போனது.

தோல்விக்கு என்ன காரணம்?

விண்வெளிக்கு ஒரு ராக்கெட்டை அனுப்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல: அதன் ஆயிரக்கணக்கான பாகங்கள் ஒன்றிணைந்து, மிகச் சரியான நேரத்தில் செயல்பட வேண்டிய ஓர் ஒரு ஒருங்கிணைவு. சில நேரங்களில் எல்லாம் சரியாக நடந்தாலும், ஏதோ ஒரு சிறிய தவறு அந்தப் பயணத்தைத் தோல்வியில் முடித்துவிடும். ஆனால், விஞ்ஞானிகள் இதைக் கண்டு வருந்துவதில்லை; மனம் தளர்வதில்லை. மாறாக, அதிலிருந்து பாடம் கற்கிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.வி டி-1 (SSLV-D1 – 2022)

குறைந்த எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உருவாக்கப்பட்ட சிறிய ராக்கெட் இது. இதில் சென்ற செயற்கைக் கோள்கள் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படாமல், ஒரு நீள்வட்டப் பாதையில் விழுந்ததால் அவை பூமியைச் சுற்ற முடியாமல் செயல் இழந்தன. உணரிழையில் (Sensor) கோளாறு காரணமாக இந்தத் தவறு நிகழ்ந்தது.

அந்தச் செயற்கைக்கோள் பயனில்லாமல் போனது.

இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்தது. அந்தத் தவறு எங்கே நடந்தது என்று ஆராய்ந்து, மீண்டும்  SSLV-D2 என்று பெயர் சூட்டிய ராக்கெட்டை மிக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா சாதித்துக் காட்டியது.

ஆரியபட்டா (Aryabhata – 1975)

இது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள். இது விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டாலும், நான்கு நாள்களிலேயே அதற்கு மின்சாரம் வழங்குவதில் (Power Supply) கோளாறு ஏற்பட்டது. இதனால், அய்ந்து நாட்களுக்குப் பிறகு அதிலிருந்து வரும் சமிக்ஞைகள் (Signals)நின்றுவிட்டன. இது ஒரு சிறிய தோல்வியாகக் கருதப்பட்டாலும், இந்தியா விண்வெளித் துறையில் கால்பதிக்க இதுவே அடித்தளமாக அமைந்தது.

சந்திரயான்-2 (Chandrayaan-2 – 2019)

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவதற்காக அனுப்பப்பட்ட இந்தத் திட்டம் ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்தது. ஆனால், நிலவின் மேற்பரப்புக்கு மிக அருகில் (2.1 கி.மீ உயரத்தில்) சென்றபோது, தரை இறங்கும் கருவியான ‘விக்ரம் லேண்டர்‘ கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது. இதனால் லேண்டர் மற்றும் ரோவர் செயல் இழந்தன. எனினும், நிலவைச் சுற்றி வந்த ‘ஆர்பிட்டர்‘ (Orbiter) இப்போதும் தகவல்களைத் தந்து கொண்டிருப்பது ஒரு வெற்றியாகும்.

உலகளவில்  தோல்விகள் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX – Starship):

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை வெடிக்கும்போதும் அவர் வருத்தப்படுவதில்லை. “ராக்கெட் வெடித்ததால் எங்களுக்கு நிறைய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன” என்று கூறி, அடுத்த முறை அதைவிட வலிமையான ராக்கெட்டை உருவாக்குகிறார்.

அப்பல்லோ 1 (Apollo 1):  அமெரிக்காவின் நிலவுப் பயணத் திட்டமான அப்பல்லோ ஆரம்பத்தில் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்தது. ஆனால், அந்தத் தவறிலிருந்து கற்ற பாடம்தான் மனிதனை முதன்முதலில் நிலவில் கால்வைக்க வைத்தது.

தோல்வியிலிருந்து நாம் கற்க வேண்டியவை

ஒருமுறை தோற்றுவிட்டதாலேயேல்லாம் முடிந்துவிடாது. தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிக்க 1,000 முறை தோற்றார். அவர் சொன்னார், “நான் தோற்கவில்லை, மின்விளக்கு ஏன் எரியவில்லை” என்பதற்கான 1,000 வழிகளைக் கண்டறிந்தேன்.

தோல்வி ஏன் ஏற்பட்டது என்று சிந்திப்பதுதான் உண்மையான அறிவியல். தவறு செய்துவிடுவோமோ என்று பயந்து புதிய முயற்சிகளைச் செய்யாமல் இருக்கக்கூடாது.

ராக்கெட் என்பது பல அடுக்குகளைக் கொண்ட ஒரு விண்ணூர்தி. இதன் மூன்றாவது அடுக்கு இயங்கும்போது, அதில் உள்ள எரிபொருள் அறையில் அழுத்தம் (Pressure) திடீரெனக் குறைந்துவிட்டது. இதனால் ராக்கெட்டினால் வேகமாகச் செல்ல முடியவில்லை. வேகம் குறைந்ததால், அது பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்ல முடியாமல் கடலில் விழுந்துவிட்டது.

ஒருமுறை தோல்வி அடைந்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் சோர்ந்து போவதில்லை. உதாரணமாக, சந்திரயான்-2 தோல்விக்குப் பின், தவறுகளைத் திருத்திக்கொண்டு சந்திரயான்-3 மூலம் நிலவில் வெற்றிகரமாகத் தரை இறங்கிச் சாதனை படைத்தனர்.

துல்லியமான திட்டம்:  விண்வெளியில் ஒரு சிறிய கணக்கீடு தவறினாலும், முழுத் திட்டமும் பாதிக்கப்படும் என்பதை இத்தோல்விகள் உணர்த்துகின்றன.

“வெற்றி என்பது இறுதி அல்ல, தோல்வி என்பது முடிவும் அல்ல; மேன்மேலும் தொடர வேண்டும் என்று துணிவதுதான் முக்கியம்.”<

 

0
சின்னககைச் சித்திரம்9th September 2026
வண்ணம் தீட்டி மகிழுங்கள்!9th September 2026

மற்ற படைப்புகள்

31
ஜனவரி 2026நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

டி.வி.எஸ் 50 ஓட்டி வந்த பாட்டி!(நம்ம ஊர் பாட்டி-5)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
12
பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

கலிபோர்னியா காண்டோர் (CALIFORNIA CONDOR) பறவைகள் அறிவோம்-25

Read More
25
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

வெறுப்பற்ற கல்வி வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
5
ஏப்ரல் 2026கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026
21st September 2026 by Periyar Pinju

காட்டுல் தீ! (கதை கேளு கதை கேளு)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p